சனி, 25 மார்ச், 2017

பாலாறு வரும் நீரையாவது காக்க தடுப்பணை 50 கிராம மக்கள்

aathi tamil aathi1956@gmail.com

2/4/16
பெறுநர்: எனக்கு
பெ பழநி , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
திருமுக்கூடல் தடுப்பணை
ஏன்? எதற்கு?
அன்பிற்குரிய தமிழக மக்களே...
பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வோராண்டும் பாலாற்றில் வெள்ளம்
வந்துள்ளது. சில மாதங்கள் ஓடும் தண்ணீரால் இருபுறமும் நீர்வளம்
பெருகியுள்ளது. ஆற்றுக்கால்வாய்களில் செல்லும் தண்ணீர் ஏரிகளில்,
நிலங்களில் பாய்ந்து விளைச்சலைப் பெருக்கின. மக்கள் பசியின்றி,
கவலையின்றி வாழ்ந்தது வரலாறு.
கருநாடக, ஆந்திர அரசுகள் பாலாற்றின் குறுக்கே கட்டிய அணைகள்,
நீர்த்தேக்கங்ள், தடுப்பணைகள் ஆகியவற்றால் கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர்
வருவது இல்லாமல் போனது.
பாலாற்றின் துணை ஆறான செய்யாற்றில் ஒவ்வோராண்டும் வரும் தண்ணீரே
பாலாற்றின் நீராதாரமாக மாறிப்போனது.
தண்ணீர் வராத பாலாறு மணல் அள்ளும் அவலத்திற்குள்ளாகி அரசியல்வாதிகளுக்கு
அமுத சுரபியாக மாறிப்போனது.
எனவே, பாலாற்றில் தண்ணீர் தேக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றியும்,
மக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமலும் அரசியல்வாதிகள் செயல்படும் அவல
நிலை உருவானது.
இதனால், ஏரிகள் காய்ந்து, கால்வாய்கள் தூர்ந்து, நிலங்கள் வறண்டு பாலை
வனமானது. மக்கள் வேலைவாய்ப்பிழந்து சுயசார்பினை இழந்து, வெளிநாட்டுத்
தொழிற்சாலைகளில் கூலிக்காரர்களாய் மாற்றப்பட்டுவிட்டனர்.
அங்கும் நிர்ந்தர வேலையின்மையால், அதிக உற்பத்தியில் ஈடுபடும் நவீன
கொத்தடிமையாய் மாற்றப்பட்டுவிட்டனர்.
பாலாறு...
நமக்கு குடிநீர் தந்தது, தந்து வருகின்றது.
நமது நிலங்களுக்கு தண்ணீர் தந்தது
நமது கிராமங்களை செழிப்புறச் செய்தது
நமக்கு வேலைவாய்ப்பளித்தது
நமது சுயசார்பிற்கு ஆதாரமாய் இருந்தது.
இதற்கும் அப்பால்....
இப்பகுதியின் உயிர்ச் சூழலை பராமரித்தது
நமக்கு மீன் உணவினைத் தந்தது
நமது பகுதியின் மண்வளத்தை, வனவளத்தைப் பேணியது
மக்கள் எவ்வித குற்றஉணர்வும் இன்றி வாழ வழிவகுத்தது.
25 ஆண்டுகாலமாக வெள்ளம் வராத பாலாற்றுப் படுகை இன்னமும் கூட.....
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 94 கிராமங்கள்,
வாலாஜாபாத் ஒன்றியத்தில் 21 கிராமங்கள்,
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 52 கிராமங்கள்,
மதுராந்தகம் ஒன்றியத்தில் 20 கிராமங்கள்,
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 15 கிராமங்கள்,
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 13 கிராமங்கள்,
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 13 கிராமங்கள்,
லத்தூர் ஒன்றியத்தில் 21 கிராமங்கள்,
என மாவட்டத்தில் உள்ள 249 கிராமப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குகின்றது.
இதற்கும் மேல்.....
சென்னைப் புறநகராக உள்ள ஆலந்தூர்-பல்லாவரம் கூட்டுக்குடிநீர் திட்டமும்,கல்பா
க்கம் அணுமின் உலைக்கும், அரக்கோணம் கடற்படை விமானதளத்திற்கும் தண்ணீர்
தருகின்றது பாலாறு.
பாலூரில் அமைந்துள்ள ரயில்நீர் தொழிற்சாலை மூலமாக பாலாற்றுத் தண்ணீர்
தென்னிந்திய ரயில்வேயின் பல மாநில பயணிகளுக்கும் குடிநீராகின்றது.
(வேலூர், திருவண்ணாமலை மாவட்ட திட்டங்கள் குறிப்பிடப்படவி
ல்லை).
இன்று...
பாலாற்றில் அண்டை மாநிலங்கள் தண்ணீரைத் தடுத்து விட்டன.
அதைக் கேட்க நாதியற்ற சமூகமாக நாம் மாறிவிட்டோம்
நமது உள்ளூர் அரசியல்வாதிகளை சுயநலமிகளாக மாற்றி இயற்கை வளத்தை-மணலை
கொள்ளையிட வைத்தது. அவர்களை மக்கள் விரோதிகளாக மாற்றிவிட்டது.
இது அவர்களை வெறுக்க நம்மையும், நம்மை வெறுக்க அவர்களையும் தூண்டி
சமூகத்தையே குற்ற உணர்வோடு வாழச் செய்துள்ளது.
வீட்டிலிருந்து வெளியே செல்வோர் வீடு திரும்பும்வரை மணல் லாரிகளால் என்ன
நடக்குமோ என அஞ்சும் சூழல் சாதாரணமான ஒன்றல்ல.
எனவே..... பாலாற்றை மறுபடியும் உயிர்ப்பு மிக்க தண்ணீர் ஓடும் ஆறாக மாற்ற
வேண்டியது நம் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அதுவே நமது
குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வல்லது. இல்லையேல் வரும் ஆண்டுகளில்
குடிநீருக்காக ஒவ்வொரு குடும்பமும் செலவிடும் பணம் என்பது பெரும் தொகையாக
மாறிவிடும்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாலாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவதே.
தடுப்பணைகள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெள்ளத்தையும் தேக்கிவைத்து
சில ஆண்டுகளுக்கு நமக்கு வழங்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
பாலாற்றின் நெடுகிலும் தடுப்பணைகள் வேண்டும் என்றாலும்கூட முதலில்
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு கலக்கும் திருமுக்கூடலில் தடுப்பணை
கட்டுவது நமக்கு பெரும் பயன் விளைவிக்கும். இதனால்...
மக்களுக்கு.........
பாலாற்றில் செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் நீடித்த பயன்கொடுக்கும்.
குடிநீருக்காக தனிநபர் செலவினம் குறையும்
பாலாற்றுப் படுகையில் நிலத்தடி நீர்மட்டம் பெருகும். அது விவசாயத்தை
உயிர்ப்பிக்கும்
அரசிற்கு........
புதிய குடிநீர் திட்டங்கள் தீட்டும் செலவு மிச்சமாகும்
குடிநீர் வழங்கல் முறைப்படுத்தப்ப
டும்.
குடிநீர் பற்றாக்குறையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாமல் இருக்கும்
எனவேதான்......
திருமுக்கூடல் பாலாற்றில் தடுப்பணை வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
தேர்தலில் பங்குபெறும் அரசியல் கட்சிகளுக்கு இதன் தேவையை வலியுறுத்தும் விதமாக,
அவர்களின் தேர்தல் அறிக்கையில் தடுப்பணை அமைப்போம் என சேர்த்திடக் கோருவோம்.
மக்கள் தடுப்பணை அமைத்து அவர்களின் கவனத்தைக் ஈர்ப்போம்
அடுத்து எவர் ஆட்சி அமைப்பினும் தடுப்பணையை அமைத்திட வழிசெய்வோம்.
எளிய முறையில், குறைந்த செலவில், தடுப்பணை அமைப்பதற்கான திட்டத்தை முன்வைப்போம்.
ஊழலற்ற முறையில் அதைச் செயல்படுத்த அரசினை வலியுறுத்துவோம்.
மக்களுக்குத் தேவையானதை தேர்தல் அறிக்கையில் வழங்கும் போக்கினை அரசியல்
கட்சிகளிடம் ஏற்படுத்துவோம்.
மக்களுக்கான தடுப்பணை அமைக்க
தடுப்பணைக்கான மக்களாய் அணி திரள்வோம்.
தண்ணீர் என்பது மக்களின் உரிமை
அதைத் தரவேண்டியது அரசின் கடமை
29 மார்ச
https://mobile.facebook.com/story.php?story_fbid=10207774807782692&id=1068920704&refid=17&_ft_=top_level_post_id.189988248050822%3Atl_objid.189988248050822%3Athid.100011189436076%3A306061129499414%3A2%3A0%3A1462085999%3A8326671494829162160&__tn__=%2As&fbt_id=10207774807782692&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_a70814b7a9528a954b5135e48dec50b3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக