செவ்வாய், 21 மார்ச், 2017

மருதுபாண்டியர் இந்தியா முழுவதும் விடுதலை பிரகடனம் செட்டியார் ஆதரவு

aathi tamil aathi1956@gmail.com

13/7/16
பெறுநர்: எனக்கு
மேகநாதன் முனுசாமி.
பூலித்தேவன்
அழகு முத்து கோன்
கட்டபொம்மன்
திப்பு
மருதுபாண்டியர்கள் நடத்திய போராட்டம் எல்லாம் தேச விடுதலை போராட்டமல்ல.
தேசம் என்பதே முதலாளிய வளர்ச்சிக்கட்டத்தில் ஏற்படக்கூடியது.
ஆகவே அவர்கள் நடத்தியது விடுதலைப்போராட்டமல்ல என்கிற வாதம் முன் வைக்கப்படுகிறது.
முதலாளிய வளர்ச்சி என்பது காலனியாவதற்கு முன்பே இங்கு இருந்த ஒன்றே ஆகும்.
மன்னர்களுக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு வணிகர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திப்புவும் மருதுவும் சமூக வரலாற்று வளர்ச்சியை புரிந்தவர்கள்.
அவர்கள் மன்னர்களாக இருந்தாலும் பிரெஞ்சில் நடந்த
முதலாளிய புரட்சியை ஆதரித்தவர்கள்.
பிரெஞ்சு அரசாங்கத்தோடு நெருக்கம் கொண்டவர்கள்.
திப்பு மருது இருவருமே மன்னர் வாரிசுகள் அல்ல.,,,
சாதாரண படை வீரனாக வாழ்க்கையை தொடங்கி உயர்ந்தவர்கள்.
மக்களின் ஆதரவை பெற்றவர்கள்.
திப்புவை விட மருதுபாண்டியர்க
ள் சிறு பாளையக்காரர்.அதனால் தான் எழுபதாயிரம் பேர் கொண்ட மக்கள்
படை கட்டப்பட்டது.
விடுதலை பிரகடன் வெளியிட்டவர்கள்.
அவர்களின் இலக்கு இன்றைய இந்தியா - (அவர்களின் காலத்தில் ஜம்பு தீவு)
விடுதலை செய்வதை இலக்காக கொண்டது.பல பாளையங்களை ஒன்றிணைத்தனர்.
மருது தலைமை தாங்கிய புரட்சிக்கு மத்திய பிரதேசம் வரை ஆதரவு
இருந்தது.மன்னரே முதலாளிய சனநாயக கண்ணோட்டத்தில்
புரட்சியை முன்னெடுத்தது சாதாரண நிகழ்வல்ல.
திப்பு மருதுவின் அழிவு சுதந்திர வணிகத்தின் அழிவு.
சுதந்திர வணிகரே வாழ முடியாத நாட்டில் தேசிய முதலாளிய வளர்ச்சிக்கு
சாத்தியம் இல்லை.
சமீன்தார்கள் தரகு முதலாளிகள் -
தரகு வர்க்கங்களே
திட்டமிட்டு உருவாக்கப்பட்டன,,,
உறவு கா. சே. பாலசுப்ரமணியன்
11 மணிநேரம் · பொது
உறவு கா. சே. பாலசுப்ரமணியன்
மருதுபாண்டியர்கள் திரட்டிய எழுபதாயிரம் பேர் உணவளிப்பதை
அரண்மனை சிறுவயல் சிவநேசஞ் செட்டியார் ஏற்றார்.
மருதுபாண்டியர்கள்
தலைமறைவு வாழ்க்கையின் போதும் சரி இறக்கும் உணவு உறைவிடம் அளித்தவர்
ஆத்தங்குடி காடன் செட்டியார்.
அவர் பொறுப்பில் குன்றக்குடி மலைக்கோயில் கட்டப்பட்டது.கோ
யிலில் காடன் செட்டியாருக்கு சிலை உண்டு.
மேலும் காரைக்குடியிலிருந்து
குன்றக்குடி செல்லும் சாலையில்
காடன்செட்டியார் நினைவு வளைவு உள்ளதும் குறிப்பிடத்தக்க
து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக