|
பிப். 23
| |||
பாரதிசெல்வன் இலரா
முகநூலில் கவின்மலர் :- இந்தியா டுடேயில் பணியாற்றியபோது ‘யானைப்
பாதையின் மனிதர்கள் அட்டகாசம்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன்.
அதில் காருண்யா, ஈஷா, மாதா அமிர்தானந்தமாயி நிறுவனங்களும், மேலும் பல
தனியார் நிறுவனங்களும் எப்படி மேற்குத் தொடர்ச்சி மலையின் யானைகள்
வழித்தடத்தை ஆக்ரமித்து சட்டத்துக்குப் புறம்பான கட்டிடங்களைக் கட்டி
இருக்கின்றன என்று எழுதியிருந்தேன். கோவை சிவா இதில் பேருதவி செய்தார்.
அந்தக் கட்டுரை எழுதுவதற்காக இரண்டு இரவுகள் யானைகள் உலவும் காடுகளில்
வனத்துறையினருடன் சுற்றித் திரிந்தேன். திகிலான த்ரில்லிங்கான புதுவித
அனுபவமாக இருந்தது. யானைகள் தாக்கியதில் பலரும் இறந்துகொண்டிருந்த சமயம்
அது. யானை தாக்கி உயிரழந்தோரின் குடும்பங்களையும் சந்திக்க முடிந்தது.
ஒவ்வொரு நிறுவனத்தின் மலையடிவாரப் பகுதிக்கும் சென்று எப்படியெல்லாம்
ரிசர்வ் காட்டு எல்லைக்குள் தங்கள் வளாகங்களை அமைத்திருக்கின்றன என்பதைக்
கண்டறிந்தேன். அதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டி இருந்தது. ஒருமுறை வனத்துறைக்
காவலர் ஒருவர் மனம்வந்து உதவியதில் அமிர்தானந்தாமாய
ி பல்கலைக்கழகத்திற்குள் வனத்துறை அதிகாரி என்று பொய் சொல்லி உள்ளே
நுழைந்து பின்பகுதிக்குச் சென்று பார்த்தோம். “மேடம் வந்திருக்காங்க.
..பவர் ஆஃப் பண்ணு” என்றார் செக்யூரிட்டி. அதாவது மின்வேலியில் மின்சாரம்
பாய்வதை கொஞ்ச நேரம், நாங்கள் பார்த்துத் திரும்பும்வரை தடுத்து
வைத்திருந்தனர். எனக்கு அந்த வேலியைக் கையால் தொடவும் தயக்கமாகஇருந்தது.
ஏனெனில் அந்த மினவேலியில்தான் யானைகள் பலவற்றுக்கு மின்சாரம் தாக்கிய
கதையை எல்லாம் வாசித்துவிட்டுச் சென்றிருந்தேன். திடீரென நான்
பத்திரிகையாளர் என்று கண்டுபிடித்துவிட்டால் அதோகதிதான். பின்
ஈஷாவுக்குச் சென்றபோது அங்கிருந்த மலைவாழ் மக்கள் ஈஷாவைத் திட்டித்
தீர்த்தனர். ஜக்கி வாசுதேவ் அங்கு மலையில் உள்ள ஓர் ஓடையையே தனதாக்கி
திசைதிருப்பி தன் ஆசிரமத்துக்கு அந்தத் தண்ணீரை பயன்படுத்திவருக
ிறார். ஏராளமான கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் கட்டி இருந்ததைப்
பார்க்க முடிந்தது. இப்படி மறக்க முடியாத பல அனுபவங்களை எனக்குத் தந்த
இந்தப் பயணத்தை முடித்துவிட்டு கட்டுரையை எழுதி விட்டேன்.
அந்தக் கட்டுரை தமிழில் மட்டுமல்லாது மொழிபெயர்க்கப்ப
ட்டு, இந்தியாடுடே மலையாளம் மற்றும் தெலுங்கிலும் கூட வெளியானது.
அடுத்த சில நாட்களில் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு
வெளியாகவிருந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் ஆட்கள் டில்லி சென்று இந்தியா
டுடே தலைமையைப் பார்த்துவிட்டு வந்தனர். ஆகவே ஆங்கிலத்தில் அக்கட்டுரை
வெளியாகாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். பின்னர் சென்னையில் உள்ள எங்கள்
அலுவலகத்திற்கு வந்தனர்.
காவி உடையில் சிலர் வந்து ‘கட்டுரையை எழுதியவரைப் பார்க்கவேண்டும்’ என்று
கேட்க, எங்கள் மேனேஜிங் எடிட்டர் ராஜீவ் என்னைப் பார்க்க அவர்களை
அனுமதிக்கவில்லை
.’வேண்டுமானால் என்னிடம் பேசுங்கள்’ என்று அவரே நேரடியாகப் பேசினார்.
“நாங்கள் மரங்களை அழிக்கிறோம். காடுகளை அழிக்கிறோம்’ என்றெல்லாம் எழுதி
இருக்கிறீர்கள். எங்களுக்கு கேரளாவில் நிறைய டிவோட்டீஸ் உண்டு.
மலையாளத்தில் எல்லாம் எழுதிவிட்டீர்கள். எங்கள் நற்பெயருக்குக் களங்கம்
விளைவித்தீர்கள். ஆகவே அதற்கு பிராயச்சித்தமாக நாங்கள் செய்யும் நலல்
விஷயங்களையும் நீங்கள் எழுதவேண்டும் அடுத்தவாரம்” என்று கோரிக்கை
வைத்தனர். “நீங்கள் அப்படி என்ன நல்லது செய்கிறீர்கள்” என்று எங்கள்
மேனேஜிங் எடிட்டர் கேட்க, “நாங்கள் லட்சக்கணக்கான மரங்கள்
நட்டிருக்கிறோம்” என்று பெருமை பொங்க சொல்ல, நன்றாக அவர்களின் மூக்கை
அறுத்தார் மேனேஜிங் எடிட்டர்.
“இருக்கும் காட்டை அழித்துவிட்டு கண்ட இடத்திலும் மரம் நடுவது அறிவீனம்”
என்று சொல்லிவிட்டார். அவர்கள் தோல்வியோடு திரும்பிச் சென்றனர்.
ஆங்கிலத்தில் அக்கட்டுரையை தடுத்தி நிறுத்திவிட்ட துயரம் எனக்கு இன்னும்
இருக்கிறது. ஆங்கிலத்தில் வந்திருந்தால் அதன் தாக்கமே வேறு. ஆனால் என்ன
செய்வது. நம்மை விட் எதிரி பலம் வாய்ந்தவனாகவும் அரசும் ஆதரிக்கையில்
என்னதான் செய்வது என்கிற எரிச்சல் மிஞ்சியது.
இன்று மோடி அங்கு வரப்போவதும் காட்டை அழித்து சிலை அமைப்பதுமான ஈஷா
மையத்தின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்டுவது எப்படி? பூவுலகின் நண்பர்கள்
தொடுத்த வழக்கு இருக்கிறது. முடிவு எப்படி வருமென்று பொறுத்திருந்து
பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக