ஞாயிறு, 19 மார்ச், 2017

பஞ்சம் 1876 1878 காரணம் விளைவு ஆங்கிலேயர்

aathi tamil aathi1956@gmail.com

மார். 6 (13 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
ஆனந்தன் சன்னாசி
1876-1878 தாதுவருட பஞ்சம்
.
1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை
மாகாணத்தைக் கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும்
பஞ்சம், தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம்,
1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இரு ஆண்டுகள்
நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் (சென்னை,
மைசூர், பம்பாய், ஐதராபாத்) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில்
ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில்
ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர்.
இப்பஞ்சத்தின் விளைவாக பிரிட்டிஷ் அரசு பஞ்சக் குழுமத்தைத் தோற்றுவித்து
பஞ்ச விதிகளை (Famine Code) வகுத்தது.
சிப்பாய் கலகத்திற்குப் பிறகு 1858 இல் சென்னை மாகாணம், கிழக்கிந்தியக்
கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக்
கட்டுப்பாடின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், புகைவண்டிகள்,
தானிய ஊக வாணிகம், புதிய பணப் பயிர்கள், ஏற்றுமதி என பல நவீன முறைகளை
இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்து,
தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது. 1876 ஆம் ஆண்டு
எல் நீனோ பருவநிலை மாற்றத்தால், தக்காணப் பீடபூமி முழுவதும் பருவமழை
பொய்த்தது. உணவு தானியங்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது. உணவு தானிய
உற்பத்தி குறைந்தாலும், ஏற்றுமதி குறையவில்லை. சந்தைப் பொருளாதாரத்தில்
அசையா நம்பிக்கை கொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள், ஏற்றுமதியை தடை
செய்து, பற்றாக்குறையைப் போக்க விரும்பவில்லை. பதுக்கல் பரவலாகி, உணவு
தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனதால், விவசாயிகள் அடுத்த
வருடத்திற்கான விதை நெல்லை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால்
அடுத்த வருடம் பயிரிடப்பட்ட நில அளவு வெகுவாகக் குறைந்து, உணவுப்
பற்றாக்குறை தீவிரமடைந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமெனக் கருதப்படும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட பட்டினிச் சாவுகள் மிகுந்தன என்று பஞ்ச
நிவாரண குழு உறுப்பினர் வில்லியம் டிக்பி தனது ஃபேமைன் கேம்பைன்ஸ் இன்
சவுத் இந்தியா என்ற நூலில் தெரிவித்துள்ளார்
இவ்வாறு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதால் விழித்துக் கொண்ட காலனிய அரசு
எதிர்காலத்தில் பஞ்சங்களை எதிர்கொள்ள பஞ்ச விதிகளை வகுத்தது. பஞ்சத்தின்
கடுமையிலிருந்து தப்பிக்க தென்னிந்தியர் பலர், மொரீஷியஸ், பிஜி, இலங்கை,
பர்மா போன்ற பிரிட்டனின் பிற காலனிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகப்
புலம் பெயர்ந்தனர். அவர்களது வம்சாவளியினர் இன்றும் அந்நாடுகளில் வசித்து
வருகின்றனர்.
.
1876 ஆம ஆண்டு ஏற்பட்ட அதே அளவு மழை பற்றாக்குறை இந்த ஆண்டும்
ஏற்பட்டுள்ளது. தாதுவருடப் பஞ்சத்தால் ஏற்பட்ட தானியப் பற்றாக்குறைக்கு
கிழக்கிந்தியக் கம்பெனியார் பெருமளவு தானியங்களை ஏற்றுமதி
செய்ததனால்தான். இப்போது வேறு விதமான பிரச்சினை நிலவுகிறது. சாகுபடிப்
பரப்பு மற்றும் நீராதாரங்கள் ரியல் எஸ்டேட்காரர்களில் கோரப் பிடியில்
சிக்கி குறுகிவிட்டது. பொது வினியோகத் திட்டத்தினால் ஓரளவு உணவு
பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றாலும், நீராதாரமான குளம் கண்மாய்,
ஆறுகளில் சிறிதும் தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகளின் நிலை
பரிதாபத்திற்குறியதாகிவிடும்.

https://m.facebook.com/story.php?story_fbid=765588780265734&id=100004438571442&refid=28&_ft_=qid.6394182302393887985%3Amf_story_key.-7712494853410838826%3Atop_level_post_id.765588780265734&fbt_id=765588780265734&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_ecbfd69c197938ce9562dacc44a90383

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக