செவ்வாய், 21 மார்ச், 2017

சிலப்பதிகாரம் ஒரு தொகுப்பு நூல்

aathi tamil aathi1956@gmail.com

28/9/16
பெறுநர்: எனக்கு
Sivathanu Pillai
மணிமேகலையில் வரும் பாத்திரங்களையும், மலைநாட்டு நாடோடிப்பாடல்களில்உள்ள
கோவலன், கண்ணகி, போன்றோர் கதைநிகழ்வுகளையும், சங்கநூல்களில் உள்ள கோவலன்,
கண்ணகி நிகழ்வுகளையும் அடிப்படை கதைபபுலமாகக் அமைத்துக் கொண்டு, அதன்
மூலம் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து இலக்கண வகைகளையும்,
கடைச்சங்க க் காலத்து அகநாநூறு, புறநாநூறு, பரிபாடல் செய்திகளையும்,
பட்டினப்பாலையில் கூறப்பட்ட புகார்நகர வர்ணனையையும், இடைச்சங்ககால
நூல்களையும், வடமொழிநூல்களிலிருந்து பெரும்பாலான சம்பவங்கள் ,
அனைத்தையும் கலந்து, முக்கியமாக இயல் இசை, நாடகம் ஆகிய துறைகளுக்கு
முக்கியத்துவம்கொடுத்தான், அன்று வசக்கில் இருந்த புத்த சமண சமய
கொள்கைகளையும் விவரித்து இயற்றிய ஒரு காப்பியமே சிலப்பதிகாரம். சிறிய
அளவில் உள்ள கதையை நீக்கிவிடின், எஞ்சி இருப்பது வெறும் Catalog of Books
தான்.
கோவலன், கண்ணகி, மாதகி, என்ற பெயரமைய, புகழேந்திபுலவரால் அம்மானையாகப்
பாடப்பட்ட கோவலன் கதை உள்ளது. வைசிய புராணம் 32 ஆம் சருக்கம், கண்ணகிக்
கதையைக் கூறுகிறது. நற்றிணை 216 ஆம் பாட்டு ஒரு முலையை அறுத்து வீசிய
திருமாவுண்ணி கதை, யாப்பலங்க்கார விருத்தியுள் வரும் கொலையுண்ட கணவன்
நிலைகண்டு கதறும் பத்தினிநிலைபாடு, ஆகியவை நூலாசிரியரால் கதைபுனைவுக்கு
எடுத்தாளப்பட்டுள்ளன.
கண்ணகியின் முற்பிறவி கதை கூறப்பட்டுள்ளது. பாண்டியன் இறந்ததும்
பாண்டிமாதேவி தன சீரிய கற்புநெறியால் உடனே உயிர் துறக்கிறாள். மாதவி கூட
துறவியாகி சமூகசேவையில் ஈடுபடுகிறார். ஆனால் கண்ணகியோ நற்றிணை 216
திருமாவுண்ணியைப் போல தனது இடது முலையைத்திரிகி எடுத்து எரிந்து
சாபமிடுகிறார். மதுரையை எரிக்கிறார். அந்த கோபத்தீயில் மதுரை தமிழ்
சங்கமும் தப்பவில்லை. முதல், இடை, கடை சங்க நூல்கள் . அனைத்தும் தீயில்
எரிந்து சாம்பலாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக