|
31/5/16
| |||
தினத்தந்தியில் ஞாயிறு தோறும் வரும் தொடர் கட்டுரை ' ஆதிச்சநல்லூர் - மண்
மூடிய மகத்தான நாகரீகம்' .
தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான வரலாற்றுத் தொகுப்பு !
தினத்தந்தியில் ஞாயிறு தோறும் வரும் இந்த தொடர் கட்டுரை பல்வேறு ஆய்வுகளை
வெளிக்கொண்டு வருகிறது. சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் தமிழகத்திற்கும்
உள்ள தொடர்பை ஆதாரப்பூர்வமாக இக்கட்டுரை எடுத்து இயம்புகிறது. தமிழர்கள்
மறந்து விட்ட தங்கள் தொன்மங்களை நம் கண்முன்னே இக்கட்டுரை காட்டுகிறது.
இந்திய அரசு எதை மக்களின் பார்வைக்கு கொண்டு வரக் கூடாது என்று மூடி
மறைத்தோ அதை மக்களின் பார்வைக்கு திறம்பட வெளிக்கொண்டு வந்துள்ளார்
இக்கட்டுரையின் ஆசிரியர் அமுதன் அவர்கள்.
தமிழர்கள் இவ்வளவு பெரிய அறிவாளிகளா என்று வியக்க வைக்கும் அளவிற்கு பல
செய்திகளை நாம் இதில் காண முடிகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்லாமல்
உலகிற்கே ஆதிச்சநல்லூர் மக்கள் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர் என்பது
தமிழர்கள் வியக்க வேண்டிய செய்தியாகும்.
தன்னார்வலர்கள் முடிந்தால் ஒவ்வொரு ஞாயிறும் வரும் கட்டுரைகளை சேகரித்து
ஒரு புத்தமாக தொகுத்து அவற்றை ஆவணப்படுத்தலாம். நம் அடுத்த தலைமுறைக்கும்
இப்படியான தொகுப்புகள் நிச்சயம் தேவை. தமிழக அரசு இக்கட்டுரையை கவனத்தில்
கொண்டு பள்ளி பாடத்திட்டத்தில் இவற்றை சேர்த்தால் தமிழ் மக்கள் தங்கள்
அறிவார்ந்த தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் இம்முயற்சிக்கு கட்டுரையாளருக்கும்
தினத்தந்திக்கும் தமிழர்கள் சார்பில் நம் நன்றி கலந்த பாராட்டுகளை
தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக