|
19/7/16
| |||
1981 ஆம் ஆண்டின் மே மாதம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட சபைத் தேர்தல்கள்
அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசாரம் உச்சத்தில் இருந்தது. தேர்தல்
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில்
இருந்து சிங்களக் காவலர்கள் வந்திருந்தனர்.
போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதில் சிங்கள காவலர் ஒருவர் மரணம் அடைந்தார்.
1930களில் இலங்கைத் தீவு முழுவதும் அரசு வேலைகளில் 80% நிறைந்திருந்தோர்
யாழ் தமிழர்கள்.
அதிலும் குறிப்பாக வெள்ளாளர் மற்றும் காராளர் சாதியினர்.
இவர்கள் கல்வியறிவுக்கு உந்துசக்தியாக இருந்தது யாழ் நூலகம்.
(இதே போல அன்று தென்னிந்தியா முழுக்க அரசு பதவிகளிலும் சமஸ்தான
பதவிகளிலும் நிறைந்திருந்தோர் சென்னையைச் சுற்றியிருந்த தமிழ்ப்
பார்ப்பனர்.
இவர்களை ஒழிக்க உருவானதுதான் திராவிடம்.
சிங்களத்தைப் புகுத்தி இருபதே ஆண்டுகளில் 80% அரசு பணிகளில் சிங்களவர் நிறைந்தனர்.
இதே போல திராவிடம் இடவொதுக்கீடுக்காகப் போராடி
பார்ப்பனர் எதிர்ப்பு அரசியலில் ஆட்சியைப் பிடித்து அரசு வேலைகளில் 60%
தமிழரல்லாதார் நிறைந்தனர்)
அதை அழித்துவிட்டால் தமிழர்களின் எதிர்காலத்தையே சீர்குலைத்துவிடமுடியும்
என்று சிங்களவர் கணித்தனர்.
நூலகத்தை எரிக்கும் பொறுப்பு இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிறில் மேத்யூ மற்றும் காமினி திசநாயகா என்ற இரண்டு அமைச்சர்கள் களத்தில்
இறங்கினார்கள்.
(பின்னாளில் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா கொடுத்த வாக்குமூலம் இது)
கொழும்புவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வன்முறையாளர்களை
யாழ்ப்பாணம் நகரத்துக்கு அழைத்துவந்து தங்கவைத்தனர்.
என்ன செய்வீர்கள் என்று தெரியாது.. யாழ் நூலகம் எரிக்கப்படவேண்டும்.
இதுதான் அந்த வன்முறையாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த உத்தரவு.
நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக்
கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும்
மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள்,
ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை
நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்கள போலீசார்.
தமிழர்கள் கண் முன்பே எரிந்துகொண்டிருந்தது அவர்களின் பல ஆண்டு அறிவு சேமிப்பு.
நூலகத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 97000 நூல்கள் கருகிச்
சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த
நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின.
கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி,
ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில்
இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன
பொக்கிஷங்களில் அதிமுக்கியமானவை.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையச்
செய்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பன்மொழிப் புலவர் தாவீது அடிகளார்
அதிர்ச்சியில் மரணம் அடையும் அளவுக்கு இருந்தது யாழ் நூலக எரிப்பின்
தாக்கம்.
www.tamilpaper.net/?p=4711

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக