ஞாயிறு, 19 மார்ச், 2017

மீத்தேன் எடுத்து நிலக்கரி எடுக்க நாசகார திட்டம் அழிவு சுரங்கம் வளங்கள் சுரண்டல்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 27
பெறுநர்: எனக்கு
மீத்தேன், ஹைட்ரோகார்பன் என்பதெல்லாம் டிரெய்லர்....

இதற்கு பின்னால் உள்ளது வேறொரு பெரிய திட்டம்...

நெய்வேலி தொழிலாளர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் இந்தச்
செய்திகள் பகிரப்படுகின்றது..

அதாவது நெய்வேலியில் 100 மீ  மண்ணைத் தோண்டினால் 20 மீ நிலக்கரி கிடைக்கிறது.

ராஜமன்னார்குடி பகுதிகளில் 1000 மீ ஆழத்தில் 100 மீ அளவு நிலக்கரி உள்ளது.

இதற்காக சுரங்கம் வெட்டத் தொடங்கினால், தஞ்சை கோபுரம் உயரத்திற்கு
வெட்டியெடுக்கும் மண்ணைக் கொட்ட வேண்டியிருக்கும்.

அதற்காகவே தமிழ் மண்ணில் பள்ளம் போட இந்த நாடகங்கள்...

இனி விகடன் செய்தி...

பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர்
நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின்
கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக
தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம்.

இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத்
துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள்
இருக்கின்றன.

காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.

 முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து
மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க
இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக்
குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே
முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன்
திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை
எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது.

இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை
நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே,
உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி
நிலக்கரியை எடுக்க முடியும்.

இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல
மீத்தேன் எடுத்துவிட முடியாது.

 அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின்
உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர்
அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல்
முறை’ (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில்
நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த
முடியும்.

நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது?

 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின்
நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள்
செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும்.

மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு
வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச்
சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!

நன்றி விகடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக