|
29/7/16
| |||
வாலறிவன்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 1870 முதல் 1940 கள் வரை பல
இலட்சம் தமிழர்கள் ஒப்பந்தக்கூலிகளாகவும், கங்காணிகளாலும், தனிப்பட்ட
முறையிலும் மலேசியா சென்றனர். அன்று நிலவிய பஞ்சம் (செயற்கையாக
பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்பட்ட) காரணம் என்கின்றனர் வரலாற்றாளர்கள்.
தமிழகம் வந்தேறிகளால் ஆளப்பட்டு வந்த வேளை. தமிழர் வெளியேற்றத்தைத்
தடுக்க ஒரு தமிழ் அரசு இல்லாதிருந்த வேளை.
நகரமைப்புப் பணிகளுக்காகவும் , வேளாண்மைக்கு நிலம் தருவதாகவும் பொய்
வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டு அதற்குத் தமிழர்கள் இரையாகினர்.
ஒரு சிறு மீன்பிடிக் கிராமமாக இருந்த மலேசியா ஒரு நாடாக உருவாக
அடித்தளமிட்டவர்கள், இரத்தம் சிந்தியவர்கள் தமிழர்கள். இன்று அதன் வரலாறு
மலேசியாவில் உள்ள மலாய்க்காரர்களால் மறைக்கப்படுகிறது.
சாதிகளை மறந்து தமிழ்ப்பாட்டாளி வர்க்கமாக உருமாறி நடத்திய போராட்டம்
குறிப்பாக 1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி, மலாயா கணபதி தலைமை தாங்கி
நடத்திய அகில மலாயா தொழிற்சங்கப் பெடரேசன் போன்ற பொதுவுடைமைப் பதாகையின்
கீழ் சமத்துவத்தின் அடிப்படையில் நடந்தன.
ஆனால் இங்கிருந்து கொண்டு சிலர் இங்குள்ள தலித், அம்பேத்கர்
அளவுகோல்களால் அங்குள்ள தமிழர்களை அளக்க முயல்கின்றனர். குறிப்பாக
பார்ப்பனிய தலித் எழுத்தாளர்கள் கூட்டு சேர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.
சாதிகளை மறந்து தமிழர்கள் எங்கெல்லாம் இனமாக ஒன்று சேருகிறார்களோ
அங்கெல்லாம் பார்ப்பனியம் தமிழர்களை தலித், இசுலாமியர்கள் என்று பிரித்து
வைக்கும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கு அண்மைக்கால உதாரணம்
ஈழப் போராட்டம். ஈழத்தில் இப்பிரித்தாளும் வேலை வெற்றி பெற்றதை யடுத்து
அதனைத் தமிழகத்திலும் மலேசியாவிலும் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
ஒரு புறம் இராமகோபாலன்கள் செல்கின்றனர். இன்னொருபுறம் திராவிடக்கட்சிகள்
வயிறுமுத்துகள், போலி மார்க்சியர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள்,
தமிழ்ப்புலவர்கள், ஊடக எழுத்தாளப் பிரபலங்கள், ரஜினி, அஜீத் போன்ற
நடிகர்களின் படங்கள், என அனைவரும் மலேசியத் தமிழனின் வெள்ளிகளைக்
கொள்ளையடிக்கச் சென்று வருகின்றனர்.
இங்குள்ள எத்தனை பேருக்கு மலாயா கணபதியைத் தெரியும்?
நேதாஜி பாசிச ஜப்பானுடன் சேர்ந்ததை ஏற்க மறுத்து அவரோடு செயல்பட
மறுத்தார். 1950 களில் மலேசிய கம்யூனிஸ்டுக் கட்சியின்தலைமறைவுப்
போராட்டத்தில் பங்கேற்று பின்னர் கொல்லப்பட்டார். அவரது தொழிற்சங்கப்
போராட்டம் அன்றைய பிரிட்டிஷ் மலேசிய அரசை நடுநடுங்க வைத்தது. இதையெல்லாம்
அறியாமல், அறிந்து கொள்ளாமல், தமிழினத்திற்காகப் போராடுபவன் ஒரு
கேங்ஸ்டர் என்ற முத்திரையைக் குத்த பார்ப்பனியத்திற்கு, இந்தியத்திற்கு
எடுபிடி வேலை செய்யத் தொடங்கியுள்ளார் பா.ரஞ்சித்.
1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சியை பிரிட்டிஷ் மலேசிய அரசு ஒடுக்கியது.
சமார் 25000 பேர் பங்கேற்ற அந்தக் கிளர்ச்சிக்கு சைக்கிள் பயன்படுத்தியே
ஒவ்வொரு தோட்டத்துக்கும் சென்று ஆதரவு திரட்டினர்.
அப்போராட்டம் நடந்த காலத்தில் மலேசியாவில் மலாயா மத்திய இந்தியர் சங்கம்
என்ற ஒன்று இயங்கி வந்தது. இதில் பெரும்பாலும் தமிழரல்லாதோரே அங்கம்
வகித்தனர். மலையாளிகள், பார்ப்பனர்கள், வங்காளிகள், மற்றும் பிறரே
பொறுப்புகளில் இருந்தனர். இவர்கள் தமிழ்த் தொழிலாளிகளின் போராட்டத்திற்கு
உதவி எதையும் செய்யவில்லை. மாறாக இந்தப் போராட்டத்தை இந்திய தேசிய
விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக மாற்ற முனைந்தனர்.
சீனர்களுக்கு இணையான ஊதியத்தை ரப்பர்தோட்டங்களில் பணிபுரியும் தமிழ்த்
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட சுமார் 10 கோரிக்கைகள்
வைக்கப்பட்டன. இதனை அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கி பின்னர்
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஆர்.எச்.நாதன் சென்னையில் அளித்த
பேட்டியில் இதைத் தெரிவித்திருந்தார். அது பின்வருமாறு:
போராட்டம் ஒடுக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் அரசு, தங்களுக்கு ஆதரவாகச்
செயல்படும் ஒரு தொழிற்சங்கத்தை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்ற
ஒன்றை கேரளாவிலிருந்து இறக்குமதி செய்த பி.பி.நாராயணன் என்ற மலையாளியின்
தலைமையில் இயக்கினர். ஏறக்குறைய சுமார் 50 ஆண்டுகள் இந்த மலையாளிதான்
சுமார் 1,50,000 இலட்சம் தமிழ்த் தொழிலாளிகளின் ஊதியத்தை, தொழிற்சங்க
உரிமைகளை நிர்ணயித்தான்.
இந்த பி.பி.நாராயணன் இறந்ததும் அத் தொழிற்சங்கத்தில் இன்னொரு நாயர்
முகுந்தன் என்பவரை தனது பொறுப்பில் அமர்த்தி விட்டுச் சென்றுள்ளது
எல்லாவற்றையும் விடக் கேவலம். இன்றும் அச்சங்கத்திற்குச் சொந்தமான
வசதிகளை அனுபவித்துக் கொண்டு மலேசிய அரசுடன் இணைந்து செயல்பட்டு
வருகிறார் இந்த முகுந்தன்.
1941 ல் கிள்ளானில் தமிழ்த் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றான
சீனத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்பதை மட்டும் பா.
இரஞ்சித் எடுத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் 1969களுக்குப் பின்னர் மலேசியாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டங்கள்
_ மண்ணின் மைந்தர்களுக்கு முதன்மை_ என்பதை வலியுறுத்தியதால் தோட்டங்கள்
நவீனமயப்படுத்தப
்பட்டதாலும், பிரிட்டிசாரிட மிருந்த தோட்டங்கள் பல சீனர்களுக்குக்
கைமாறியதாலும் வேலையிழந்து கோலாலம்பூரின் சுற்றுப்புறங்களில்
குடியேறினார்கள் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள். அப்படிக்
குடியேறியவர்களில் சிலர் ஈடுபட்ட குற்றச் செயல்களைக் கணக்கில் எடுத்துக்
கொண்டு இரண்டு காலப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒட்டவைத்து கபாலி
திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது.
இதற்கு அடிப்படைக்காரணம் மலேசிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை. தமிழக
அரசிடமிருந்து இந்திய அரசை வற்புறுத்தாதது, ஆகியவை முக்கியக் காரணிகள்.
மலேசிய அரசின் வங்கிளாளர்களாக 1969 வரை செயல்பட்டு வந்த நகரத்தார்களின்
வங்கிகள் மலேசிய அரசினால் கையகப்படுத்தப்பட்டு அவர்களின் செல்வங்களும்
முடக்கப்பட்டன.
-ஐயா விசயகுமார்
தமிழோசை பதிப்பகம்
கோவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக