செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழ்ப்புத்தாண்டு கார்த்திகை நாட்காட்டி நேரம் வானியல் புத்தாண்டு

aathi tamil aathi1956@gmail.com

25/7/16
பெறுநர்: எனக்கு
் நவீன் குமரன் .
சங்கத்தமிழர் நாள்காட்டி - 7
========================
பண்டைய தமிழர் விழாக்கள்- சங்கத்தமிழர் நாள்காட்டிப்படி:
------------------------------------------------------------
-----------------------------------
1)கார்த்திகை திங்கள்:
------------------------------------
திங்களாண்டு பிறப்பு.அதுவே சங்கத்தமிழர் புத்தாண்டு. அதனையே எங்கெங்கும்
விளக்கேற்றி வரவேற்றனர் என்று கண்டோம். அந்த மாதம் முழுவதும் விளக்கேற்றி
வைத்து, அறச்செயல்கள் செய்வதற்கு ஒதுக்கி வைத்தனர் என்று நற்றிணை
கூறுகிறது.
“கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அறுமீன் கெழீய அறம்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடே! -(நற்றிணை: 202: 8 - 11)
அறுமீன்= கார்த்திகை நாள்மீன்; கார்த்திகை திங்களை அறம்செய் திங்கள்
என்றே நற்றிணை அழைக்கிறது.
2)மார்கழி திங்கள்:
------------------------------
பாவை நோன்பு தொடக்கம். மார்கழி திங்கள் முதல் நாளில், முழுமதியில் பாவை
நோன்பு தொடக்கும்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! (திருப்பாவை)
மார்கழி திங்கள் முழுமதியில் இந்த பாவை நோன்பு தொடங்கி இருக்கிறது என்று
ஆண்டாள் கூறுகிறாள்.
மார்கழி முழுமதியை ஒட்டிய ஆதிரை நாள் அன்று நோன்பு தொடங்கி, தை திங்கள்
முழுநிலாவான தைப்பூசத்தன்று ‘தைந்நீராடலுடன்’ இந்த நோன்பு முடிந்துள்ளது
என்று பரிபாடல் கூறுகிறது.
கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து,
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
இந்த பாவை நோன்பை எப்படி கடைப்பிடிப்பது?
------------------------------------------------------------
----------------------
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். (திருப்பவை)
நெய் உண்ணக்கூடாது; பால் உண்ணக்கூடாது; அதிகாலையிலேயே நீராடி விட
வேண்டும். கண்ணில் மை பூசிக்கொள்ளக்கூடாது;மலர் சூடிக்கொள்ளக்கூடாது. தீய
சொற்களை மனதாலும் நினைக்கக் கூடாது. யாரிடமும் கோள் சொல்லக்கூடாது;
இல்லாதவர்களுக்கும், அந்தணர்களுக்கும், ஞானிகளுக்கும் போதும் என்று
சொல்லமளவுக்கு தர்மம் செய்ய வேண்டும்.
3.தைந்நீராடல்:
----------------------------
மார்கழி திங்கள் முழுவதும் நோன்பு இருந்து, தை திங்கள் முதல் நாள்,
முழுநிலவில், தைந்நீராடலுடன் நோன்பை முடிப்பார்கள். ஒரு திங்கள் பால்,
நெய் ஆகியவற்றை உட்கொள்ளாமல் இருந்ததால், தைப்பூசத்தன்று நெய், பால்
உற்றி பொங்கல் வைத்து கொண்டாடுவர். அதுவே தைப்பூசம், பண்டைய தைப்பொங்கல்.
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். (தேவாரம்:திருமய
ிலை பதிகம்).
அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக்
கொண்டாடும் தைப்பூசவிழா என்று திருஞான சம்மந்தரும் கூறுகிறார்.
பெண்கள் உலக நன்மைக்காகநோன்ப
ிருந்து நீராடியது போலநல்ல கணவன் தமக்குக் கிடைக்கவேண்டுமென தைந்நீராடுவர்.
இப்படி மார்கழி முழுவதும் நோன்பிருந்து, தைந்நீராடினால் என்ன நடக்கும்??
திருமணமாகாதவர்க
ளுக்கு உடனே திருமணம் கைக்கூடம் என்பது சங்கக்கால தமிழர்களின் நம்பிக்கை.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சொல்லியது இதன் அடிப்படையிலேயே.
“வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்துநீ தையில் நீராடி தவம் தலைப்
படுவையோ”[கலித்தொகை (59:12-13)]
காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை
ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம்
மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான், “நீ தையில் நீராடிய தவம் தலைப்
படுவாயோ?”
“இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும்,
தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள்.
என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று
தலைவன் கூறுகிறான்.
4)மாசி திங்கள்:
-------------------------
மாசி திங்கள் முழுமதியில், மாசி மகம் நடைபெறும். இந்நாளில் கடலாட்டு விழா
நடைபெறுகிறது. எனவே இவ்விழா நெய்தல் கடவுள் வருணனுக்கு உரிய விழாவாக
இருந்திருக்கலாம்
தொடரும்-7
11 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக