புதன், 22 மார்ச், 2017

பாண்டித்துரை தேவர்

aathi tamil aathi1956@gmail.com

26/4/16
பெறுநர்: எனக்கு
பைந்தமிழ் காத்த….நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட…
பாண்டித்துரைத்தேவர் பிறந்த தினம் (மார்ச் 21 1867)
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும்
கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர்
பாண்டித்துரைத் தேவர்.
"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத்
தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர்
வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய
பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும்
நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.ஆங்கிலேய
ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய
வ.உ.சியின் சுதேசி கப்பல்
நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய
பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின்
தலைவராகவும் பொறுப்பேற்றார்.சிவஞானபுரம் முருகன்
காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில்
இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம்,
தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார்
பாண்டித்துரைத் தேவர்.
உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி,
செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச்
செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன்
ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தி
ன் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய
நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப்
பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில்
மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ்
மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய
பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழத்தில
ிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற,
வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத்
தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர்
அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்!
மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம்
தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க
உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர்
பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர்,
தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம்
தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம்
வீசியது.அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக,
பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ்
ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர்,
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில்,
ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும்
புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல்
"செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச்
செய்தார். அந்த "செந்தமிழ்"
ஏடு நூற்றாண்டு விழா கண்ட
ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக