ஞாயிறு, 19 மார்ச், 2017

மருதுபாண்டியர் இளவரசன் பரிதாபநிலை ஆங்கிலேயர் மலேசியா

aathi tamil aathi1956@gmail.com

பிப். 15
பெறுநர்: எனக்கு
Gabriel Raja
யாருக்காவது 'முத்துவடுகு ' என்கிற துரைச்சாமி சின்ன மருதை தெரியுமா?
.
சிவகங்கை சீமையிலே பெரிய மருது தூக்கிலிடப்படும் முன் தனது வாரிசுகளைப்
பாதுகாத்து, தன் சொத்துக்களைத் தர்ம காரியங்களுக்குக் (இதை இன்றைய
அரசுகள் கவனிக்க வேண்டும்) கொடுக்க வேண்டும் என உருவிய கத்தி மீது
கிழகிந்திய நிறுவன அரசாங்கத்திடம் உறுதி வாங்கினார்.
ஆனால் அவர் இறந்த பின் சிவகங்கைப் போரில் பிடிபட்ட தளபதிகள் வீரர்கள் என
மொத்தம் 72 பேர் பினாங் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
அந்தத் தீவின் சிறைச்சாலையில் கால்களில் மிகப்பெரிய குண்டுகள்
கட்டப்பட்டு நடக்கக்கூட அனுமதி தராமல் ஒரு 15 வயதுச் சிறுவனை அடைத்து
வைத்திருந்தார்கள். அவன் தான் சின்ன மருதுவின் மகன் முத்துவடுகு.
'உருவிய கத்தி மேல் செய்த சத்தியம் உயிரோடு சேர்ந்து காற்றில் கரைந்து விட்டது'.
கெட்டி பொம்மு நாயக்கரை கொன்ற பரங்கியர் இராணுவ உயர் தளபதி பேனர்மேன்
பிரபு அவர்களுக்கு பினாங் தீவில் கட்டிக்கொண்டிருந்த கோவில் பணிக்கு,
காளையார்கோவிலைக் கட்டிய வம்சத்தில் வந்த முத்துவடுகு ஒரு சித்தாளாகச் சென்றார்.
அங்கிருந்த ஒவ்வொரு கிழகிந்திய அதிகாரியிடமும், தான் உயிரோடிருப்பது தன்
குடும்பத்திற்குத் தெரிய வேண்டும் என்று தான் எழுதியக் கடிதத்தை
எப்படியாவது தன் குடும்பத்திடம் சேர்த்துவிடக் கோரிக் கெஞ்சியுள்ளார்.
கடைசி வரை அந்தக் கடிதம் பினாங் தீவைத் தாண்டவேயில்லை.
தன் இளமையை எல்லாம் தனிமையில் கழித்த இளவரன் வயதாகி நோய்வாய்ப்பட்டு
கடைசியாக தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு சிவகங்கைச் சீமையில் இறந்து
போகிறான் யாரோ ஒருவனாக.
.
இது தான் பரங்கியரை உண்மையில் எதிர்த்தவர்களின் நிலை.
இன்று அரச வாரிசுகள் என்று சலுகை வாங்கி வரும் பரங்கியருக்கு ' நக்கி '
விட்டு இரவல் செய்தவர்களை தான் நாடு கொண்டாடி மகிழ்கிறது.
2 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக