ஞாயிறு, 19 மார்ச், 2017

கண்ணகி பார்ப்பனர் பசு பறையர் ஆயர் ஐ எரிக்கவில்லை தீயவரை மட்டும் எரித்தாள்

aathi tamil aathi1956@gmail.com

24/11/16
பெறுநர்: எனக்கு
Nadesapillai Sivendran
கண்ணகி ஏவிய தீ அழித்தது யாரை?
*********************************************
*********
'பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்'
இதுதான் மதுரைக் காண்டம் வஞ்சின மாலையில் கூறப்படும் கண்ணகி மதுரையை
அழிக்கத்(?) தீயை ஏவியதாகக் கூறும் வரிகள்.
இதில் என்ன கூறப்படுகின்றது என்று பார்ப்போம்.
பார்ப்பனர்,அறவோர்,பசு,பத்தினிப் பெண்கள்,மூத்தோர்,குழவி இவர்களைக்
கைவிட்டு தீத்திறத்தோரை அழிப்பாயாக என்று கண்ணகி தீக்கு பணிக்கிறாள்.
'பார்ப்பனர்,அறவோர்,பசு,பத்தினிப் பெண்கள்,மூத்தோர்,குழவி இவர்களைக்
கைவிட்டு' இவ்வளவையும் வைத்துப் பார்த்தோமானால் ஒன்று தெளிவாகின்றது.
பெண்கள்,முதியவர்கள்,சிறுவர் நீங்கினால் எஞ்சியவர்கள் யாராக இருக்கும்
போருக்கு செல்லக்கூடிய வயதுடைய ஆண்கள்.
இவர்களைக் கூட கண்ணகி அழிக்கவேண்டும் என்று கூறவில்லை.அடுத்ததாக
இன்னுமொரு வரையறையைப் போடுகிறாள்.
தீத்திறத்தோர் பக்கமே செல்க என்கிறாள்.அதாவது தீய செயல்களை செய்பவர்களை
மாத்திரமே அழிக்க என்கிறாள் கண்ணகி.
மேலும் அன்று இந்தத் தீத்திறம் என்பதால் எது கருதப்பட்டது என்பதற்கு
சிலப்பதிகாரத்தின் இணைக் காப்பியமான மணிமேலையின் ஆதிரை பிச்சையிட்ட
காதையில் ஒரு துப்புக் கிடைக்கின்றது.
'நன்று சொன்னாய் நன்னெறிப் படர்குவை
உன்றனக் கொல்லும் நெறியறம் உரைக்கேன்
உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின்
அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி
மூத்துவிளி மாவொழித் தெவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிகென'
(நன்று சொன்னாய்-நன்குரைத்தாய், நல் நெறிப்படர்குவை. நல்வழியிலே
செல்வாய், உன்றனக்கு ஒல்லும் நெறி அறம் உரைக்கேன்-உனக்க
ு இயலும் வழியால் அறத்தினைக் கூறுவேன், உடை கல மாக்கள் உயிர் உய்ந்து
ஈங்குறின்-கடலிற் கலமுடையப்பட்ட மக்கள் உயிர் தப்பி ஈண்டுச் சேர்ந்தால்,
அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி-கொல்லுந் தொழிலைவிட்டு அவர்களுடைய
அரிய உயிரைக் காத்து, மூத்துவிளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்
தீத்திறம் ஒழிகென - முதுமையுற்று இறக்கும் விலங்குகளைத் தவிர வேறு எந்த
உயிரினிடத்தும் கொலைத் தொழிலை நீங்குவாயாக என்று சாதுவனுரைப்ப)
இதிலிருந்து தீத்திறம் என்பதால் அன்று கருதப்பட்டது கொலை என்பது தெளிவாகின்றது.
இப்போது கண்ணகி என்ன கூறுகிறாள் என்பதை சுருக்கமாக இவ்வாறு
கூறிவிடலாம்.அப்பாவி மக்களை விடுத்து கொலைகாரர்களை மட்டும் அழி
என்கிறாள்.
இப்படியே கூறியிருக்கலாமே ஏன் பார்ப்பனர்,அறவோர்,பசு,பத்தினிப்
பெண்கள்,மூத்தோர்,குழவி என்று நீட்டிமுழங்கவேண்டும் என்றால் இலக்கியம்
என்றாலே விரித்துச் சொல்வதுதான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்னொரு விதமாகவும் பார்க்கலாம் மேடையில் ஒருவர் பேசுகிறார்.அவர்
அனைவருக்கும் வணக்கம் என்று சுருக்கமாகவும் ஆரம்பிக்கலாம் சற்றுவிரித்து
பெரியோர்களே,தாய
்மார்களே,இங்குகூடியிருக்கும் அன்பு உள்ளங்களே என்றும்
ஆரம்பிக்கலாம்.இரண்டுமே ஒன்றுதான்.அப்படித்தான் இதையும் பார்க்கவேண்டும்.
இதில் பார்ப்பார்,பசு இரண்டும் இடைச் செருகல் என்று கருதுவாரும்
உண்டு.அப்படிக் கருதாமல் மூலப்பிரதியில் உள்ளதென்றே வைத்துக்கொண்டால
்கூட அதில் எந்தத் தவறும் இல்லை.
பார்ப்பார் என்பதுகூட வைதீகப் பிராமணர்களை மட்டும் குறிப்பதல்ல.அதில்
அன்று மதச்சடங்குகள் செய்த பறையர்களும் அடக்கம்.
பசுவை ஏன் கூறுகிறார் என்றால் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது இடையர்குலப்
பெண் மாதரி.அந்த நன்றியைக் கொதிநிலையிலும் கண்ணகி மறக்கவில்லை.அவளின்
வாழ்வாதாரம் அழிந்துவிடக்கூட
ாதே என்ற அக்கறையில் அதையும் இணைத்துக்கூறுகிறாள்.
மட்டக்களப்பில் மரபாக வழங்கும் கண்ணகி அம்மன் வழக்குரை காவியத்தில்
'எச்சேரி வெந்தாலும் இடைச்சேரி வேகாமல்
பச்சேரி வெந்தாலும் பறைச்சேரி வேகாமல்'
இருக்கவேண்டும் என்று பாடுகிறார்கள்.
இளங்கோ அடிகள் பார்ப்பனர்,பசு என்று கூறுவதையே இங்கு நாட்டார்
மரபுசார்ந்து பறைச்சேரி,இடைச்சேரி என்று வழிவழியாகப் பாடிவருகின்றனர்
என்றும் பொருத்திப் பார்க்கலாம்.
மதுரையை எரித்த தீ என்று மரபாகக் கூறப்படுவது அங்குள்ள
தீத்திறத்தோரை-அறத்திலிருந்து விலகிய கொலைகாரர்களை எரித்த தீ என்பது
தெளிவு.
அதில் வரும் பார்ப்பார் என்பது ஒருவகையான முன்நிலைப்படுத்
தலே தவிர விதிவிலக்கல்ல என்பதும் தெளிவாகின்றது.மேலும் அந்தப் பார்ப்பார்
என்பது பறையர்களையும் உள்ளடக்கியதே என்பதும் புலனாகின்றது.
வாழ்க இளங்கோ அடிகள் புகழ


Thulanch Viveganand
அருமை அண்ணா..உண்மைதான். "தீத்திறத்தார் பக்கமே சேர்க" என்ற அந்த
ஒருவரியில் தான் சிலம்பின் அறமே வெளிப்படுகிறது எனலாம். விதிவிலக்கு
கொஞ்சம் போட்டுவிட்டு, "எஞ்சிய எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா அழி" என்று
கண்ணகி சொல்லவில்லை என்பது, சிலம்பைப் படித்திருந்தால் அல்லவோ
இவர்களுக்குத் தெரிந்திருக்கும்!
மதுரையை எரித்த பின், ஒருமார்பில் குருதி பெருக, கண்ணீரும் கம்பலையுமாக
நடந்துசெல்லும் கண்ணகியைக் கண்டு இரங்கி, பறைக்குலப் பெண்கள் பஞ்சால்
மார்பைத் துடைக்கின்றனர், ஆயர்சேரிப் பெண்கள் வெண்ணெய் கொண்டு வந்து
அப்புகின்றனர். அதனால் கோபமும் எரிச்சலும் குறைந்த கண்ணகி, பறைச்சேரியும்
இடைச்சேரியும் எரியாது என்று வரம் தந்து செல்கிறாள் என்பது வழக்குரை
காவியம். நீங்கள் சொல்லும் மாற்றுப்பார்வையும் பொருத்தமாகத் தான்
தென்படுகின்றது. சிலம்பில் இல்லாத - ஆனால், இலங்கை வழக்கில் இப்படி
பறையருக்கும் இடையருக்கும் வழங்கப்படும் முன்னுரிமை மேலும்
ஆராயவேண்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக