|
7/12/16
| |||
நவீன் குமரன்
வாண்மங்கல விழவும், வெற்றித்திருவிழவும்
==============================
=============
பெயரைக்கேட்டவுடன் ஏதோ பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவா என்று
யோசிக்காதீர். இன்றும் கொண்டாடி வரும் விழாதான். ஆயுத பூஜை, விஜயதசமி
என்று அழைக்கப்படும் அதே விழாதான்.
வழக்கம்ப்போல் அனைத்து விழாக்களும் ஆரியர்களுக்கு தாரை வார்க்கும்
திராவிடர்கள், இந்த விழாக்களும் நாயக்கர் ஆட்சியில் வந்த விழாக்கள் தான்.
தமிழர் விழாக்கள் இல்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கொற்றவை வழிபாடு என்பது பண்டைய தமிழ் சமூகத்தின் ஓர் அங்கம். சிந்து
சமவெளி நாகரிகம் முதல் தாய்தெய்வ வழிபாடு செய்து வருபவர்கள் தமிழர்கள்.
புரட்டாசி திங்களின், அத்தம் நாள்மீன் தொடங்கி திருவோணம் நாள் வரை, பெண்
தெய்வ வழிபாடு செய்யபடுகிறது. இதின் ஒன்பதாவது நாள், மா நவமி என்று
அழைக்கப்படும் ஆயுத பூசை. ஆயுதங்களுக்கு பூசை செய்வது தமிழர் தொன்று
தொட்டு செய்து வருவது.
ஆயுத பூசை/வாண்மங்கல விழவு/வாளுடை விழவு
==============================
==================
கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் (சிலம்பு - வேட்டுவவரி, 16-17)
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை
கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும்
கொடுமரமுன் செல்லும் போலும் (வேட்டுவவரி, பா.13)
மேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில், கொற்றவைக்குச் செய்யவேண்டிய
நேர்த்திக் கடன்களைச் செலுத்தவில்லை யென்றால் அவள் உங்கள் வில்லுக்கு
வெற்றியைத் தரமாட்டாள் என்றும் இரண்டாம் மேற்கோளில், வீரர்கள் கையில்
வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரையைக் கவரப்
போகும்போது, தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக்
கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும் என்றும் வேட்டுவரி
கூறுகிறது. கொற்றவை பழைய வேட்டைச் சமூகத்திற்கு வில்லுக்கு வெற்றி
தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரைகவரத்
துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள்
இதிலிருந்து, போரில் வெற்றிப்பெற ஆயுதங்களை வைத்து கொற்றவையிடம் பூஜை
செய்வது பண்டைய தமிழர் வழக்கம் என்று தெரிகிறது.
பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடி (பெரிய புராணம்)
இந்த திருமுறை பாடலில் மா நவமி என்று அழைக்கப்படும் ஒன்பதாம் நாளான,
மங்கல விழாவிற்கு முன் அரசின் போர் யானை நீராட்டி கொண்டுவரப்படிருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போருக்கு பயன்படும் வாகனங்களுக்கும்
(யானை,குதிரை,தேர்) பூஜை நடந்துள்ளது. அந்தப்பழக்கமே இன்றும்
வாகனங்களுக்கு புஜை செய்யும் வழக்கமாக தொடர்கிறது.
தொல்காப்பியத்தில் திணைக்கு பாடான் திணையில், “”மானார்ச் சுட்டிய
வாண்மங்கலமும்” (பொருள் அதிகாரம் – 91) என்று ஆயுத பூசை பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர்,
வெற்றி பெற்றவர் என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள்.
ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர்க் கலங்களை நீராட்டிப் பூசை
செய்கிறார்கள் என்பதுதான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட
வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை
போற்றிப் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறத
ு தொல்காப்பியம்.
எதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தைச்
சொல்வது உழிஞை திணை. இதில், “”வென்ற வாளின் மண்ணோ டொன்ற” (பொருள்
அதிகாரம் – 68) என்று வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு
உணர்த்தப்படுகிறது.
“”றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).
மள்ளர்கள் கேடயத்தையும் பூ மாலைபோல் பல வாள்களைக் கட்டி தொங்க விட்டும்,
அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டும் வணங்கினர் என்ற
செய்தியை இந்த பதிற்றுப் பத்து பாடல் தெரிவிக்கிறது.
தொண்டைமான் ஆயுதங்களுக்கு பூஜை நடத்திய செய்தியையும் ஒளவையார் சங்கப்
பாடல் ஒன்றில் பதிவு செய்கிறார்.
விஜயதசமி/வெற்றித்திருவிழா
==============================
பத்தாம் நாளில், திருவோணத்தன்று மகிசனை கொற்றவை அழிக்கிறாள். கொற்றவை
மகிசனை கொன்றதை சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது.
அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை
மொழிபெயர்ப்பைக் காணவும்
4 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக