செவ்வாய், 21 மார்ச், 2017

அராபியர் மூர் பரதவர் மோதல் தம்பிரான் அச்சு போர்த்துகீசியர் மதமாற்றம்

aathi tamil aathi1956@gmail.com

29/9/16
பெறுநர்: எனக்கு
மோ. நேவிஸ் விக்டோரியா எழுதி பாவை அச்சகத்தின் வெளியீடாக வந்திருக்கும்
"தம்பிரான் வணக்கம் - தமிழ் மொழியின் முதல் அச்சு புத்தகம்" என்ற நூல்.

 இதன் தொடர்ச்சியாக வரும் பகுதியில் தமிழ் அச்சுப் புத்தகம் தோன்றிய
வரலாறு விளக்கப்படுகின்றது. தூத்துக்குடி கடற்கரை வாழ் பரதவர்கள் 30,000
பேர் ஒரே சமயத்தில் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவிய வரலாற்றுச் செய்தியும்
அக்கால போர்த்துக்கீஸிய கத்தோலிக்க சமயத்தின் நிலைப்பாடு பற்றிய
செய்திகளும் இங்கு சற்றே குறிப்பிடப்படுகின்றன.
தமிழகத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் வேறூன்ற முக்கிய காரணமாக அமைந்த
முத்துக்குளித்துறை பரதவர்கள் சமூகத்தில் அக்கால கட்டத்தில் நிகழ்ந்த சில
விஷயங்களை இன்னூலின் மூன்றாவது பகுதியில் நூலாசிரியர் விரிவாக
விளக்குகின்றார். கடற்கரை பட்டினமாகிய தூத்துக்குடியில் அராபிய மூர் இன
வணிகர்களின் வருகை, வணிக ஆக்கிரமிப்பு, இதனால் பரதவ மக்களிடையே ஏற்பட்ட
சங்கடங்கள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக ஆசிரியர்
இக்கருத்து கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

 "கி.பி.1535ம் ஆண்டு, ஒரு நாள் தூத்துக்குடி கடற்கரையில் மாவுப்பணியாரம்
விற்றுக் கொண்டிருந்த பரதவப் பெண்ணை மூர் அராபியன் அவமானப்படுத்தி
விட்டான். இதனைக் கேள்வியுற்ற அவளது கணவன், அவனோடு சண்டையிட்டான். இந்தச்
சண்டையின் போது அந்தப் பரதவன் காதில் அணிந்திருந்த தொங்கட்டான் என்று
சொல்லப்படுகின்ற காதணியை அவனது காதோடு மூர் அராபியன் வெட்டி எறிந்து
விட்டான். இந்தக் கொடுஞ்செயல் தங்கள் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரிய
அவமானமாகக் கருதிய பரதவர்கள், அராபிய மூர்களோடு சண்டயிட்டு, பலரைக்
கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த மூர்கள் கீழக்கரையிலிருந்தும்,
காயல்பட்டினத்திலிருந்தும் ஏராளமான ஆயுதங்களுடன் திரண்டுவந்து,
பரதர்களோடு போரிட்டு நிறையபேரைக் கொன்றனர். வெட்டி எடுத்துக் கொண்டு
வரப்படும் ஒவ்வொரு பரதவனின் தலைக்கும் ஐந்து சிறிய பொற்காசுகள் தருவதாக
மூர்கள் வாக்களித்தனர். அவ்வளவுதான்! ஏராளமான பரதவர்களின் தலைகள் வெட்டி
எறியப்பட்டன. ஒரு தலைக்கு ஐந்து பொற்காசுகள் என்பது, ஒரு தலைக்கு ஒரு
பொற்காசு என்று மலிவாகும் அளவிற்கு ஏராளமான தலைகள் உருண்டோடின".
மூர் அராபியர்களுடன் ஏற்பட்ட இப்பிரச்சனையிலிருந்து தங்களை பாதுகாத்துக்
கொள்ள உதவி நாட வேண்டிய அவசியம் பரதவ மக்களுக்கு ஏற்பட்டமையை இன்னிலையில்
கான்கின்றோம். இது மதமாற்றத்திற்கு நல்லதோர் காரணமாக அமைந்தது

என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கேரளாவில் இருந்த டாம் ஜோகுருஸ் என்ற
போர்த்துக்கீஸிய குதிரை வியாபாரி பரதவக் குலத் தலைவர்களான
பட்டங்கட்டிகளிடம் பேசி அவர்களுக்குப் போர்த்துக்கீஸிய படைகளின் ஆதரவைப்
பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு பரதவர்கள் கிறிஸ்துவ மறையைத் தழுவ
வேண்டும் என்று ஆலோசனை வழங்க கி.பி.1535ம் ஆண்டின் இறுதியில்
பட்டங்கட்டிகள் கொச்சின் சென்று அங்கே முதன்மை கத்தோலிக்க குரு மிக்கேல்
வாஸ் அடிகளாரிடம் திருமுழுக்கு பெற்று மதம் மாறுகின்றனர். வாக்களித்தபடி
தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதிக்கு ஒரு பெறும் கப்பற்படையை
போர்த்துக்கீஸிய படைத் தளபதி அனுப்பிவைத்து மூர் அராபியர்களுடன் போரிட்டு
அவர்களை அடக்கி படிப்படியாக அப்பகுதி முழுமையையும் தம் வசமாக்கிக்
கொண்டமையை இப்பகுதியில் நூலாசிரியர் நன்கு விளக்குகின்றார். அதே
ஆண்டிலும் 1536ம் ஆண்டிலும் தூத்துக்குடியின் கடற்கரைப் பகுதி இந்து சமய
பரதவர்கள் 30,000 பேர் கிறிஸ்துவ சமயத்தைத் தழுவினர் என்பது
குறிப்பிடத்தக்க விஷயமாக அமைகின்றது.
இத்தகவல்களோடு பரதவ மக்கள் கிறிஸ்துவ மதத்தினைத் தழுவிய போது அவர்களுக்கு
வழங்கப்பட்ட பெயர் மாற்றங்களைப் பற்றிய குறிப்புக்களையும் இப்பகுதியில்
நூலாசிரியர் சில சான்றுகளோடு விளக்குகின்றார். இவை வாசகர்களுக்கு
இச்சான்றுகளைக் காணவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக