திங்கள், 20 மார்ச், 2017

புலி சிங்கம் இரண்டும் தமிழ் விலங்கு ஈழம்

aathi tamil aathi1956@gmail.com

10/10/16
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
கற்கால ஈழத்தின் பெரும்புலியினமும் ஈழச்சிங்க இனமும்.
தற்கால ஈழத்தில் புலிகளும் (விலங்கு) சிங்கங்களும் (விலங்கு) கிடையாது
எனவும் அதனால் புலிக்கொடியை (விலங்கு) கொண்ட எல்லாளன் (பிற்கால
ஓவியங்களில்) தமிழகத்தில் இருந்து ஈழத்துக்கு படையெடுத்தான் எனவும் அவனை
ஈழத்துக்கு வந்தேறி எனவும் சில தமிழர் விரோத பகைவர் கூறுவர். முதலில்
எல்லாளன் சோழன் என்பதே ஒரு அனுமானம் தான். அவன் தமிழன் என்பது மட்டுமே
இலக்கியங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவன் புலிக்கொடியை (விலங்கு)
கொண்டிருந்தானா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஈழத்தில் புலிகள்
(விலங்கு) தற்காலத்தில் இல்லையே ஒழிய பண்டைய காலங்களில் இருந்ததா என்று
யாரும் யோசிப்பதே இல்லை.
இது ஒருபக்கமிருக்க சிங்கம் (விலங்கு) ஏதோ சிங்களருக்கு மட்டும் ஊரிய
கொடி போல அடையாளப்படுத்தப்பட்டும் வந்துள்ளது. இப்போது தமிழர்
மெய்யியலுக்கு பகைச்சமயமான சைனத்தின் அடையாளமாக மட்டுமே சிங்கத்தை
(விலங்கு) அடையாளப்படுத்தும் ஆய்வாளர்களும் உள்ளனர். ஈழத்தில் சிங்கங்கள்
(விலங்கு) தற்காலத்தில் இல்லையே ஒழிய பண்டைய காலங்களில் இருந்ததா என்றும்
கூட யாரும் யோசிப்பதே இல்லை.
முதலில் உலகத்தமிழர்களுக்கு ஒரு முக்கியமான விடையம் யாதெனில் ஈழத்தின்
மத்திய பகுதிகளில் புலிகள் இருந்ததற்கான புலிகளின் 10 தொல்லுயிர்
எச்சங்கங்களும் சிங்கம் இருந்ததற்கான ஒரு தொல்லுயிர் எச்சமும்
கிடைத்துள்ளன. இந்த ஈழத்துப்புலியும் ஈழத்துச்சிங்கமு
ம் 15,000 ஆண்டுகள் முன் அழிந்தன என கருதுகோள் ஈழ ஆய்வாளர்களிடையே உண்டு.
அதனால் தான் தமிழிலக்கியங்களில் சிங்கம் அரிமா ஏறு என்று பல பெயர்களில்
வழங்கப்பட்டுள்ளது. வல்வில் ஓரி போன்ற அரசர்கள் வேட்டையாடிய சிங்கம்
பற்றி கூட சங்க இலக்கிய குறிப்புகள் உண்டு.
இன்னொரு முக்கியமான விடையம் சிங்கம் + ஈழம் என்ற இருசொற்கள் இணைந்தே
சிங்களம் என்றும் கூட ஆனது என்பதாகும். ஈழத்தில் புலி சிங்கம் பற்றிய
தொல்லுயிர் எச்சங்கள் நான்கு மட்டுமே கிடைத்திருந்தாலும் சங்க
இலக்கியங்களில் சிங்கம் அதிகமாக குறிப்பிடப்படுவதை வைத்து சிங்கமும்
புலியும் ஈழம் தமிழகம் இரண்டு பகுதிகளிலுமே கணிசமான அளவு வாழ்ந்ததாக
கொள்ளலாம்.
பல்லவர்கள் சிங்கக்கொடிக்கும் ஈழத்தின் சிங்கத்துக்கும் கூட தொடர்பிருக்க
வாய்ப்பு உண்டு. சங்ககாலம் வரை ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த
இவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் வேண்டுமானால் கிடைக்காமல்
இருந்திருக்கலாம். ஆனால் தமிழகம் ஈழமும் சங்ககாலம் வரை புலி சிங்கங்களை
கணிசமான அளவு கொண்டிருந்தது என்பது மட்டும் உறுதி.
- தென்காசி சுப்பிரமணியன் (Rajasubramanian Sundaram Muthiah )
கீழுள்ள மூன்று படங்கள்.
1. ஒரிலக்கம் ஆண்டுகளுக்கு முன் இறந்த ஈழத்தின் சிங்கப்பல்.
2. கி.மு. 15,000 ஆண்டளவில் அழிந்திருக்கலாம் என கருதப்படும்
பெரும்புலியின் கற்பனை வரைபடம்.
3. கி.மு. 15,000 ஆண்டளவில் இறந்த ஈழப்புலிப்பல். — Rajasubramanian
Sundaram Muthiah உடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக