செவ்வாய், 21 மார்ச், 2017

நாவலந்தீவு குமரிக்கண்டம் திவாகரநிகண்டு

aathi tamil aathi1956@gmail.com

20/9/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் 'த்வீப' என்று திரித்து,
இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது
நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே.
ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால்(தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ்
சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது.
நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு,
தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.
"நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்"
என்பது திவாகரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக