சனி, 25 மார்ச், 2017

காரவேலன் 1300 ஆண்டு தமிழ் கூட்டணி

aathi tamil aathi1956@gmail.com

11/4/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
காரவேலனால் பொறிக்கப்பட்ட அத்திக்கும்பா கல்வெட்டு மொழிபெயர்க்கப்
பட்டமை, பலருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, பொறாமை போன்ற பல்வேறு
உணர்ச்சிகளின் தாக்கம் கொண்டதாக உள்ளது. கல்வெட்டின் 10-11-ம் வரிகளில்,
தமிழ்வேந்தர்களின் கூட்டணிப் படையான 'தமிழர் கூட்டணிப் படை' என்பது 1330
ஆண்டுகள் நீடித்திருந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் அக்கூட்டணி
கண்டிப்பாக 1300 ஆண்டுகள் நீடித்ததாக இருந்திருக்காது என்றும், உண்மையில்
113 ஆண்டுகள் மட்டுமே நீடித்திருந்திருக்க வேண்டும் என்றும் கூறி,
இத்தகைய தமிழர் கூட்டணிப் படையைக் காரவேலன் உடைத்ததாகவும் திருத்தி
அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அக்கல்வெட்டில் தமிழர் கூட்டணிப்
படையானது நீடித்தமை 1300 ஆண்டுகள் என்றே மிகத் தெளிவாக உள்ளதாகப் பல
ஆங்கில, ஹிந்தி, சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள் தெரிவித்துள்ளன.
அதாவது, வியப்பிற்குரிய வகையில், கி மு இரண்டாம் நூற்றாண்டிற்கும் 1330
ஆண்டுகள் முன்பாகவே (!!!) இக்கூட்டணிப் படை இருந்ததாகக் கல்வெட்டில்
சொல்லப்பட்டிருந்தும், தமிழ்க் கூட்டணிப் படை 1300 ஆண்டுகள் பழமையுடையதாக
இருக்கமுடியாது எனவும், 1300 ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்ப
ட்ட காலக்குறிப்பு எனக்கூறி, உண்மையில் இது 113 ஆண்டுகளாகவே
இருக்கமுடியும் எனவும், அதன் மொழிபெயர்ப்பில் திருத்தம்
செய்யப்பட்டுள்ளது.
திருத்தமும், திருட்டும் எங்கிருந்து, எதற்காகச் செய்யப்பட்டுள்ளது என்று
புரிகிறதா நண்பர்களே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக