|
6/11/16
| |||
Nadesapillai Sivendran
தற்காலத் தமிழ்த் தேசியத்தின் முன்னோடிகள் தமிழ்ப் பார்ப்பனர்களே
****************************** ******************
"உலகில் தேசிய இயக்கங்களுக்கென
்று ஒரு பொதுத் தன்மையுண்டு. ஒவ்வொரு தேசியத்திலுமுள்ள மிக உயர் மட்டத்திலிருப்ப
வர்களிடமிருந்து தோன்றுவதே அந்தப் பொதுத் தன்மை.பெரும்பால
ான நேர்வுகளில் இவ்வாறு தொடங்கிவைக்கும் குழுவினரின் பங்கு வெளி
உலகுக்குத் தெரியுமுன்பே அவை அவ்வியக்கத்திலிருந்து
விலகிப்போகும்.அவ்வாறு தமிழகத்தில் தமிழகத் தேசியத்தைத் தொடங்கி
வைத்தவர்கள் தமிழ் பேசும் பார்ப்பனர்களாகும்.
கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைக் கைப்பற்றியாண்ட தெலுங்கு,
மராட்டியம், கன்னடம் ஆகிய மொழி அரசுகளின் காலத்தில் அரசு அதிகாரத்திலும்
கோயில்களின் ஆளுமையிலும் அம்மொழி பேசும் பார்ப்பனர்கள் அமர்ந்துகொண்டனர்.
தமிழர்களின் மொழியையும் பண்பாட்டையும் சமற்கிருதத்திலிருந்து உருவானவை
என்றும் அவர்கள் கூறி வந்தனர்.
இதற்கு மறுப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள் பாண்டித்துரைத் தேவரின் தமிழ்ச்
சங்கம் மூலமாகவும் தனியாகவும் ஆய்வுகள் செய்து தமிழ்ப் பண்பாட்டின்
தனித்தன்மையை நிறுவினர். மு.இராகவய்யங்கார், இரா. இராகவய்யங்கார்,
கிருஷ்ணசாமி அய்யங்கார், பி.டி. சீனிவாசய்யங்கார், வி.ஆர். இராமச்சந்திர
தீட்சிதர் போன்றவர்கள் இவ்வரிசையில் முன்னணியில் நிற்கின்றனர்.தன்
பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று தனித்தமிழில் மாற்றித் தனித்தமிழ்
இயக்கத்துக்கு வித்திட்ட சூரியநாராயண சாத்திரி ஓர் ஒளி விளக்காய்த்
திகழ்கிறார்.
இந்த எழுச்சி வரலாற்றில் பிற்போக்கு விசைகளும் வலிமையாயிருந்தன.
அவற்றுக்கு ஊக்கம் தந்தவர்கள் இறையியல் கழகத்தை உருவாக்கிய அமெரிக்கராகிய
ஆலிவர் ஆல்காட்டும் உருசியரான பிளாவட்கி அம்மையாரும்.
தமிழ்த் தேசியத்தைத் திசை திருப்பிய இன்னொரு முகாமையான கூறு
ஆரிய - திராவிட வரலாற்றுக் கோட்பாடாகும்.
இதுவும் மேலையரால் உருவாக்கப்பட்டத
ே.செருமானியரான மாக்சுமுல்லரால் ஆரியக் கோட்பாடு உருவாக்கப்பட்டது.
கால்டுவெல் ஐயரால் திராவிடக் கோட்பாடு உருவானது.ஆரியர்கள் நடு
ஆசியாவிலிருந்தும் திராவிடர் நண்ணிலக் கடற் பகுதியிலிருந்தும் வந்தனர்
என்று இவர்கள் கூறினர்.
திராவிடர்வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கூற்றைத் தமிழர்கள் ஏற்றுக்
கொள்ளவில்லையாயினும் சாதி ஏற்றத்தாழ்வினால் உருவான ஒரு குமுகச் சிக்கலை
இனச் சிக்கலாகப் புரிந்து கொண்டனர்.
ஆரிய இனக் கோட்பாட்டை அறிஞர்களின் கடும் எதிர்ப்பினால் மாக்சுமுல்லர்கை
விட்டுவிட்டாலும் இரு காரணங்களினால் அக்கோட்பாடு நிலைத்து விட்டது.
அப்போது தமிழகத் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த
பார்ப்பனரல்லா மேற்சாதியினர்தா
ங்கள் கடைப்பிடித்து வந்த சாதிய ஒடுக்குமுறைக்கு ஆரியர்களைக் காரணம்
காட்டித் தப்பிக்க முடிந்தது.
பார்ப்பனர்களுக்குத் தாம் ஒரு பெரிய இனத்தின் வழியினர் என்ற மாயை தெம்பைத் தந்தது.
இந்த அடிப்படையில் தமிழகத் தேசிய உணர்வு திசை திரும்பி இனச்சிக்கலாக
வடிவெடுத்தது."-
குமரிமைந்தனின் தமிழ்த் தேசியம் கட்டுரைத் தொகுப்பிலிருந்து.
1 ம.நே. · பொது
தற்காலத் தமிழ்த் தேசியத்தின் முன்னோடிகள் தமிழ்ப் பார்ப்பனர்களே
******************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக