திங்கள், 20 மார்ச், 2017

ஆக்சிஜன் 70% கடல் தருகிறது ஆறு கலக்கவேண்டும் நீர்மேலாண்மை மழை அறிவியல் சுற்றுசூழல் வேளாண்மை

aathi tamil aathi1956@gmail.com

17/10/16
பெறுநர்: எனக்கு
Star Mahesh
நாம் சுவாசிக்கும் பிராணவாயு (oxygen) எதனால் அதிகம் தயாராகிறது என்று
தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்படுவோம்.
கடல் தான் ஆக்சிஜனில் 70 சதவீதத்தை தயாரித்து நமக்கு தருகிறது. அதுவும்
கடலில் உள்ள தாவரங்கள் - பிளான்க்ட்டூன்ஸ், கடல் புல் - என்று கடல்
முழுவதும் நிறைந்து இருக்கும் சிறிய சிறிய தாவரங்கள் தான் முக்கிய
பங்காற்றுகின்றன. மீதம் உள்ளதில் 28% மழைக்காடுகளும், 2% பிற விசயங்களும்
நமக்கு தேவையான ஆக்ஸிஜனை தயாரித்து தருகின்றன. அதுவும் குறிப்பாக
Prochlorococcus என்னும் தாவர வகை பிளான்க்ட்டூன்தான் நமக்கு அதிகமான
ஆக்ஸிஜனை தயாரித்து தருகிறது. ஒரு துளி நீரில் இந்த Prochlorococcus பல
லட்சம் கோடிகள் இருக்கும்,அவ்வளவு சிறிய உயிரினம். நாம் ஐந்து முறை
சுவாசித்தால் அதில் ஒரு மூச்சுக்கு தேவையான ஆக்ஸிஜனை இந்த
Prochlorococcus தான் தயாரிக்கின்றன. யோசித்து பாருங்கள். இந்த சின்ன
உயிரினம் நமக்கு எவ்வளவு தேவையானது என்று. இந்த சின்ன சின்ன உயிரினங்கள்
தங்களுக்கு தேவையான உணவை ஒளிச்சேர்க்கை (photosynthesis) மூலம் உற்பத்தி
செய்யும் போது ஆக்ஸிஜனை துணை பொருளாக (bye -product ) உற்பத்தி
செய்கின்றன. கடலில் உள்ள சின்ன உயிரினங்களுக்கு தேவையான கனிமங்களை எது
தருகிறது தெரியுமா? நன்னீரை சுமந்து செல்லும் ஆறுகள் தான். அதனால் தான்
பருவகாலங்களில் இந்த சின்ன உயிரினங்கள் நன்றாக செழித்து வளருவதாக
ஆய்வுகள் சொல்லுகின்றன.
இப்போது புரிகிறதா ஏன் ஆற்று நீர் கடலில் சென்று கலக்க வேண்டும் என்று?
நன்னீர் ஆறுகள் கடலில் கொண்டு போய் கனிமங்களை சேர்த்தால் தான் கடல்
உயிரினங்கள் சிறப்பாக வாழும், அவை சிறப்பாக வாழ்ந்தால் தான் நமக்கு
ஆக்சிஜென் கிடைக்கும். நதிகள் இணைப்பு என்பது சொந்த காசில் சூனியம்
வைத்து கொள்வதுதான்.
அதுமட்டுமல்ல கடல் இன்னொரு மிகப்பெரிய ஆபத்தையும் சந்தித்து கொண்டு
இருக்கிறது. கடல் வாழ் உயிரினங்கள் எப்போது நன்றாக வாழ முடியும்
தெரியுமா? கடலின் வெப்பமும், உப்பு தன்மையும், அமில தன்மையும் சீராக
இருந்தால்தான்.
மத்திய மீன் வழ ஆய்வு நிறுவனம் (CMFRI) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில்
கடலின் வெப்பம் 0.8 டிகிரி உயர்ந்து விட்டதாகவும் அதுவும் குறிப்பாக
இந்திய பெருங்கடல் (நம்ம குமரி கடல்தான்) பகுதியில் தான் இந்த வெப்பம்
அதிகரித்து உள்ளதாகவும், அதனால் கடல் தாவரங்கள் அழிந்துவருவதாகவும்,
மீன்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் குளிர்ந்த பகுதியாக உள்ள வங்காள
விரிகுடா பக்கம் அதிகமாக சென்று விட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த பகுதியில் வெப்பம் அதிகமாக முக்கிய காரணம் நாம் கடலில் கொண்டு பொய்
சேர்க்கும் கழிவுகள் மற்றும் புவி வெப்பமாதல் (அதற்கும் நாம்தான்
பொறுப்பு). இந்த நிலையில் தான் இந்த பகுதியில் மேலும் கடலை வெப்பமாக்க 6
அணு உலைகளை கட்ட இருக்கிறோம். கூடங்குளத்தில் 6அணு உலைகளும்
கட்டிமுடிக்கப்ப
டும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் கோடி லிட்டர் சுடுநீர் கடலில்
பொய் சேர இருக்கிறது. நினைத்து பாருங்கள், ஏற்கனவே அதிக வெப்பம் உள்ள
பகுதியில் மேலும் சுடுநீரை கொண்டு போய் சேர்த்தால் என்ன ஆகும்?
Sundar Rajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக