செவ்வாய், 21 மார்ச், 2017

ஆங்கில மருத்துவம் வழக்கு அக்கு அலோபதி

aathi tamil aathi1956@gmail.com

17/6/16
பெறுநர்: எனக்கு
"தமிழக அரசுக்கு ஓர் வேண்டுகோள் " !!!

"மருந்துகள், மற்றும் அழகுசாதனங்கள் சட்டம் -1995 (Drugs And cosmetic. Act -1995)

என்ன சொல்கிறது?

ஆங்கில வைத்திய முறையால் 51 உடல் வியாதிகளை சட்டப்படி குணப்படுத்த முடியாதாம்!

பின்னர் எதற்கு மருத்துவ படிப்பு?

சட்டப்படி குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள்  எதற்காக?

சிறப்பு மருத்துவர் என்று தன்னை தானே  தம்பட்டம் அடித்துக்கொண்டு,
நோயாளிகளை ஏமாற்றியும், மனித  உயிர்களை   தெரிந்தே  படு கொலைச்செய்யும்
மருத்துவர்களை  தண்டிப்பது யார்?

மருத்துவ துறையில் பல பட்டங்களையும், சான்றிதழ்களையும்   வைத்துக்கொண்டு
நான் அனுபவ சாலி, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்   என உதார் விடும்
மருத்துவர்கள் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வரும் நோயாளிகளிடமும்
அவரது உறவினர்களிடமும்  இந்த அறுவை சிகிச்சையினை நான் மனப்பூர்வமாக
சம்மதிக்கிறேன் என்றும், அதனால் ஏதேனும் பாதிப்போ, உயிரிழப்போ ஏற்பட்டால்
மருத்துவரோ, மருத்துவமனையோ பொறுப்பேற்காது என உறுதி மொழி வாங்குவது
எதனால்?

ஏனென்றால் ஆங்கில மருத்துவத்தில் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த
முடியாது என தெரிந்திருந்தும் பணம் ஒன்றே  குறிக்கோளாக கொண்டு
சட்டத்துக்கு புறம்பாக செயல் படுபடுவர்கள் தேச விரோதிகள் தானே?

தமிழகத்தில் 34 நான்கு ஆயிரம் போலி மருத்துவர்கள்  இருப்பதாக இந்திய
மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது!

பட்டம் வாங்கிய மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகளை போலி
மருத்துவர்கள் எவ்வாறு குணப்படுத்துவார்?

இது மிகப்பெரிய மனித உரிமை மீறல்  பிரச்சனை இல்லையா

நாடு முழுவதும் அடிப்படை வசதி இல்லாத  சட்டத்துக்கு புறம்பான
மருத்துவமனைகள் ஏராளம்!

இவர்களுக்கு அனுமதி அளிப்பது லஞ்சம் வாங்கி தின்னும் கடமை தவறிய கேடு
கெட்ட அரசுத்துறை அதிகாரிகள் !

நோயினால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவர்களை நாடி ஓடுகின்றனர். !

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் தற்பொழுது 354 மருந்துகள்
தடை செய்யப்பட்டுள்ளது  வேடிக்கையாக உள்ளது.!

 போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், போலி மருத்துவ மனைகள் !

சட்டப்பபடி குணப்படுத்த முடியாத பட்டியலில் இடம் பெற்றிருக்கும்
வழுக்கை தலைக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்ற மருத்துவரே  இன்று
பலியாகி இருக்கிறார்!

தினம் தினம் எத்தனை எத்தனை உயிரிழப்புகள்!

இதற்கு எல்லாம் காரணம் யார்?

நோய்வாய்ப் பட்ட. இந்திய குடிமக்களா?

அரசியலமைப்பு சட்ட உரிமைகள் ஏன் பறிக்கப்படுகிறது,

என்ன நடக்கிறது தமிழகத்தில் ?

குணப்படுத்த முடியாது என தெரிந்தும் காசுக்காக வைத்தியம் பார்க்கும்
மருத்துவர்களையும்,  போலி மருந்துகளையும், போலி மருத்துவ மனைகளையும்
உடனடியாக கண்டறிந்து அவர்களை  சிறைக்கு அனுப்புவதற்கு தமிழக அரசு
தயங்குவது ஏன்?

நண்பர்களே!
உங்களுக்கு தெரிந்த எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தாலோ,  அனுமதி பெறாத
மருத்துவமனை   இருப்பது தெரிய வந்தால் அதன் விபரங்களை  தகுந்த
ஆதாரங்களுடன் எங்களுக்கு அனுப்புங்கள்.

"பொது நல வழக்கு பதிவு செய்ய நாங்கள் தயார் "

இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு  19 (1)   அ மற்றும் 51 (A)  ஓ வின்
கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் '

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "(LEGAL AWARENESS AND
ANTI CORRUPTION ORGANIZATION.)
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
இ -மெயில் :nanjillaacot@gmail.com

தொடர்புக்கு :
நாஞ்சில்  K. கிருஷ்ணன்
நிறுவனர்
98655 90723

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக