செவ்வாய், 21 மார்ச், 2017

திருமலை நாயக்கர் சிலை திணிப்பு கொலை அற்பத்தனம்

aathi tamil aathi1956@gmail.com

29/8/16
பெறுநர்: எனக்கு
திருமலை நாயக்கன்.
(1613 - 1659)
மதுரையை ஆண்ட நாய்க்க மன்னர்களில் திருமலை நாயக்கர் குறிப்பிடத்தகுந்தவர்.
இவரது பரந்த இதயத்திற்கு சான்று... இவருக்கு அரசுரிமைப்படியே 200
மனைவிகள். அந்தப்புரத்தில்....?
(இவரது இறப்பிற்கு பின் இந்த 200 மனைவிகளும் இவருடன் உடன்கட்டை ஏறினர்.
அடப்பாவிகளா...?)
கட்டிடக் கலையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஊரான் வீட்டு
நெய்யே...பார்ப்பான் கையே...” எனும் பழ்மொழிக்கேற்ப அரசு பணத்தை இத்தகைய
வெற்று கட்டடங்கள் கட்டுவதில் வீணாக்கினார்.
பல கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வாரி வழங்கினார்.
மிகமோசமான நிர்வாகத்திறமைய
ைக் கொண்டிருந்தார். பொதுமக்களின் வரிப்பணத்தை தேவையற்ற போர்களிலும்,
தனது விளம்பர புகழ்பாடுவதற்கான திருமலை நாயக்கர் மகால் போன்ற பயனற்ற
கட்டடங்களுக்கும் வாரி இறைத்து, மக்களை வறுமையில் தள்ளினார்.
கோவி்ல் கட்டுவதில்..., அதிலும் பழைய கோவில்களின் இராசகோபுரம் கட்டுவதில்
தனியாத ஆர்வம் கொண்டிருந்தார்.
ஆனால் பெரும் பொருட்செலவிலும், இவரது ஆர்வக் கோளாறிலும் அத்தகைய
கோபுரங்களின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதால் பெரும்பாலானவை
கட்டிமுடிக்கப்படவே இல்லை. இத்தகைய குறைபாடுடைய கோபுரங்கள் தென்னகம்
முழுவதும் காணலாம்)
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 72 வாசற்கள் அமைக்கப்பட்டு,
அத்தனை கோபுரங்கள் கட்டுவதற்கு ஆசைப்பட்டு வேலைகளை ஆரம்பித்தார். ஆனால்
ஒன்றையும் உருப்படியாக முடிக்க முடியவில்லை.
இவரது இறப்பைப் பற்றி பல்வேறு கட்டுக் கதைகள் சொல்லப்படுகின்ற
ன. உள்ளூரில் இவர் மோசமாகவும் மூர்க்கத்தனமாகவும் கொலை செய்யப்பட்டார்
என்பதொன்று. ஆனால் இதற்கான போதிய சான்றுகள் இல்லை.
மற்றொன்று
திருமலை நாயக்கர் கிறித்துவ மத சமய பரப்பாளராகளிடம் மிகுந்த பற்றும்
பாசமும் வைத்திருந்தார்.
அவ்வாறு இவரது காலத்தில் வந்த மதபோதகரான இராபர்ட் டி நொபிளி என்பவரிடம்
மிகுந்த மதிப்பும் அன்பும் உடையவராக இருந்தார்.
இராபர்ட் டி நொபிளி மன்னர் மனதை ஆட்டுவிக்கும் அளவிற்கு பேராற்றல்
பெற்றவராக இருந்தார். முடிவாக மன்னரை கிறித்துவ மதத்திற்கு மாறும்
தருவாயில் கொண்டுவந்துவிட்டார்.
இந்த நிலையில் நாயக்க மன்னர் இந்து கோவில்களுக்கு கொடுத்து வந்த
அளவுகடந்த செல்வத்தை உடனே நிறுத்தினார். இவரது அரசில் ஒட்டுண்ணி வாழ்க்கை
நடத்தி வந்த பிராமணர்களுக்கும் அவ்வாறே பொருள் தருவதை நிறுத்தினார்.
இதனை மிகப்பெரும் மன்னிக்க முடியாத குற்றமாக, அவரது உடனிருந்த பிராமணப்
புரோகிதர்களும், பட்டாச்சாரியார்
கள் எனப்படுவோரும் கருதினர்.
இந்த பிராமணப் புரோகிதர்களும், பட்டாச்சாரியார்களும் கூடி சதி ஆலோசனையில்
ஈடுபட்டனர். அதன்படி இவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் குலசேகர
பட்டாச்சாரியார் தலைமையில், திருமலை நாயக்கனிடம் சென்றனர்.
”மன்னா, நீங்கள் இப்பொழுது பொருளாதார நெருக்கடியில் உள்ளீர்கள். மதுரை
மீனாட்சி அம்மன் கருவறைக்கு கீழே உள்ள நிலவரையில் பெரும் பொற்காசுகள்
கொண்ட புதையல் இருக்கிறது. நீங்கள் வந்தால் எடுத்து தருகிறோம்” என்றனர்.
மன்னரை அழைத்துக்கொண்டு, நிலவறை உள்ளதாக கூறப்பட்ட சுரங்கப்பாதைக்குள் ”
உள்ளே செல்லுங்கள், மன்னா...” என்று அவரை முதலில் உள்ளே செல்ல
சொல்லிவிட்டு, ஒரு பெரும் பாறங்கல்லால் சுரங்கத்தை மூடிவிட்டனர்.
திருமலை நாயக்க மன்னன் பசியாலும் பட்டினியாலும் உள்ளிருந்தே உயிர்விட்டார்.
பிராமணர்களும் பட்டாச்சாரியார்
களும், மன்னர் மீனாட்சி அம்மனை தரிசிக்கும் பொழுது தெய்வம்
காட்சியளித்ததால் தெய்வத்துடன் நேரிடையாக மோட்சம் சென்றுவிட்டார் என்று
கதைகட்டிவிட்டு, உடனடியாக திருமலை நாயக்கனுடைய மகனுக்கு பட்டம் சூட்டி
விட்டனர்.
(பழைய அன்றைய ஆங்கிலேய கலெக்டரால் எழுதப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன்
கோவில் வரலாறு புத்தகத்தை தழுவியது.)

Murugan Rd
இது நுணுக்கமான அரசியல்
இம்சை அரசன் படத்தில் வடிவேலு பெயிண்டிங் ஞாபகம் இருக்கா, அதுபோலதான்
திருமலைநாயக்கரையும் சிலைவடித்து கடவுளுக்கு அருகிலேயே அமர்த்தி
வரலாற்றில் அவர் பெயர் நிலைத்திருக்கும்படி செய்துவிட்டார்கள்,
எங்கள் ஊர் சிவகாசி அருகில் 3கிமீ தூரத்தில் திருத்தங்கல் என்னும் ஊர்
வைணதிருத்தலங்களில் 45 வது திவ்யதேசம் என்றழைக்கப்படும், இந்த கோயில்
கட்டப்பட்டது பல்லவகாலத்தில் என்று அங்கு குறிப்பு உள்ளது, எனக்கு வரலாறு
எல்லாம் சுத்தமாக தெரியாது, அக்கோயில் மூலவர் சன்னிதிக்கு அருகில்
திருமலைநாயக்கர் சிலை உள்ளது, பல்லவர் காலம் திருமலைநாயக்கர் காலத்துக்கு
முன்பா? பின்பா?
திருமலைநாயக்கர் காலத்தில் அக்கோவில் கட்டப்படவில்லைய
ென்றால் அவர் சிலையை எப்படி அங்கு வைக்க முடிந்தது, தென் தமிழகத்தின்
நிறைய வைணவதலங்களில் அவர் சிலை உள்ளதே, என்ன காரணம், அதுவே ராஜராஜசோழன்
சிலையை அவ்வளவு பிரமிப்பான அவன் கட்டிய அதே பெரியகோயிலில் வைக்க
முடியவில்லையே ஏன்,
திராவிடமும் பார்ப்பனீயமும் திருமலைநாயக்கர் விசயத்தில் ஒத்துப்போனதா?
பார்ப்பனர்களால் மதியிழந்தான் என்று தூற்றப்படுகின்ற ராஜராஜசோழன்
பார்ப்பனர்களுடன் நல்உறவைகொண்டிருந்தது உண்மை என்றால் அவன் சிலை ஏன்
வெளியே இருக்கிறது,
பார்ப்பனீய எதிரி என்று கூறிக்கொண்டே திரைமறைவில் தமிழனை தரம்தாழ்த்த
அக்காலத்திலேயே திராவிடமும் பார்ப்பனீயமும் கைகோர்த்து செயல்பட்டதா?
ஒன்றும் புரியவில்லையே சொக்கா? ஆம் அங்கும் அதாவது மதுரை மீனாட்சிஅம்மன்
சொக்கநாதர் கோயிலிலும் உள்ளதே திருமலைநாயக்கர் சிலை அதுவும் அம்மன்
பிரகாரத்தின் அருகில், அப்ப மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியது
திருமலைநாயக்கரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக