|
18/7/16
| |||
Kathir Nilavan
'தனித் தமிழியக்கத் தந்தை'
மறைமலையடிகளார் பிறந்த நாள்
|15.7.1876|
1916ஆம் ஆண்டில் நீதிக்கட்சியும், தனித்தமிழ் இயக்கமும் ஒரே கால
கட்டத்தில் பிறந்தவை. திராவிட இயக்கங்கள் நீதிக்கட்சியை உயர்த்திச்
சொல்லுமளவிற்கு தனித்தமிழ் இயக்கத்தை உயர்த்திச் சொல்வதில்லை.
நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களுக்கு இணையாக பதவி கேட்டுப் போராடினார்கள்.
ஆனால் பார்ப்பன புரோகிதச் சடங்கு மறுப்பு, வைதீக மறுப்பு, வடமொழி
எதிர்ப்பு ஆகிய கொள்கை கொண்டவர்களல்ல. தமிழையும், தமிழினத்தையும்
தடைக்கற்களாகவே கருதினர்.
தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த சைவ மதமும், தனித்தமிழ் இயக்கமும்
நீதிக்கட்சியைப் போல எவற்றோடும் சமரசம் செய்து கொள்ள வில்லை.
1866-க்குப் பின்னர் தோன்றிய ஆரிய சமாஜமும், பிரம்ம சமாஜமும் ஆரியத்தின்
வேதாந்தக் கொள்கையை மக்களிடம் பரப்பி வந்தன. அதனை தமிழர்களிடம் பற்றுக்
கொள்ள விடாது தடுத்த பெருமை மறைமலையடிகளுக்கே உண்டு. 1905ஆம் ஆண்டில்
"சைவ சித்தாந்த மகா சமாஜம்" எனும் அமைப்பை ஞானியார் அடிகளோடு இணைந்து
ஏற்படுத்தினார். ஆரிய வேதாந்தத்திற்கு எதிரானது சைவ சித்தாந்தம் என்று
பிரகடனப்படுத்தி
னார். ஆரிய பார்ப்பன மதத்திடமிருந்து தமிழர் மதமாகிய சைவ மதத்தை
மீட்டெடுக்க அறை கூவல் விடுத்தார். ஆரியருக்கு தமிழர் கடமைப் பட்டிருக்க
வில்லை, அவர்களுக்கு முற்பட்ட சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே! என்று
ஆய்வு நூல்கள் பல எழுதினார்.
1916ஆம் ஆண்டில் ஆரியர் எதிர்ப்பில் ஊன்றி நின்ற மறைமலையடிகளார் ஆரியரின்
மொழியாகிய வடமொழி எதிர்ப்பில் கவனம் செலுத்தினார். வள்ளலார் பாடல்களில்
மனமுருகியவர் அப்பாடலில் 'தேகம்' என்னும் வடசொல் இருப்பதை கண்டறிந்தார்.
பிறகு அதனை 'யாக்கை' என்று தனித் தமிழில் மாற்றினார். வடமொழி மிகுதியால்
தமிழ் தாழ்வுறுவதைக் காணச் சகிக்காது அன்றே தனித் தமிழ் இயக்கத்தை
உருவாக்கினார். அதற்கு முதற்படியாக 'சுவாமி வேதாசலம்' என்றுள்ள தனது
வடமொழிப் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றம் செய்தார்.
1942இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உரை நிகழ்த்திய போது அவரின்
தனித் தமிழ்ப்பேச்சு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு படித்த
மாணவர்களான நாராயணசாமி- நெடுஞ்செழியன் என்றும், இராமையா- அன்பழகன்
என்றும், திருஞானம்- நன்னன் என்றும், கிருஷ்ணன் -நெடுமாறன் என்றும் அழகு
தமிழில் பெயர் மாற்றிக் கொண்டனர். தி.க.விலிருந்து பிரிந்த தி.மு.க. மொழி
உணர்ச்சியை தனித்தமிழ் இயக்கத்திடமிருந்து தான் கற்றுக் கொண்டது. அதனால்
தான் அண்ணா ஆங்கிலத்தை ஆதரித்த நிலையிலும் பெரியாரைப் போல தமிழைப் பழிக்க
வில்லை.
1938இல் இராசாசி ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில்
தமிழறிஞர்களுக்கு தலைமை தாங்கி அப்போராட்டத்தை நடத்தினார். அந்தப் போரில்
'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை முன் மொழிந்து மறைமலையடிகள் பேசினார்.
அதை வழி மொழிந்து பேசியவர்கள் ஈ.வெ.இராமசாமி, சோமசுந்த பாரதியார் ஆகியோர்
ஆவார். (நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய 'தி.மு.க.வரலாறு' எனும் நூலில்
இத்தகவல் இடம் பெற்றுள்ளது.)
மறைமலையடிகள் தமது குடும்பத்தாரையும் தமிழ் காக்கும் போரில்
ஈடுபடுத்தவும் தவற வில்லை. மகன்கள் திருநாவுக்கரசு, மாணிக்கவாசகம்,
மருமகள்கள் ஞானம்மாள் தன் கைக்குழந்தையோடும், சரோஜினி தன் மகனுடோடும்
சிறை ஏகினர். மகள் நீலாம்பிகையோ இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு தலைமை
வகித்தார்.
1900ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை விழாக்கள், மாநாடுகள்,
போராட்டங்கள் எவற்றிலுமே மறைமலையடிகளை தலைமையாகக் கொண்டே நடத்தப்பட்டன.
அவர் முன்னெடுத்த சைவச் சமயத்தில் சில குறைபாடுகளுண்டு. ஆனால் அவர்
முன்னெடுத்த தனித் தமிழியக்கத்தில் நிறையே அதிகமுண்டு. வடமொழி
ஆதிக்கத்திலிருந்து அவர் மீட்டெடுத்த தமிழ்மொழி இன்று ஆங்கில முதலை
வாயில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழுக்குத் தன்னை ஒப்படைத்துப் போராடிய
மறைமலையடிகள் வழி நின்று ஆங்கில, இந்தி மொழி ஆதிக்கத்தை வேரறுக்க
இந்நாளில் உறுதியேற்போம்! — ராசசேகரன் மன்னை , தமிழ்ச் செல்வன் தமிழ் ,
கலைச்செல்வம் சண்முகம் , Tamil Nilavan,
தங்கப்பழனி , கி.த. பச்சையப்பன்,
ஆர்த்திக் தமிழன் , Veyilmuthu Valli, Irulandi Shanthi , இரா.எதிர்வன் தியாகு,
க.விடுதலைச் சுடர் , மெய்வழித் தமிழ் , S Gsviswanathan Viswanathan , ச.
செந்தமிழன் , நல்ல சிவம், கோவேந்தன் வி, பாரதிசெல்வன் இலரா, மா.சீ.கா.
அமுதன், Raasaa Raghunathan,
Thiyagalingam, Tamilvendhan Murugan ,
மண்ணாடிப்பட்டி பா.ம.க மற்றும் Vel Samy உடன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக