புதன், 22 மார்ச், 2017

ஆகமம் விதிப்படி கோவில் அமைப்பு சைவம் ஆகம

aathi tamil aathi1956@gmail.com

27/5/16
பெறுநர்: எனக்கு
“தமிழனின் மதம் எது ? தமிழனின் கடவுள் யார் ? அவனின் வழிப்பாட்டு முறை என்ன”
வக்கணையாக தமிழரைப் பற்றி எழுத தெரிந்த  இதற்கு விளக்கம் தெரியாமல் போனது ஏன்?

இன்று மலேசியாவில் இருக்கும் 90% மேற்பட்ட கோயில்கள் சிவ ஆகமத்தில்
விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட கோவில்களாகும். ஒரு கருவறை,
அர்த்த மண்டபம், அதனையடுத்து ஆன்மாகிய வாகனம், பாசமாகிய (உலகியல் பற்று)
பலிபீடம் அதற்குப் பின் கொடிக்கம்பம், மகாமண்டபம் என்னும் படிமுறையில்
ஆலயம் அமைத்தாலே அது சைவக் கோவில் என்பது பொருள்.

 சிவ ஆகமம் காட்டும் இறை நெறிக்குப் பெயர் சைவம் சமயம். அக்கோவில்களில்
நடத்தப் படும், தினசரி பூசை, சிறப்புப் பூசை, திருவிழாக்கள் அனைத்துமே
சிவ ஆகமத்தில் விதித்த விதிகளுக்கு ஏற்ப நடப்பன. அப்படியானால் தமிழர்
தொன்று தொட்டு சைவ மரபில் வந்து வந்தவர் உண்மை என்று  அறிய முடியாமல்
போனது ஏன்?.

 தமிழரின் சமயம் யாது, அதன் மூலம் எது என்று இதுவரையில் அறியாமையில்
வாழ்ந்து விட்டோம் தமிழர். இனியாவது, சிவ ஆகமே நமது வேதம் (மெய்ஞான நூல்)
 என்பதை அறிந்து வாழ்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக