செவ்வாய், 21 மார்ச், 2017

காமராசர் உடனிருந்த தேவர் தலைவர்கள் மறவர் நாடார்

aathi tamil aathi1956@gmail.com

25/7/16
பெறுநர்: எனக்கு
Senthil Pandian .
காமராஜர் தேவர்களின் எதிரியா?
சமீபத்தில் இணையதளத்தில் தமிழ் இனக்குழுக்களில்
குறிப்பிட்ட இரண்டு குழுக்களிடையே நாடார்கள், தேவர்கள் இடையே வன்மம்
அதிகரித்து கிடப்பதைப்போலவும் பெருந்தலைவர் காமராசர் ஏதோ தேவர்களுக்கு
எதிரி போலவும் சிலர் வேண்டும் என்றே விஷமப்பிரசாரம் செய்து
வருகின்றார்கள். இது தவறான பொய்பிரசாரம் என்பதை நிருபிக்க வேண்டிய கடமை
உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. முத்துராமலிங்க தேவர் சிறந்த
ஆன்மீகவாதி, சிறந்த தேசபக்தர், தேசியவாதி, ஆற்றல் மிக்க பேச்சாளர்,
இப்படி எல்லாம் இருந்தாலும் அரசியலைப்பொறுத்த அளவில் சமகாலத்தவரான
பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் ஆளுமையை ஒப்பிடும் போது தேவருக்கு
காமராஜர் மீது ஒரு பொறாமை உணர்வு வெறுப்பு உணர்வு இருந்தது. தனிப்பட்ட
முறையில் அவர் அதை வெளிப்படுத்தினார். காமராசரைப்பற்றி கர்ண கடூரமான
வாசகங்களை வசவுகளை அவர் வெளிப்படையாக மேடைகளில் பேசினார்.
காமராஜரைப்பற்றி மட்டுமல்ல அவர் பிறந்த சாதியினரைப்பற்றியும் அவதூறாக
மேடைகளில் பேசினார். ஆனால் பெருந்தலைவர் அவை எதையுமே பொருட்படுத்தவில்லை.
அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முதுகுளத்தூர் கலவரத்தைக்கூட ஒரு
சட்டம்&ஒழுங்கு பிரச்சினையாக எடுத்துக்கொண்டு செயல்பட்டாரே தவிர அதை ஒரு
அரசியல் பிரச்சினையாக எடுக்கவில்லை. இவ்வளவு நடந்தும் காமராஜரின் நட்பு
வட்டத்தில் இருந்த தேவர் இன தலைவர்களைப்பார்த்தாலே நாம் புரிந்து கொள்ள
முடியும்.
தஞ்சை மண்டலத்தில் அப்பவு வாண்டையார்தான் தமிழ்நாடு காங்கிரசின்
பொருளாளராக இருந்தார். இவருடைய மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சைமாவட்ட
காங்கிரஸ்தலைவரா
க வந்தார். அவருடைய மகன்தான் துளசி அய்யா வாண்டையார். அவர் வாழப்பாடியார்
தலைவராக இருந்த போது தஞ்சை தலைவராக பதவி வகித்தவர்.
தஞ்சை காங்கிரஸ்பிரமுகராக இருந்த மற்றொருவர் வணங்காமுடி வைரவத்தேவர் இவர்
யாருக்கும் அஞ்சாத சிங்கமாக காங்கிரஸ்தலைவராக இருந்தவர்.
மற்றும் கோபால்சாமி தென்கொண்டார், புதுக்கோட்டை தொண்டைமான், ராமையா
பாப்லா, வேதாரண்யம் வேதாசலத்தேவர், திருச்சி அருணாசலத்தேவர்,
ஆர்.வி.சாமிநாதன், உடையப்பா சிவசுப்பிரமணியத்தேவர், மதுரை
சின்னக்கருப்பத்தேவர், என்.எஸ்வி சித்தனின் தகப்பனார் வீரபத்திர தேவர்,
இராமநாதபுரம் சண்முகராஜேசுவர சேதுபதி (இவர் மந்திரியாக இருந்தார்)
அருப்புக்கோட்டை துரை சிங்கத்தேவர், முன்னாள் சபாநாயகர்
செல்லப்பாண்டியன், சங்குமுத்து தேவர், ஏ.பி.போஸ் தேவர், மற்றும்
டி.என்.அனந்தநாயகி ஆகியோர் பெருந்தலைவர் காமராஜரின் அணுக்கத்தோழர்களாக
இருந்து அரசியல் பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவரும் முத்துராமலிங்க
தேவர் உயிருடன் இருந்த காலகட்டத்தில் காமராசருடன் இருந்தவர்கள்.
இவர்களுக்கு பின்னால் சாண்டோ சின்னப்பத்தேவர், நடிகர் திலகம்
சிவாஜிகணேசன் போன்றவர்கள் காமராஜருக்கு வலதுகரமாக விளங்கியவர்கள்.
காமராஜர் என்றுமே சாதி அடிப்படையில் விஷயங்களை கையாண்டவர் இல்லை. தேவர்
சமுதாய மக்களை அவர் தன் இனத்தைப்போல நடத்திய தமிழ்தலைவர் அப்படி இல்லாமல்
இருந்து இருந்தால் பல தேவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காமராஜ் என்று பெயர்
வைத்து இருப்பார்களா?
ஆனால் தற்போது சில அரசியல் வியாதிகள் தங்கள் திருட்டு திராவிட அரசியல்
காரணங்களுக்காக காமராஜர் தேவர்களுக்கு எதிரிபோல பிரசாரம் செய்தார்கள்.
இதில் முதல் தர அரசியல் வியாதி கட்டுமரம் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டது
வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன்
5 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக