|
23/10/16
![]() | ![]() ![]() | ||
பிரபு போசு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை, ஒரு
நீர்த்தேக்கம் அல்ல! அது ஒர் நீர் ஒழுங்கி (Regulator). ஒவ்வொரு வெள்ளப்
பெருக்கின் போதும் வெவ்வேறு திசையை உருவாக்கிக் காவிரி ஓடியது. பழைய
நீர்த் தடத்தில் உரிய தண்ணீர் வருவதில்லை. இப்பொழுதுள்ள கொள்ளிடம்
பகுதியில் முழுமையாகக் காவிரி சென்று விடும் காலமும் உண்டு. அதை
ஒழுங்குபடுத்த, கொள்ளிடம் தலைப்பில் ஒரு சுவரை எழுப்பினான் பேரரசன்
கரிகாலன். பெருவெள்ளம் வரும்போது, மிகை நீர் அந்தச் சுவரின் மேல் மிதந்து
கொள்ளிடத்தில் ஓடும். அளவாக தண்ணீர் வரும்போது மரபு வழிப்பட்ட பாதையில்
காவிரி ஓடும். அந்த ஒரு சுவருக்கு அப்பால் கல்லணையில் கரிகாலன் வேறு அணை
எதுவும் கட்டவில்லை.
இப்பொழுதுள்ள கல்லணையும் நீர் ஒழுங்கிதான். இது நீர்த்தேக்கமன்று.
காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், புதாறு ஆகியவற்றின் தண்ணீரைப்
பிரித்துவிடும் நீர் ஒழுங்கிதான் இது! இது பத்தொன்பதாம் நூற்றாண்டில்
ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது.
ஐயா மணியரசன் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக