ஞாயிறு, 19 மார்ச், 2017

வடுகர் யார் மோரியர் புத்தர் பாலி சாதவாகனர் களப்பிரர் நாயக்கர்

aathi tamil aathi1956@gmail.com

மார். 5
பெறுநர்: எனக்கு
இரா. வேல்முருகன்
கி. மு. 326ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் சிந்து ஆற்றுப்பகுதியின்மீது
படையெடுத்தது வந்த வரையில், வடஇந்தியா முழுதும் தமிழ்தான் பேசப்பட்டு
வந்தது,
கோதம புத்தரின் காலம், கி. மு. 6ஆம் நூற்றாண்டிற்கும் கி. மு. 4ஆம்
நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதெனக் கூறுகின்றனர்,
அதாவது, அவ்விரு நூற்றாண்டுகளுக்கு இடையில் இன்ன காலத்தில்தான் கோதம
புத்தர் வாழ்ந்தாரென உறுதியாக அவர்களால் கூற இயலவில்லை,
மகத நாட்டில் பேசப்பட்டுவந்த பாகத மொழியைத்தான் கோதம புத்தர் பேசினாரெனச்
சிலர் சொல்கின்றனர்,
வேறு சிலரோ, கோதம புத்தர் பாழி மொழியில்தான் மக்களிடம் பேசினார் என்கின்றனர்,
பாழி மொழி, பேச்சுவழக்கற்ற எழுத்து மொழியாக மட்டுமே இருந்தது. கோதம
புத்தர் இன்ன மொழியில்தான் பேசினாரென உறுதியாகக் கூறவியலாதென ஆராய்ந்தவர்
கூறுகின்றனர்,
எது எப்படியாயினும், கோதம புத்தருக்கு அவர் காலத்தில் இந்தியா முழுவதும்
பேசப்பட்டுவந்த தமிழ் தெரிந்திருக்க வேண்டும்,
திப்பிடகம் (திரிப்பிடகம்) தேரவாத புத்த சமயத்தின் தொகைநூல். கோதம
புத்தர் திருவாய் மலர்ந்தருளியவற்றைக் கேட்ட சிலரால் தொகுக்கப்பட்டதே அத்
திப்பிடகமாகும்,
ஆனாலும், புத்தருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அஃது எழுத்தில்
எழுதிவைக்கப்பட்டது,
இந்தியத் துணைக்கண்டத்தின் குமரிமுனையோடு ஒட்டாமல் ஒட்டிக் கிடக்கும்
இலங்கைத்தீவில்த
ான் - அங்குள்ள ஆலு விகாரத்தில்தான் - வட்டகாமினி எனும் சிங்கள அரசனின்
ஆட்சிக் காலத்தில்தான்,
அத் திப்பிடகம் முதன்முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகக் கி. பி. 4ஆம்
ஆண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் கூறுகிறது. கி. மு. 29ஆம் ஆண்டில்தான்
திப்பிடகம் எழுத்தில் வடிக்கப்பட்டது,
பாழி மொழியில் முதன்முதலில் எழுதப்பெற்ற நூல்
திப்பிடகமேயாகும்,அவ்வாறாயின், கி. மு. முதல் நூற்றாண்டில்தான் பாழி மொழி
வரிவடிவத்தைப் முதன்முதலில் பெற்றது,
கோதம புத்தர் வாழ்ந்த மகதநாட்டுக்கு மீமிகத் தொலைவிலிருந்த
இலங்கைத்தீவில்தான் அது நிகழ்ந்தது.
மகத நாட்டில் வடதமிழ் பாகதமாகத் திரிய கோதம புத்தரும் அவரது மாணாக்கருமே
காரணமாயிருந்திருக்க வேண்டும்,
அதாவது, வடக்கிலும் பேசப்பட்டுவந்த தமிழைத் திரித்துப் பாகதமாகவோ
பாழியாகவோ செய்த பாவத்தில் புத்தர்களுக்கும் பெரும் பங்கு உண்டு,
அருக (சைன) மதத்தின் 24வது தீர்த்தங்கரர் எனச் சொல்லப்படும் மகாவீரர்,
கி. மு. 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (அதாவது, கி. மு. 599ஆம்
ஆண்டளவில்) பிறந்ததாகச் சொல்லப்படுகிறது,
மகாவீரர் மக்களோடு பேசிய மொழி அரைமகத மொழியாகவோ சூரசேனிப் பாகதமாகவோ
இருக்கலாமெனச் சொல்லப்படுகிறது,
புத்தரைப் போன்றே மகாவீரருக்கும் அக் காலத்தில் தமிழ் தெரிந்திருக்க
வேண்டும். மகாவீரரோ அவரது வழியினரோ கங்கையும் சோணையாறும் கூடுகிற
‘பட்டினம்’ (இராசகிருகம் என்றும் அழைப்பட்ட இன்றைய பட்னா) எனும்
இடத்தில்,
அவர்கள் காலத்தில் வழக்கிலிருந்த வடதமிழைத் திரித்தும் கெடுத்தும்
கொச்சையான பாகத மொழியைத் தோற்றுவித்திருக்க வேண்டும்,
அருக சமயத்தின் ஆகமங்கள் தீர்த்தங்கரர்களின் திருவுரைகளைத் தழுவியவை.
‘அரை மகதம்’ எனும் பாகத மொழியில்தான் சைன ஆகமங்கள் முதன்முதலில்
இயற்றப்பட்டனவாம்,
ஆயினும், இந்த ஆகமங்களை எழுத்தில் எழுதிவைக்காமல் மனப்பாடமாகவே
வாய்வழியாகக் கற்பித்து வந்தனர்,
ஆச்சாரியா புசுப்பாதந்துவும் ஆச்சாரியா பூதப்பலியும் கி. பி. முதல்
நூற்றாண்டில்தான் சைன ஆகமங்களை எழுத்து வடிவில் முதன்முதலில்
எழுதிவைத்தனராம்,
இலக்கியமே இல்லாத கன்னட மொழிக்குத் திடுதிப்பென அருக (சைன) முனிவர்
ஒருவரால் கவிராச மார்கம் எனும் இலக்கணநூல் கி. பி. 9ஆம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டது,
பல்லவன் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் சமற்கிருதப் புலவனாயிருந்த
தண்டி இயற்றிய காவ்ய தர்சா எனும் சமற்கிருத நூலின் கன்னட மொழியாக்கம்தான்
அந்தக் ‘கவிராச மார்கம்,
தமிழை ஒழித்துக் கன்னட மொழியைத் தோற்றுவித்தவர்கள் அருகரே (சைனரே) என்பது
இதனால் விளங்கும்,
இதைப் போன்றே மகாவீரர் காலத்திய வடதமிழைத் திரித்து அரைமகத மொழியைத்
தோற்றுவித்தவர்களில் அருகரும் அடங்குவர்,
புத்தர்களும் அருகர்களும் தோற்றுவித்த பாகதங்கள்தான் கி. பி. 2ஆம்
நூற்றாண்டளவில் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட சமற்கிருதத்தின்
முன்னோடிகளாகும்,
இவை யாவும் எதைக் காட்டுகின்றன? வடுகப் பிராமணியம் தோன்றிச்
சமற்கிருதத்தைத் தழுவிக் கொள்வதற்கு முன்னரே தமிழைத் திரித்துப்
பாகதங்களை உருவாக்கியவை புத்தமும் அருகமும் (சைனமும்) என்பதையே அவை
காட்டுகின்றன,
சுருங்கச் சொல்லின், விந்தியமலைக்கு வடக்கேயும் வழங்கிவந்த தமிழை
புத்தமும் அருகமும் சேர்ந்தே ஒழித்தன,
நான் சொல்வது இதுதான்:-
தமிழுக்கு மூன்று பெரும் பகைகள் இருந்தன. அவற்றில் புத்தமும் அருகமும்
முதலிரு பகைகள். பிராமணியம் மூன்றாவது பெரும்பகை,
புத்தமும் அருகமும் பிராமணியத்திற்கு எதிரான சமயங்கள்; அதனால், அவை
முற்போக்கானவை என்னும் தவறான கருத்தை ஐரோப்பியர்கள் நம் மண்டைக்குள்
திணித்தனர்,
அதைக் குரங்குபிடியாய் பிடித்துக்கொண்ட திராவிடர்கள், அதையே ஒரு
கணிப்பொறிச் ‘சிப்’பாக்கி நம் மூளைக்குள் பொருத்திவிட்டனர்,
நான் எழுதிக்கொண்டிருக்கும் ஏரணம் என்னும் நூலில் இதைப்பற்றி விரிவாகச்
சொல்லவிருக்கிறேன்,
பட்டினத்தைத் தலைநகராகக்கொண்ட
ு நன்னர் எனும் தமிழ் வேளிர்கள் ஆண்டுவந்தனர்,
‘நன்னர்’ என்போரைத்தான் பாகதத்திலும் சமற்கிருதத்திலும் ‘நந்தர்’ எனத்
திரித்து ஒலித்தனர்,
கொடிய காடுகளும் மலைகளும் விலங்குகளும் மண்டிக் கிடந்த இந்தியத்
துணைக்கண்டத்தின் இருண்ட நடுப்பகுதியில் வடுகர் எனும் அநாகரிகர்கள்
வாழ்ந்துவந்தனர்
,
அவ் வடுகர்கள் நன்னர்களின் கூலிப்படைஞராயிருந்தனர்; காலப்போக்கில் அந்
நன்னர்களை வஞ்சகமாய் வீழ்த்திவிட்டுக் கீழைக்கங்கைக்கரையில் ‘மோரிய அரசு’
எனும் முதல் வடுக அரசைத் தோற்றுவித்தனர்,
அம் மோரிய அரசு வீழ்ந்ததையடுத்த
ு அதே வடுகர்கள் கருநாடகத்திலிருக்கும் பல்லாரிப் பகுதியில் சதவாகன்னர
(நூற்றுவர் கன்னர்) அரசைத் தோற்றுவித்தனர்,
இச் சதவாகன்னர்கள் தமிழ் மூவேந்தர்களுக்குக் கீழடங்கி
ஆண்டுவந்தனர்,அவர்களின் வழிவந்த வடுகர்கள்தாம் களப்பாளர்களாகவும்
பல்லவர்களாகவும் சளுக்கியர்களாகவும் திரிந்தனர்,
தமிழகத்தின்மேல் படையெடுத்து வென்று தமிழர்நாட்டைச் சூறையாடவும் ஆளவும்
வல்லவராயிரனர்,
அவ் வடுகர்களின் பிறங்கடைகளே விசயநகரத்து நாயக்கர்களாகவும்
பாளையக்காரர்களாகவும் மராத்தியராகவும் படையெடுத்து வந்து தமிழரை வென்று
அடக்கியாண்டனர்,
ஆங்கிலேயரிடம் அரசுகளையும் ஆட்சிகளையும் இழந்த தெலுங்கு வடுகர்கள்,
பிற்காலத்தில் ‘திராவிடம்’ எனும் முகமூடியை அணிந்துகொண்டு தமிழகத்தின்
அரசியலை மெல்லக் கைப்பற்றினர்,
புத்தமும் அருகமும் பிராமணியத்தை எதிர்த்தன; அதனால், அவை முற்போக்கானவை
எனும் பொய்யைக் கற்பித்தவர்கள் ஆரிய கூத்தாடிய ஐரோப்பிய அறிஞர்களேயாவர்,
உண்மை நேர்மாறானது.
புத்த மதத்தைத் தாலாட்டி வளர்த்தது., உலகெலாம் ஆரியக் கொள்கையைப் பரப்பிய
மெய்ஞான அவையே (தியோசோஃபிகல் சொசைட்டி) ஆகும்,
களப்பாள வடுகரின் வந்தேறி ஆட்சியை ஒழித்தவன் பாண்டியன் கடுங்கோன் என
வேள்விக்குடி செப்பேடு சொல்கிறது,
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி நற்கொற்றன் எனும் தமிழ்ப்
பார்ப்பானுக்குத் தந்த காணிக்கொடையைக் கன்னட வடுகரான களப்பாளர்
பறித்துக்கொண்டனராம்,
அக் களப்பாளரின் வந்தேறி ஆட்சியை ஒழித்த பாண்டியன் கடுங்கோன், களப்பாள
வடுகர் பறித்துக்கொண்ட காணிக்கொடையை அந் நற்கொற்றனின் வழிவந்தோருக்கு
மீட்டுத் தந்தானாம்,
இந்தச் செய்தியைத் திரித்துப் புரட்டிக் களப்பாளர் பார்ப்பனியத்திற
்கு எதிரானவர்கள் என்றும்,
பாண்டியன் பார்ப்பனியத்தைப் புரந்தான் என்றும் திராவிட வடுகர்கள்
கதைக்கட்டி, களப்பாளர் போற்றிய அருகம் மிகவும் முறபோக்கானதெனக் கூறி
வருகின்றனர்.
# ஐயாகுணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக