செவ்வாய், 21 மார்ச், 2017

பண்டார வன்னியன் வன்னியர் வன்னி பெருமை

aathi tamil aathi1956@gmail.com

31/8/16
பெறுநர்: எனக்கு
"வீரவணக்கம் - மாவீரன் பண்டார வன்னியன்: இன்று 213 ஆவது நினைவுநாள்"
------------------------
தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய
அரசர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன்
காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர். வன்னி பெருநிலத்தில்
வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது.

---------------------------------
"வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி"
---------------------------------
அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால்,
அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள்,
டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த
மாவீரர்கள் வன்னியர்கள். (விடுதலைப் புலிகளின் ஈழப்போர் கடைசிவரை
நீடித்திருந்ததும் வன்னியில்தான்)

1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய
போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை
வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம்
முடிவுக்கு வந்தது.

டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா்
ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும் வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன்
பண்டாரவன்னியன். ஆயிரமாண்டு வன்னிய அரசப் பாரம்பரியத்தின் கடைசி மன்னர்.
இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.

டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும்
மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா
போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான்
பண்டார வன்னியன்.

1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும்
லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால்
வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும்
அவர்கள் காணவில்லை”

-----------------------------------------------
"1803 ஆகஸ்ட் 25 - விடுதலைப் புலிகள் அறிவித்த நினைவு நாள்"
---------------------------------
முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே
படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து
பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப்
படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை
நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக்
கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25.

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன்
காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி லெப். வொன்
டெரிபோர்க்கினால் 31.10.1803 அன்று தோற்கடிக்கப்பட்டான்.

பண்டார வன்னியன் இறந்த நாள் 31.10.1803 ஆம் நாளாக இருந்தாலும், பண்டார
வன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக்
கைப்பற்றிய 25.08.1803 ஆம் நாளையே நினைவு நாளாக கடைபிடிக்க வேண்டும்
என்று 1997 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதையே
தற்போது பண்டார வன்னியனின் நினைவுநாளாக நினைவுகூறுகின்றனர்.

-----------------------------------------------
"ஈழத்தில் இன்று நினைவுநாள் விழா"
---------------------------------
இன்று 25.08.2016 அன்று தேசியவீரன் பண்டார வன்னியனின் 2016ம் ஆண்டிற்கான
நினைவு விழா வவுனியா நகரசபை சார்பில் நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகள்,
மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

"மாவீரன் பண்டார வன்னியன் 213 ஆம் நினைவு நாளில் அவரது வீர நினைவுகளைப் போற்றுவோம்"

(படம்: வவுனியா கச்சேரியின் முன்பாக உள்ள பண்டாரவன்னியன் சிலை).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக