செவ்வாய், 21 மார்ச், 2017

மனுதர்மம் புத்தகம் மனு தமிழ்நாடன்

aathi tamil aathi1956@gmail.com

15/9/16
பெறுநர்: எனக்கு
Palani Deepan
மநு தர்மம்.
மநு தர்மத்தை பலர் கேள்விப்பட்டிரு
ப்பார்கள்.
ஆனால் அதில் என்ன உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.
அதனை கண்ணாலும் பார்த்திருக்க மாட்டார்கள்.
மிக அரிதான புத்தகமொன்றை எங்கோ பழைய புத்தகக் கடையில் வாங்கியிருக்கிறேன்.
மிக அற்புதமாக மொழியாக்கம் என்று தெரியாமல் படைப்பிலக்கியவாதியான
தமிழ்நாடன் என்பவர் தமிழில் மொழியாக்கம் செய்து 1987-ஆம் ஆண்டு முதல்
பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
இன்றைய சட்ட நடைமுறைகள், சாட்சியங்கள் பற்றிய பலவரைமுறைகள்
அதிலிருப்பதைக் கண்டு வியந்தேன்.
இராமனுஜ ஆச்சாரியார் அவர்களால் ”மனு தரும சாஸ்திரம்” என்கிற பெயரில்
1934-ஆம் ஆண்டு தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அடுத்து 1961-ஆம் ஆண்டு இதேப் பெயரில் திருலோக சீதாராம் என்பவரால்
தமிழாக்கம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.
மநுவை ஒப்புக்கொண்டாலும், மறுத்தாலும் அதன் செல்வாக்கினைப் பிரித்திட
இந்து தர்மத்தில் வழியில்லை.
இந்த மநு தர்மம் வேதங்களுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், வேதங்களின்
பெருமையை மநு தர்மம் சொல்கிறது.
அதாவது வேதத்தின் பெருமையை மநு தர்மம் சொல்கிறது. மனு தர்மத்தின்
பெருமையை வேதம் சொல்கிறது.
இரிக் வேதம், ”மாநுட தருமத்தின் தந்தை மநு! மநு உரைத்தது யாவும்
வாழ்க்கைக்கு மருந்து, மநு ஒருவர் அல்ல எழுவர்” என்கிறது. இந்து
தருமங்களோ மநு எழுவர் என்கின்றன.
மநு தர்மம் வேதத்தைப் பற்றி, ”வேதமே விளக்கொளி, வேதம் தானே தோன்றியது.
பிறிதொருவரால் பிறப்பிக்கப்பட்
டதன்று. வேதம் நல்லது என்று வேதமே(?) சொல்கிறது” குறிப்பிடுகிறது.
”மநு தர்மம்” இப்பெயரில் தமிழ்நாடனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட
இப்படைப்பை சேலம் குயில் பண்ணை வெளியிட்டிருக்கிறது.
மிக அற்புதமாக தமிழ்நாடன் தனது கைவண்ணத்தை மனுதர்மத்தில் காட்டியுள்ளார்.
இதனை மறுப்பதிப்பாக திரும்ப வெளியிட்டால் பெரும் பயன் விளையும் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் வேண்டும்.
ஆம்.
மநுதர்மத்தை பல இடங்களில் இலக்கியமாக மாற்றம் செய்துள்ளார் தமிழ்நாடன்.
மிக அரிய புத்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக