திங்கள், 20 மார்ச், 2017

பிரமிடு வேர்ச்சொல் மேர் என்பதே பெரும் மேடு தவறு

aathi tamil aathi1956@gmail.com

25/10/16
பெறுநர்: எனக்கு
Jude Anto
ஆங்கிலக்கண் மட்டும் கொண்டு பார்க்கப்படும் தமிழ் சொல்லாய்வின் ஆபத்து.
தமிழின் பழமை 60,000 ஆண்டுகள் என்று சொன்ன சாத்தூர் சேகரன் ஆகட்டும்.
தமிழர் தொன்மை எழுதிய குணாவாக்கட்டும். தமிழர் கடலாளுமையை ஆய்வு செய்யும்
ஒரிசா பாலுவாகட்டும். இப்போது இணையத்தில் முகநூலில் எழுதிவரும்
சொல்லாய்வு புலவர்கள் ஆகட்டும். மற்ற மொழிச்சொற்களை தமிழ் வேர் காட்டும்
போது செய்யும் தவறு யாதெனில் ஆங்கிலக்கண் கொண்டே தமிழ் வேர்
காட்டுகின்றனர். பாவாணர், அருளி, விக்டர் போன்றோரே சொல்லாய்வை அந்தந்த
மொழியின் கண் கொண்டு பார்த்தவர்கள். மற்றவர்கள் பெரும்பாலும் ஆங்கிலக்கண்
மாயையை கொண்டவர்களே.
இப்போது Pyramid என்பது பெரும் இடு என்ற தமிழ் சொற்களில் இருந்து போனது
என்று இணையத்தில் அதிகமாக பரவிக்கொண்டிருக
்கிறது. இதில் ஆங்கிலக்கண் மாயை இவர்களை எப்படி ஆட்டுவிக்கிறது என
பார்க்கலாம். முதலில் Pyramid என்பதே முதலில் எகிப்திய சொல்லோ அல்லது
சுமேரியச்சொல்லோ அல்ல. அது கிரேக்கச்சொல். அதுவும் நால்கோணம் கூம்பு
வடிவில் இருக்கும் அனைத்துமே Pyramid என்றே ஆங்கிலத்தில் சொல்லப்படும்.
அது புஷ்வானம் அளவுக்கு சிறிதாக இருந்தாலும் Pyramid தான். இதன் மூலமானது
Puramis என்ற கிரேக்கச்சொல். உரோமானியர் எகிப்தின் மீது படையெடுத்து
வென்ற போது தான் இப்பெயர் எகிப்திய அரசர்களின் இடு கோயில்களுக்கு
சூட்டப்பட்டிருக்க வேண்டும். Pyramid என்னும் சொல்லுக்கு தமிழ் மூலம்
காட்டும் யாராவது எகிப்திய மொழியிலோ சுமேரிய மொழியிலோ அரசர்களின் இடு
கோயில்களுக்கு என்ன பெயரென்று பட்டியல் இட்டுள்ளனரா என்றால் இல்லை.
இப்படி ஆங்கிலக்கண் மாயை கொண்டு பார்ப்போரால் உண்மையான சொல்
மறைக்கப்பட்டு ஆங்கிலச்சொல் மாயைக்குள் சொல்லாய்வு சென்று
மாட்டிக்கொள்கிறது. சரி எகிப்திய, சுமேரியம் தொடர்பான மொழிகளில்
அரசர்களின் உயரமான இடு கோயில்களுக்கு என்ன பெயரென பார்ப்போம்.
எகிப்திய சொல்:
மேர் (ஆங்கில எழுத்துப்பெயர்ப்பில் Mer)
மேர் என்றால் எகிப்திய மொழியில் மேல் நோக்கி இருக்கும் என்று பொருள்
வரும். ஐந்து கோணம் பத்துகோணம் கொண்டு இந்த இடுகோயில்கள் கட்டப்பட்டிருந்
தாலும் அதுக்கு மேர் தான். ஆக தமிழ் மூலம் காட்டும்போது மேரு என்ற சொல்லை
மூலம் காட்டலாமே ஒழிய பெரும் இடு தான் பிரமிடு ஆனது என ஆங்கில மாயையில்
மயங்கி மூலம் காட்டக்கூடாது.
சுமேரிய சொல்:
சிகூரத்து (ஆங்கில எழுத்துப்பெயர்ப்பில் Ziggurat)
சிகூரத்து என்றால் சுமேரியம் தொடர்பான மொழிகளில் உயரமான இடம் என்று
பொருள். இதற்கு சிகரம் என்னும் சிகை (முடி) போன்ற தமிழ் தொடர்பான சொற்களை
மூலம் காட்டனுமே ஒழிய பெரும் இடு தான் சிகூரத்து என்றானதுனு புதுக்கதை
எதாவது எழுதீராதீங்க.
புதிய சொல்லாய்வாளர்கள் அதுவும் என் பதிவுகளை தன் பக்கங்களில் கிண்டல்
செய்து போடும் சொல்லாய்வாளர்கள் ஆங்கிலக்கண் மோகம் கொண்டு தமிழ்
சொல்லாய்வை ஆங்கிலத்துக்கு அடகு வைக்காதீர்கள். - - தென்காசி
சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக