செவ்வாய், 21 மார்ச், 2017

கல்லணை சிறப்புகள்

aathi tamil aathi1956@gmail.com

5/6/16
பெறுநர்: எனக்கு
Shiva > சோழனுடன் ஒரு சரித்திர பயணம் - Cholanudan oru sarithira payanam
களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும்
வரலாற்று உண்மைகள்!
சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது
தான் கல்லணை என்பது நாம் யாவரும் அறிந்ததே. அனால் இந்த கல்லணை எதற்காக
கட்டப்பட்டது, கட்டும் போது ஏற்பட்ட இடையூறுகள் என்ன? அதை எப்படி சரி
செய்தார்கள் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
1.கரிகாலன் சோழன் கட்டிய.... இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டது
2.உலகின் பழமையான அணை தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது
எனவும், உலகில் உள்ள பழமையான அணைகளில் இப்போது வரை புழக்கத்தில் உள்ள
அணையும் இதுதான் என்றும் அறியப்படுகிறது.
3.பழமையான நீர் பாசன திட்டம் உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்
கொண்டது கல்லணை என்று குறிப்பிடப்படுகிறது.
4.தொழில்நுட்பம் கல்லணையின் அடித்தளம் மணலில் அமைக்கப்பட்டது ஆகும். இந்த
பழந்தமிழர் தொழில்நுட்பத்தை இன்று வரை வியத்தகு சாதனையாகப்
புகழப்படுகிறது.
5.கல்லணையின் அதிசயம் கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18
அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும்
மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத்
தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.
6.விவசாயிகளின் துயரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட
கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து விவசாயம்
பாதிக்கப்படுவதையும், மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க
காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் .
7.அனைக் கட்டுவது கடினம் காவிரியின் மேல் அணைக் கட்டுவது சாதாரன காரியம்
அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர்
மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.
8.சூத்திரம் நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது, அலை நமது கால்களை
அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே மணல் அரிப்பு ஏற்பட்டு, நம்
கால்கள் மண்ணுக்குள்ளே புதையும். இதைத் தான் சூத்திரமாக மாற்றினார்கள்
பழந்தமிழர்கள்.
9.பெரிய, பெரிய பாறைகள் காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக்
கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக
கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையும். அதன் மேல் வேறொரு பாறையை
வைப்பார்கள்.
10.கல்லனைக் கட்டப்பட்டது நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி
மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இதனால், இரண்டு பாறைகளும்
ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில்
செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
11.சர் ஆர்தர் காட்டன் ஆய்வு இந்திய நீர் பாசனத்தின் தந்தை என
அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல
ஆண்டுகாலம் ஆராய்ந்துள்ளார்.
12.மணல் மேடான கல்லனை கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம்
தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும்
வறட்சியாலும் வளமை குறைந்துக் காணப்பட்டது.
13.மணல் மேடுகளுக்கு தீர்வு இந்த சூழலில் 1829-இல் காவிரி பாசன பகுதியின்
தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால், சர் ஆர்தர் காட்டன்
நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில், தைரியமாக சிறு
சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார்.
14.உலகம் வியந்த கல்லணை கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த
ஆர்தர் காட்டன், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும்
உலகுக்கு எடுத்துக் கூறினார்.
15.மகத்தான அணை சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை
"மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.
16.விவசாயத்தைக் காக்கிறது பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு
ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில்
இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும்
நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில்
காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா
மாவட்டத்தின்பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து
காப்பற்றப்படுகிறது.
17.கல்லணை மேல் பாலம் 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.
பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது
ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

1 கருத்து: