|
19/10/16
![]() | ![]() ![]() | ||
Nakkeeran Balasubramanyam
அக்கி...
உடலின் மிகு வெப்பத்தினால், அதாவது சூட்டால், சிறுசிறு கொப்புளப்
படலமாய்த் தோன்றும் தோல்நோய்... மலையாளத்தில் அக்கி என்றும்,
அக்கிக்கரப்பன் என்றும், தெலுகிலும் பிராகிருதத்திலும் அக்கி என்றும்
அழைக்கப்படும். இச்சொல் எப்படி வந்ததாம்?
உலத்தல் = காய்தல், வற்றுதல், சாதல், அழிதல் எனும் பொருள் பிறக்கக்
காரணமான 'உல்' எனும் வேர்ச்சொல், உல, உலர்தல், உலை என்று வெப்பத்தோடு
தொடர்புடையது மட்டுமல்லாது, ஒளியோடும் தொடர்புடையது. இந்த 'உல்' என்பது
'உள்' என்றும், அஃதே இன்னும் 'ஒள்' என்றும், ஒளி என்றும், ஒளிர் என்றும்
ஒளிறு என்றும் வெப்பத்தோடும், ஒளியோடும் தொடர்புடைய சொற்பிறப்பிற்கும்
காரணமானது. இந்த 'அள்' என்பதோ அழு என்றும் அழல் என்றும் வந்துள்ளது. அழு
என்பதே பின்னர் அகு என்றும், அஃதே பின்னர் அகை என்றும் ஆகியுள்ளது.
"அகையெரி யானது" என்று கலித்தொகையில் (139: 26) வந்துள்ளமையைக் காணலாம்.
ஆகு என்பது அக்கு என்று அழுத்தம் பெற்றுப் பின்னர் சூடு அல்லது
சூட்டுக்கரப்பன் எனும் பொருளில், 'அக்கி' என்றும் வந்துள்ளது.
உல் என்பது உள் என்றாகிப் பின்னர் உண் என்றுருவாகி, உண்ணம் எனும் வெப்பம்
எனும் பொருளுடைய சொல்லையும் பிறப்பித்துள்ளம
ை கண்கூடு. இந்த உள் > உண் என்றும் அஃதே உண என்றும் ஆகி, காய்தல் எனும்
பொருளுடைய உணத்தல் எனும் சொல்லும் உருவாகக் காரணமாய் அமைந்தது. ஆக,
தீயின்றி வேப்பமேது? வெப்பமின்றி உணத்தலேது? அந்த வெப்பம் உணத்தலால்
'உண்ணம்' எனப்பட்டமை சரியாகத்தானே இருக்கிறது! வந்தேறியோ இதனிடையிலும்
'ஷ்' புகுத்தி, அதனை 'உஷ்ண' என்று, தமிழ்கொண்டு சமைக்கப்பட்ட தன்மொழியில்
சொல்லொன்றைச் அமைத்துக்கொண்டு, பின்னர் அதிலிருந்து தோன்றியதுதான்
'உண்ணம்' (உஷ்ணம்) எனும் தமிழ்ச்சொல்லே என்றுவிட்டான். இற்றைத்
தலையாட்டித் தமிழனும் அதனை எற்றுக்கொண்டானோ?
அதுமட்டுமா? உள் என்பது அள் என்றும், அழு என்றும், அழல் (நெருப்பு)
என்றும் அழன் என்றும் அழனம் என்றும் (இதன் பொருளைத் தீ என்றும் வெம்மை
என்றும் பிங்கல நிகண்டு கூறுகிறது) அழனி என்றும் உருக்கொண்டே பின்னர்
அகனி என்றும் வழங்கப்பெற்றது. அஃதே வந்தேறியோனாற் பறிக்கப்பட்டு அக்னி
எனவும் மாற்றப்பட்டது. 'அக்நி' என்று தன் சமைத்தமொழியிற் கூறி, அஃதே
மேற்கூறிய அக எனத் தொடங்கும் நமது தீ தொடர்பான சொற்களின் மூலம் என்றும்
கூறிக்கொண்டான் அந்த வந்தேறி. சரி, நான் இத்தனை வேர்ச்சொல் வழியைக்
காண்பித்துவிட்டேன், அவன் அதுபோல் காட்டட்டுமே! சமைத்தமொழியில்
மட்டுமல்ல, இலத்தீனத்திலும் இதனையே 'இகுனிசு' (Ignis) என்கின்றாரல்லவா?
அடேய், எமது 'அழனி'யைக் கொண்டுக் கிண்டிய சொல்லை வைத்துக்கொண்டு, அதனைக்
'கிண்டியதால்' கிந்தி எனவும் பின்னர் இந்தி எனவும் பெயர் கொண்ட நும்
மொழியில் 'ஆக்' என அழைத்துக்கொண்டு இப்படித் தலை தூக்கித் திரியாதே!
'கிந்தி' எனக்கூறிக்கொண்டு நீ பேசும் மொழியும் எம்மொழி கொண்டே
சமைத்ததுதானே! அமாமாம்! சமைத்த வடகறிமொழிதான் நுமது தாய் என்கையில்,
அதற்கும் தாய் எம்மொழியாகையில், உனக்கு அவ்வளவு ஏத்தம் ஆகாதடா!
'ழ' என்பது 'க' என்றாதல் போலித்திரிபு ஆகும். இதனை, மழ(வு) என்பது மக(வு)
என்று வழங்கப்பட்டமையோடும், தொழு(தி) என்பது தொகு(தி) என்று
வழங்கப்பட்டமையோடும், முழை என்பது முகை என்று வழங்கப்பட்டமையோடும், குழை
என்பது குகை என்று வழங்கப்பட்டமையோடும் ஒப்புநோக்கி அறியலாம். மேலும்
தளதள என்பது தழதழ என்றும், தகதக என்றும் ஆகியமையோடும் ஒப்பிட்டும்
அறியலாம்.
அடடா, தகதக எனும்போது, தொடர்புடைய வேறொன்றும் தோன்றுகிறதே! தகதக என்பது
மின்னுதல், ஒளிர்தல் எனும் பொருளில் வருகிறது. இந்தத் தக என்பது தகம்
எனப்பட்டது. இதன் பொருள் எரிவு, சூடு என்பதாகும். இத் தகம்
என்பதிலிருந்தே ஒளிரும் மாழையான தங்கம் என்பதும் வந்தது. இதே தக என்பதே
திக என்றும், திகழ் என்றும், திங்கள் (ஒளிரும் தன்மை கொண்ட நிலவு)
என்றும் வந்துள்ளது. தக என்பது தகை எனும் சொல்லாகிய வெப்பம், நீர்வேட்கை
எனும் பொருளிலும் வந்துள்ளது. இந்தத் தகம், சற்றே நீண்டு தாகம் ஆனது.
அடடா! இதனையும் திருடிச் சமைத்துத்தானோ 'தாக்' என்று தாகத்தினைக்
கூறிக்கொண்டான் அந்த வந்தேறி!
போங்கடா புண்ணாக்குகளா!!!!
எம்மொழியில் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே!'
# எல்லாமே_தமிழ்தான்டா
# அதுகூடத்_தமிழ்தான்டா
# இதுகூடத்_தமிழ்தான்டா
# அதுதான்டா_தமிழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக