ஞாயிறு, 19 மார்ச், 2017

விதைப்பந்து விதை மரம் புதுமுயற்சி காடு

aathi tamil aathi1956@gmail.com

பிப். 27
பெறுநர்: எனக்கு
Pasumai Shahul , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — வானதி
பாலசுப்பிரமணியன் உடன்.
விதை பந்து....!
****************
பொதுவாக நாம சுற்றுலா போனா நொறுக்குதீனி தின்ற பிளாஸ்டிக் கவர்கள்,
காலியான தண்ணீர் பாட்டில்களை வெளியே வீசி எறிந்து இயற்கைக்கு நம்மால் ஆன
தொல்லைகளை செய்வோம்.
இன்னும் சில அதி மேதாவிகள் சிகரட்டை பிடித்து காய்ந்த சருகுகள் மேல்
தூக்கி எறிந்து ஊரெல்லாம் வெளிச்சம் காட்டுவார்கள்.
ஆனால் திருச்சியிலிருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா புறப்பட்ட என் முட்டாள்
தோழி வானதி போகும் வழி எல்லாம் 4500 விதை பந்துகளை வீசி எறிந்தபடி
சென்றிருக்கிறாள்.
விதைப்பந்துன்னா என்ன..?
புங்கன்,இலுப்பை,இலந்தை,நாவல்,ஆ
லம்,அரசு, வெப்பாலை,பூனைக்
காலி,யானைக்காலி,நீரடிமுத்து போன்ற விருட்ஷ விதைகளை மண்புழு உரம் கலந்த
மண்ணில் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்வது.
இவைகளை போகிற போக்கில் மண்ணில் விசிறி எறிந்துவிட்டு செல்லும்போது இலேசான
மழை பெய்தாலும் அவை முளைக்க ஆரம்பித்துவிடும்.
ஜாலியாக கொல்லிமலையை சுற்றி பார்த்தோமா? வந்தோமா என்று இல்லாமல்
விதைப்பத்துகளை கடமையே கண்ணாக வழியெல்லாம் வீசி எறிந்துவிட்டு வந்த வானதி
முட்டாள்தானே...!
ஆம்...! இயற்கை ஆர்வலர்களை இந்த சமூகம் முட்டாளகவும், அதிகாரவர்க்கம்
இவர்களை சமூக விரோதிகளாகவும்தானே பார்க்கிறது.
இங்கே காட்டை உறுவாக்குபவர்கள
ை கண்டுகொள்ள நாதியில்லை.....,
காட்டை அழிப்பவர்களை பிரதமரே வந்து பாராட்டுவார்....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக