புதன், 22 மார்ச், 2017

திருமா பிழைப்புவாதி தமிழ்ப்பற்று வேடம்

aathi tamil aathi1956@gmail.com

26/5/16
பெறுநர்: எனக்கு
Kunnathur Chandra Gounder Venkatachalam,
4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
2016 - தேர்தல் படிப்பினைகள்:
முதல் படிப்பினை: திருமாவளவன் :
இளைஞராக இருந்த போதே DPI -என்ப்படும் இந்திய தலித் சிறுத்தைகள்
கட்சியில்தான் இருந்தார். தமிழீழத்தைத் தமிழரே ஆளவேண்டும் என்ற
போராட்டத்தை 1970-களில் புலிகள் தொடங்கியிருந்தபோது , இவரும், இந்தியன்
என்ற முன்னொட்டை வைத்துக்கொண்டு இங்கு தொழில் நடக்காது என்பதைப்
புரிந்துகொண்டு, சிறுத்தைகள் முன்னாடி ‘விடுதலை’ என்று புலிகளின்
தாக்கத்தை ஒட்டி போட்டுக் கொண்டார்!தோற்று
விப்பதற்கு கூறப்பட்ட கார ணம் தமிழ் தேசியம் மற்றும் சம உரிமை. பின்னர்
தமிழ்ப் பற்றாளராகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் (2002 -இல்
தனித்தமிழில் தன்னுடைய, தன் குடும்பத்தருடைய,தன் கட்சி உறுப்பினர்களுடைய
பெயர்மாற்றம்)! இவையெல்லாம் சந்தை உத்திதான்!
ஏற்கனவே அகில இந்தியப் பார்வையிலிருந்து வருகிறார்; அப்புறம் தன் சாதி
என்கிற அடிப்படையிலிருந்து வருகிறார்! அம்பேத்காருடன் ஒப்புமைப்படுத்த
ி தொடங்கி, பின் அவரையே தலைவராக ஏற்றுக்கொண்டு, அம்பேத்காரின் அடிபடைக்
கொள்கையான ‘இந்தியத்தை’ யும் ஏற்றுக்கொண்டார் என்பதையே, இன்றைக்கு
தமிழ்நாட்டைத் தமிழன் ஆளவேண்டும் என்பது இனவாதம் என்று பார்ப்பது
காட்டுகிறது.
2009 -இலேயே, ஈழம் கண்முன்னே இந்தியத்தாலும், சிங்களத்தாலும்
அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆக
வாய்ப்பு இருக்கிறது என்றவுடனே, கொலைகாரி சோனியாவுடன் “இயற்’கை’ “
கூட்டணி என்று சேரத் தொடங்கிவிட்டார்! அப்பவே, ஒருசில கூர்மையான
அறிஞர்கள் ’இருளன் திருமா’ இரண்டகன் என்பதைச் சொன்னார்கள், ‘இன்னொரு
கருணா’ என்று ஒப்பிட்டுக் காட்டினார்கள்! ஆனால், பெருந்திரளான தமிழர்
தேசியக்கருத்தாளார்கள் புரிந்துகொள்ளவில்லை. மாவீரன் முத்துக்குமார்
பிணத்திலும் இவர் அரசியல் நாடகம் நடத்தியதை நாம் உணரத்தவறி விட்டோம்.
நாம, இவ்வளவு காலம், வைகோ தான் திராவிட வடுகரா அம்பலமாகியிருக்கிறார்
என்று நினைத்துக் கொண்டிருந்தோம்! இப்ப, திருமாவளவனும் முழுக்க
அம்பலப்பட்டு நிற்கிறார்! அது இந்த 2016-தேர்தல் படிப்பினை.
-அருள்நிலா.
{(’மேதகு பிரபாகரனை இழிவுபடுத்திய திருமாவளவன்..’
தமிழகத்தில் பெரும் சாதிய வெறியை ஏற்படுத்தி மக்களை சாதிய குழியில்
தள்ளிவருகிறார். பல்வேறு தமிழ் சாதியினர் இவர்களினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றளவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில்தான் இவர்களது சாதிய வன்முறை நிகழ்ந்ததா என்றால் கிடையாது.
தமிழ் ஈழப் போராட்டத்தின் போது தனது சாதியக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு
சாவில் விலைபேசிய உண்மை உலகத்தமிழர்கள் அறிவார்கள்..ஈழத
்தமிழனின் கண்ணீருக்கு முடிவு வேண்டி தன்னைத் தானே எரித்துக்கொண்டார்
முத்துக்குமார் . அவரது உடலை வைத்து போராட்டம் நடத்துவோரிடமிருந்து உடலை
மீட்டு புதைக்க ஏற்பாடு செய்வதில் ஆரம்பித்த இவரது வியாபாரம் காங்கிரஸ்
பாராளுமன்ற தேர்தல் கூட்டணியில் வந்து முடிந்தது. எங்கும் வியாபாரம்
எதிலும் வியாபாரம்.-தென் தமிழன்) - (வட மாவட்டங்களில் 1996 ம் ஆண்டு உரு
வாக்கப்பட்ட சாதி கலவரத்தால் உயிரிழந்த தாழ்த்தப் பட்ட மக் களின்
மூலம்,அந்தக் கலவரத்தின் மூலம் தன்னை வளர்த்து கொண்ட விசிக வின் பிரதான
தொ ழில் கட்ட பஞ்சாயத்து மற்றும் அரசியல் வியாபாரம் இத னால் கொழுத்தது
அதன் நிர்வாகிகளே அன்றி அந்த கட்சி க்காக உயிர் மற்றும் உடமையை இழந்த
தாழ்த்தப் பட்ட மக்கள் அல்ல. - சுதன் எட்வின்)}

Ragu Nathan Jeevithan
திருமாவளவன் - ஆண்டு 2002..
மதமாற்ற தடைசட்டம் கொண்டுவந்த செயா அரசை எதிர்த்து, 5000 பேருக்கு இந்து
பெயரை தமிழுக்கு மாற்றினார்.
கிருத்துவர்களான
தாமஸ் தமிழ் வளவனாகவும்
அந்தோனி தமிழ் செல்வனாகவும்
சேவியர் தமிழ் மாறனாகவும்,
முசுலிம்களான
முஸ்தபா முத்தழகனாகவும்
அமீர் குணவளவனாகவும்
இப்ராகீம் இனியவனாகவும்
நூர்ஜகான் கலையரசியாகவும்
திருமா பெயரை மாற்றினார்
தம் தந்தை பெயர் ராமசாமி என்பதை தொல்காப்பியன் என்றும், தன் அக்காள்
பானுமதியை வான்மதியாகவும் பெயர் மாற்றம் செய்தார்.
இனி தமிழில் பெயர் இல்லையென்றால் விசிக உறுப்பினராகவும் இருக்கமுடியாது
என்று கர்ஜித்தார்.
திருமாவளவன் - ஆண்டு 2015..
தமிழன் தெலுங்கன் என பேசுவது இனவாதம்.
இனம் கலக்கவேண்டும்.
மொழி கலக்கவேண்டும்.
பண்பாடு கலக்கவேண்டும்.
கலந்து இனப்பெருக்கம் நடப்பதே இயங்கியல் விதியாகும்...
அப்பனுக்கே பெயரை மாற்றிய அண்ணன் திருமா அவர்களே..
நீங்கள் அரசியலில் வளர்வதற்கும், தேர்தலில் வெல்வதற்கும் பயன்படுத்திவிட்டு,
தலித்தியத்தை பரப்பும்போது தூக்கி எறிவதற்கு..
தமிழும் தமிழனும் உம் வீட்டு கழிவறைத்துணி என நினைத்தீரா?
சாதியற்ற தமிழன் என்று அழைத்துக்கொண்ட, சாகும்வரை தமிழன் என்ற இதழை
நடத்தி, திருக்குறளுக்கும் உரை எழுதிய அயோத்திதாச பண்டிதர் குலத்தில்
எப்படி ஐயா தோன்றினீர் நீர் ?
ஆக்கம்: Mathi Vanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக