புதன், 22 மார்ச், 2017

ஸ்வஸ்திக் கிணறு ஸ்வஸ்திகா ஆரியர் இட்லர் ஹிட்லர் சின்னம்

aathi tamil aathi1956@gmail.com

28/5/16
பெறுநர்: எனக்கு
தமிழர் அரசு , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
# ஸ்வஸ்திக் கிணறு எனப்படும்
# மாற்ப்பிடுகு_பெருங்கிணறு !
திருச்சி அருகே உள்ள
# திருவெள்ளரையில் உள்ளது இது
கி.பி. 805ம் ஆண்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற சிற்றரசன் தன்
அரசன் நந்திவர்மனின் பட்டப்பெயரான ‘‘மாற்பிடுகு’’ என்ற பெயரில்
‘‘மாற்பிடுகு பெருங்கிணறு’’ என இதனைத் தோற்றுவித்த செய்தி ஒரு சாசனத்தில்
கூறப்பெற்றுள்ளது.
ஆலம்பாக்கத்து கம்பன் அரையனே அதே கிணற்றின் பக்கச் சுவரில் ஒரு அற்புதமான
நான்குவரி பாடலைப் பொறித்து வைத்து இருக்கிறான்
ஸ்ரீகண்டார் காணா உலகத்திற் காதல் செய்துநில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்த நாள்
---------- பார்த்து நின்று நைய்யா தேய்
தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து
------------------------------------------- நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்
நேற்று ஒருவனைக் கண்டேன்.
இன்றோ அவனைக் காணமுடியவில்லை
இறந்துவிட்டான்.
இப்படிப்பட்ட இவ்வுலகத்தில் அனைத்தின் பாலும் ஆசைகொண்டு நிற்காதீர்கள்.
அன்றொருநாள் நம்மை இறைவன் படைத்தானே அந்த பிறந்தநாளின் நட்சத்திரம்
சாதகம், பலன் இவற்றைப் பார்த்துக்கொண்டு மனம்நொந்து நைந்து போகாதீர்கள்.
வயது முதிர்ந்து கையில் கோலூன்றி நம் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே
நம்மால் ஈட்டப் பெற்று நமக்குப் பயன் பட்டவை போக மீதம் எஞ்சியிருப்பதை
இந்த உலகம் நன்மைபெற மனம் உவந்து அளியுங்கள்
என்ற வேண்டுகோளே கல்வெட்டுப்பாடலாக அங்கு காட்சி அளிக்கின்றது !
இந்தஊரில் உள்ள வேறு ஒரு கல்வெட்டு தமிழ் மொழி பற்றிய பெருமையை உலகுக்கு சொல்வது !
அது இன்னொரு பதிவில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக