சனி, 25 மார்ச், 2017

சிட்டுக்குருவி டவர் பொய் தானியம் நீர் இல்லாமலே அழிவு

aathi tamil aathi1956@gmail.com

2/4/16
பெறுநர்: எனக்கு
Chellam Selva
சிட்டுக்குருவி குறைந்து போனதற்கு செல்போன் டவர்ஸ் காரணம் என்று அண்ட
புளுகை அவிழ்த்து விட்டதன் காரணம் உண்மையாக இருக்குமெனில் என்னை போல
செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்கள் எல்லாம் மாண்டு போயிருப்பார்கள் தானே
உண்மையான காரணத்தை உற்று நோக்குவோம்
சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவே மானவாரியில் விளையும் சிறுதானியங்கள்
தான் அதாவது கம்பு,ராகி,சோளம் , சாமை,தினை,நத்தை
சூரி,குதிரை வாளி,போன்ற அனைத்து வகை தானியங்கள் தானே ......
நகரமயமாக்கல் வேகமெடுத்த நிலையில் மானாவாரி விவசாயத்தை நீர்த்துப்போகச்
செய்த அரசாங்கம் ஏரி குளம் குட்டை போன்ற நீர்நிலைகள் எஎல்லாவற்றையும்
அரசாங்க அடியாட்கள் மூலம் தன்வயபடுத்தி நிர்மூலமாக்கபட்டதன் விளைவே
சிட்டுக்குருவிகள் இனம் அருகியது
சிட்டுக்குருவிகள் ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கு மேலே குளிக்கும் அதாவது
தனது உடலை நீரால் ஈரபடுத்திகொண்டே இருக்கும் அப்போது கிராமங்களில் உள்ள
குளம் ஏரிகளில் நெல் வயல்களில் அவ்வளவு ஏன் புடக்களையில் உள்ள பானையில்
உள்ள நீரில் கூட குளித்து செல்வதை நான் பார்த்தவன் பூமி வெப்பமயமாதல்
ஆனதாலும் உணவு தானியங்கள் இன்மையாலும் நீர்நிலைகள் அற்று போனதாலும்
சிட்டுக்குருவி அருகி அழிந்தது....
இது மனித இனத்திற்கும் பொருந்தும் என்பதை உணருவோம்
சிறு தானியங்கள் மற்றும் நீர்நிலைககளை மேம்படுத்த முயல்வோம்
மே 20 சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவிககளை பற்றி நினைக்க நாம
இருக்கோம் நம்மை பற்றி கவலைபடதான் ஒரு தவைவரும் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக