செவ்வாய், 21 மார்ச், 2017

வயலில் எலி பிடிக்க கிட்டி பொறி படம் புகைப்படம் வேளாண்மை விவசாயம்

aathi tamil aathi1956@gmail.com

11/8/16
பெறுநர்: எனக்கு
Nadarajah Sanjeev இன் இடுகை ஐ
ம.பொன்ராஜ் காலாடி பகிர்ந்துள்ளார்.
Nadarajah Sanjeev , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
# தமிழனின்_விவசாய
_தொழில்நுட்பம்
# கிட்டி_முறையிலா
ன_எலிஒழிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியில் நெல் வயலில் கிட்டி வைத்து பிடிக்கும்
அரிமழத்தை சேர்ந்த
# கிட்டிதுரைராஜ்
வயல்களில் நெற்பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்த பல்வேரு
முறைகள் இருந்தாலும், அவற்றை விஞ்சும் அளவுக்கு பயனுள்ளதாய் இருக்கிறது
பழமையான கிட்டி (பொறி) முறை..!!
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை எலிகள் கடித்து சேதப்படுத்துகின
்றன..
மேலும் வயலில் தேங்கும் தண்ணீரில் தத்தளிக்காமல் இருப்பதற்காக, நெற்பயிரை
மடித்து விடுகின்றன. இவற்றால் சுமார் 20 சதவீத நெற்பயிர்கள்
சேதமடைகின்றன.
எலிகளை கட்டுப்படுத்துவதற்காக வேளாண்துறை சார்பில்,
பல்வேறு விஷ மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
மேலும்,
வயல்களில் எலிகளைப் பிடித்து உணவாக்கிக் கொள்ளும் ஆந்தை உள்ளிட்ட பறவைகள்
அமர்வதற்காக, பறவைகள் இருக்கை அமைப்பது குறித்தும் விவசாயிகளுக்கு
வேளாண்மை துறை ஆலோசனை வழங்குகிறது..!!
ஆனாலும் அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு, மூங்கில் பட்டைகளாள்
வடிவமைக்கப்பட்ட கிட்டிகளைக் (பொறி) கொண்டு வயல்களில் எலிகளை அழிக்கும்
முறை விவசாயிகளுக்கு பயனுள்ளதாய் இருக்கிறது...!!
கிட்டி முறையில் எலி ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள, புதுக்கோட்டை மாவட்டம்
அரிமழம் முத்தான்டிகரை பகுதியை சேர்ந்த கிட்டிதுரைராஜ் கூறும்போது
என்னிடம் 400 கிட்டிகள் உள்ளனதேவையான கிட்டிகளை மூங்கில் குச்சிகளைக்
கொண்டு நாங்களே வடிவமைத்துக்கொள
்வோம்.
ஒரு ஏக்கருக்கு 300 கிட்டிகள் நட்டால், ஓரளவுக்கு எலிகளை அழித்துவிடலாம்.
ஒரு கிட்டிக்கு ரூ.4 என்ற அளவில் விவசாயிகளிடம் வாடகை வசூலிக்கிறோம்..
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியை சேர்ந்த பிரபல விவசாயிகள்
Arivazhagan Pichaimuthu Aasaiperiyathambi கூறும்போது “எலி மருந்துகளை
வரப்பு ஓரங்களில் வைக்கலாம்..
ஆனால் நடவு செய்துள்ள நடுவயலுக்குள் வைக்கமுடியாது..!!
அப்படி வைத்தாலும் எலிகளை முழுமை யாக அழிக்க முடியவில்லை..!!
இதனால் கிட்டி முறையில் எலி களை அழித்துவருகிறோம்..
ஒரு ஏக்கருக்கு 35 மூட்டைகள் விளையும் என்றால், அதில் 6 மூட்டை நெல்,
எலிகளால் வீணாகும்..!!
இதனால் ரூ.5,500 இழப்பு ஏற்படும். மேலும் வைக்கோலும் வீணாகும்..
கிட்டி முறையில் எலிகளை ஒழிக்க ரூ.1,200 மட்டுமே செலவாகும் என்பதால் இந்த
முறையைப் பயன்படுத்துகிறோம்” என்றார்கள்..!!
-Sivakumar
https://m.facebook.com/story.php?story_fbid=10210084938820943&id=1261473517&refid=17&_ft_=top_level_post_id.10210084938820943%3Atl_objid.10210084938820943%3Athid.1261473517%3A306061129499414%3A2%3A0%3A1472713199%3A-2927109832344989745

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக