|
31/5/16
| |||
Kannan Mahalingam
ஜெ. பாலசுப்பிரமணியம்:
1913 மார்ச் 12 தேதியில் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ இதழில்
(1907-1914) “பரிதாபக் கொலை! பரிதாபக் கொலை!! பரிதாபக் கொலை!!!,
பறையனென்றழைக்கப்பட்ட ஒருவனைச் சில ரெட்டிகளென்போர் சேர்ந்து கொலை செய்து
விட்டார்கள்” என்று தலைப் பிட்டு அயோத்திதாசர் எழுதிய கட்டுரை 'தமிழன்'
இதழில் வெளியானது.
“தென் ஆற்காடு டிஸ்டிரிக்ட் திண்டிவனம் தாலுக்காவில் விட்லாபுரம்
கிராமத்தில் ப.இராகவனென்னுமோர் குடியானவனிருந்தான்” என்று தொடங்கும்
அக்கட்டுரையில் கொஞ்சம் நிலம் வைத்திருந்த இராகவன் என்னும் பறையர் தனது
நிலத்தில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு நாளொன்றுக்கு இரண்டணா கூலி
கொடுத்து வந்தார். ஆனால் அதே கிராமத்தில் உள்ள ரெட்டியார்கள் நாள்
முழுவதும் வேலை வாங்கிக் கொண்டு ஓரணா மட்டுமே கூலி கொடுத்து வந்தனர்.
இதனால் கூலியாட்கள் இராகவனிடமே வேலைக்குச் சென்றனர். ஆத்திரம் கொண்ட
ரெட்டிகள் இராகவனை மிரட்ட ஆரம்பித்தனர். மேலும் இராகவனிடம் சொந்தமாக
நிலம் இருப்பதால்தான் அவனால் இரண்டணா கூலி கொடுக்க முடிகிறது. ஆகவே
இராகவனை நிர்மூலமாக்க வேண்டுமென்று ரெட்டியார்கள் கங்கணம் கட்டினர்.
இதனால் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இராகவன் சென்னையிலிருந்த
ு வெளிவந்த ‘பறையன்’ பத்திரிகையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கடிதமாக
எழுதி வெளியிட்டார்.
இதற்குப் பின்பும் இராகவனுக்குப் பல துன்பங்களைக் கொடுத்து வந்த
ரெட்டிகள் தங்களது மாடுகளை விட்டு இராகவனின் நிலத்திலுள்ள பயிறுகளை
மேயவைத்தனர். இதற்குப் பிறகு பவுண்டி எனப்படும் பிறர் நிலங்களில் மேயும்
மாடுகளை அடைத்து வைத்துத் தண்டம் கட்ட வைப்பதற்கான கிராம நிர்வாக
அதிகாரியின் சிறிய பட்டியில் ஒப்படைக்க ஓட்டிப்போன இராகவனை ரெட்டியின்
ஆட்கள் மறித்து அடித்துக் கொன்றனர் என்று அப்பின்னணியை அயோத்திதாசர்
விவாதிக்கிறார். இதழுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை அடிப்படையாகக்
கொண்டு அவர் இக்கட்டுரையை எழுதுகிறார்.
அயோத்திதாசரால் எழுதப்பட்ட இந்தச் செய்தியைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட
இராகவனின் மகன் கணபதி என்பவர் ஒரு கடிதம் எழுதுகிறார். 12 மார்ச் 1913
தேதியிட்ட அந்தக் கடிதம் 19 மார்ச் 1913 ‘தமிழன்’ இதழில் வெளியானது.
அக்கடிதம் அயோத்தி தாசர் விவரித்த ராகவன் கொலையின் பிற பின்னணியை
விவரிக்கிறது.
விட்லாபுரம் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜலு ரெட்டி வகையறாக்களுக்கு
மேற்படி சேரிப் பறையர்கள்மீது 20 வருடங்களாக நீடித்த பகையும் குரோதமும்
உண்டு. ரெட்டிகள் 1897 ஆம் வருடத்தில் மாடுகளை விட்டு மகசூலை
நாசப்படுத்தியும் வீட்டைக் கொளுத்தினது மன்றி இராகவன்மீது பொய்யான களவுப்
புகார் ஒன்றையும் கொடுத்ததோடு இராகவனைக் கொலை செய்யவும் திட்டமிட்டனர்.
இதைத் தெரிந்து கொண்ட இராகவன் சென்னை இராயப்பேட்டை மு.தங்கவேலு பிள்ளை
என்பவரின் உதவியைக் கொண்டு ‘பறையன்’ பத்திரிகையில் ரெட்டிகள் செய்யும்
கொடூரங்களைப் பிரசுரித்தார். இந்தக் கடிதத்தை ராகவன்மீதான ரெட்டிகளின்
புகாரை ஒட்டி நடந்த வழக்கில் சாட்சியாகக் கொண்டு சென்றனர்.
அதன்படி அப்போ திருந்த திண்டிவனம் தாலுக்கா சப் மாஜிஸ்திரேட் கனம்
கிருஷ்ணசாமி ஐயர், இராகவன்மீது கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்று
தள்ளுபடி செய்தார். இதனால் அவமானமும் பணவிரயமும் அடைந்த ரெட்டிகள்
அதற்குப் பின்பும் பறையர்கள்மீது பல பொய்ப் புகார்களைக் கொடுத்தார்கள்.
அவற்றில் பல விசயங்கள் பறையன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளன. இவ்வாறு
எந்தப் புகார் கொடுத்தாலும் அதை இராகவன் சட்டரீதியாக எதிர்கொள்வதைத்
தெரிந்து கொண்ட ரெட்டிகள் 26 நவம்பர் 1912இல் இராகவனை அடித்துக் கொலை
செய்தனர். இவ்வாறு இந்தக் கடிதத்தில் ராகவனின் கொலைப் பின்னணியை
விவரிக்கும் கணபதியின் கடிதம் கொலைக்குப் பின்பு நடந்தவைகளையும்
விவரிக்கிறது.
முதலில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் அடித்ததினால் ராகவன் இறந்தார்
என்று மருத்துவர் குறிப்பிடாததை ஆட்சேபித்து மறு பிரேத பரிசோதனைக்குக்
கோரி மனு கொடுத்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் 29-11-12 அன்று
தாசில்தார் மற்றும் இராகவனின் உறவினர்கள் முன்னிலையில் மறு பிரேத
பரிசோதனை நடந்தது என்று கூறுவதோடு அதில் இடம்பெற்ற எதிரிகள் மற்றும்
சாட்சிகள் பெயர்ப் பட்டியலையும் தருகிறார். இந்தக் கடிதத்தைக் கணபதி
எழுதியபோது நீதிமன்றம் எதிராளிகளிடம் தங்களின் வாதத்தை முன்வைக்கும்படி
கூறி இருந்ததாகத் தெரியவருகிறது.
இறுதியாக ‘ஐயா இதுவரையில் (எழுதப்பட்டதை) பப்ளிக் செய்யக் கேட்டுக்
கொள்கிறோம். பின்னிட்டு நடக்கும் சங்கதி அறிவிக்கிறோம். நேரில் வந்து
சேருகிறோம்” என்று கடிதத்தில் முடிக்கிறார். அதாவது இக்கொலைக்கான பின்னணி
1897இல் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில்தான் கணபதியின் இக்கடிதம்
இராகவனின் கொலை வழக்கை விவரிக்கிறது.
இராகவன் கொலை குறித்து முதலில் அயோத்திதாசர், பிறகு இராகவன் மகன் கணபதி
ஆகியோர் எழுதியதைத் தொடர்ந்து பறையன் (1893-1900) பத்திரிக்கையில் துணை
ஆசிரியராகப் பணியாற்றியிருந்த மு.தங்கவேலுப்பிள்ளை (கொலையுண்ட
இராகவனுக்கு உறவினரும் கூட) இந்த வழக்குடன் தொடர்புடைய பத்து
வருடங்களுக்கு முன்பு (1897) நடந்த சம்பவங்களைக் கடிதம் மூலம் மூன்றாவது
நபராகப் பகிர்ந்துகொண்டார்.
கொலையுண்ட இராகவன், ரெட்டிகளால் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத்
தங்கவேலுப்பிள்ளை மூலமாகவே பறையன் இதழில் கடிதமாக வெளியிட்டார். இதழில்
வெளியான இந்தக் கடிதத்தையே ஆதாரமாகக் கொண்டு தங்கவேலுப் பிள்ளையும்
வழக்கில் சாட்சியாகக் சேர்க்கப்பட்டார். இராகவனுக்கு எழுதப்படிக்கத்
தெரியாது என்பதால் இராகவன் சொல்ல தங்கவேலுப் பிள்ளை எழுதி அதைப் பறையன்
பத்திராதிபராகிய கனம் இரட்டைமலை சீனிவாசன்பிள்ளை பார்வையிட்டு பிரசுரஞ்
செய்துள்ளார்.
சுமார் இருபது பிரதிகள் வரை திண்டிவனம் தாலுக்காவிலுள்ள சப் கலெக்டர்,
கலெக்டர், சப் மாஜிஸ்திரேட், தாசில்தார், போலீசு சூப்பிரண்டெண்ட் ஆகிய
அதிகாரிகளுக்கும் சுற்றிலுமுள்ள கிராம கௌகரிகளுக்கும் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் இராகவன்மீது பகை கொண்ட ரெட்டிகள் சுற்றிலுமுள்ள
கிராமங்களுக்குச் சென்று இராகவன் திருடிச் சென்றுவிட்டான் என்று தலித்
அல்லாத சாதிகளிடம் கையெழுத்து வாங்கிப் புகார் கொடுக்கவும் அதற்கு முன்பே
‘பறையன்’ பத்திரிகை மூலம் இந்த விசயங்களைத் தெரிந்துகொண்ட மாஜிஸ்திரேட்
கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள், இந்த வழக்கைப் பொய் வழக்கென்று தள்ளுபடி
செய்ததுடன் ரெட்டியார்களைக் கூப்பிட்டு ‘இதோ நீங்கள் செய்வதை இராகவன்
பட்டணம் போய் பேப்பரில் பப்ளிக் செய்திருக்கிறான் பாருங்கள்” என்று
பறையன் இதழைக் காண்பித்து இனி இவ்விதமான காரியங்களில் ஈடுபடக்கூடாது
என்றும் கண்டித்து அனுப்பியுள்ளார்.
ரெட்டியார்களின் தாக்குதலுக்குப் பயந்து குடும்பத்துடன் சென்னை சென்ற
இராகவனைத் தங்கவேலுப்பிள்ளை மீண்டும் விட்லாபுரம் கிராமத்திற்கு
அழைத்துவந்து அங்குள்ள ரெட்டியார்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை
எடுத்துச் சொல்லியும் நீதிமன்றத் தீர்ப்பு முதலானவற்றை வாசித்தும்
காட்டியுள்ளார். “இதன் பிறகு பத்து வருட காலம் பெரிய அளவிலான எந்தப்
பிரச்சினையும் செய்யாமல் இருந்த ஆதிக்கச் சாதியினர் இப்போது இராகவனைக்
கொலை செய்திருப்பதைப் பார்க்கும்போது இத்தனை வருட கால ரெட்டியார்கள்
ஒப்புக்குதான் சமாதானமாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது” என்று தனது
கடிதத்தில் தங்கவேலுப் பிள்ளை எழுதுகிறார்.
(http://www.kalachuvadu.com/ issue-174/
page48.asp )

(http://www.kalachuvadu.com/
page48.asp )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக