ஞாயிறு, 19 மார்ச், 2017

டைனோசர் படிமம் அரியலூர் அகழ்வாராய்ச்சி பழமை

aathi tamil aathi1956@gmail.com

மார். 3
பெறுநர்: எனக்கு
இரா. வேல்முருகன்
தமிழ்நாட்டு மீத்தொன்ம புதையல் (அரியலூர் பகுதி)
1) கள்ளமேடு ஒட்டகோவில், கல்லங்குறிச்சி பகுதிகளில் 72 மில்லியன்
மீப்பழைமையான தொல்படிமங்கள் கொண்ட பாறைகள் உள்ளன,
2) சில்லகுடி பகுதியில் 83 மில்லியன் வருட மீப்பழைமையான பாறைகள் உள்ளன,
3) 145.5 மில்லியன் வருட மீப்பழைமையான பாறை படிமங்கள், கடலிய தொல்படிமங்கள் உள்ளன,
4) 225 மில்லியன் வருட மீப்பழைமையான மீனின் தொல்படிமம் உள்ளது,
5) அண்டார்டிகா பகுதிகளில் வாழ்ந்திருந்த விலங்கினங்களின் ஒத்திருக்கும்
தொல்படிமங்கள் உள்ளன,
இதே போன்ற தொல்படிமங்கள் தென்அமெரிக்காவில் உள்ளது,
6) நூற்றுக்கணக்கான எட்டு முட்டைகளைக் கொண்ட டைனோசர் முட்டைக்கூடுகள்
(கல்லங்குறிச்சி),
7) 81 மில்லியன் வருடத்திற்கு முன்பு புதுச்சேரிக்கும் காரைக்காலுக்கும்
இடையே கடற்கோள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று புவியியலாளர்
அறிவித்துள்ளனர்,
இதனாலேயே மீதொன்மயான கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் அரியலூர்
பகுதிகளில் அதிகமாகக் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளனர்,
அரியலூரில் உள்ள எட்டு முக்கியச் சிமென்ட் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டின்
சிமெண்ட் உற்பத்தியில் கிட்டத்தட்ட 80 சதவீத பங்குவகிக்கின்றன,
இத்தொழிற்சாலைகள் சில நேரங்களில் தொல்படிமங்களை அழித்துவிடுகின்றன
என்றும் புவியியலாளர்கள் கூறுகின்றனர்,
இவாறான சில தொன்மைபடிமங்கள் உள்ள தளங்கள் இந்திய ஒன்றிய அரசால்
பாதுகாக்கப்படும் இடங்களாக அறிவித்துள்ளது,
ஆனால் சரியாக நிர்வகிக்கப்படு
கிறதா என்று தெரியவில்லை,சிம
ென்ட் தொழிற்சாலைகள் கண்டெடுக்கும் தொனம்படிமங்கள் முறையாக
ஒப்படைக்கபடுகிறதா என்றும் தெரியவில்லை,
இப்படிதான் போகுது நிலைமை ஆனா இது எதையும் உள்வாங்காமல் கூட்டத்துல
கோவிந்தா போடவே விரும்புகின்றனர் நம்மாளுவோ.
15 ஜி.பை. இல் 0.03 ஜி.பை. (0%) ஐப் பயன்படுத்தியுள்ளீர்கள்
இறுதியாக கணக்கை இயக்கியது: 2 நாட்கள் முன்பு
விவரங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக