|
27/5/16
| |||
தோழர்
› Home
View web version
Thursday, May 26, 2016
tholar balan at 4:29 AM
தோழர் தமிழரசனும் அவரது மரணமும்
தோழர் தமிழரசனும் அவரது மரணமும்
(தோழர் பாலன் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”
என்னும் நூலில் இருந்து)
01.09.1987ம் நாள். அப்போது நான் சென்னையில் இருந்தேன். மாலைப்
பத்திரிகைகளில்தான் அந்த செய்தியை முதன் முதலாக பார்த்தேன்.
பொன்பரப்பியில் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற ஜந்;துபேர் மக்களால்
அடித்துக் கொல்லப்பட்டதாக செய்தி போடப்பட்டிருந்தது. பணத்தேவைக்காக
வங்கியை கொள்ளையடிக்கப்போவதாக தோழர் தமிழரசன் என்னிடம் கூறியிருந்தார்.
ஆனால் எப்போது? எப்படி? எந்த வங்கியை? கொள்ளையடிப்பது என்ற விபரங்களை
அவர் என்னிடம் கூறியிருக்கவில்லை. நாமும் அந்த விபரங்களை சம்பவத்திற்கு
முன்னர் கேட்க விரும்புவதில்லை. எனவே இந்த செய்தியை பத்திரிகையில்
படித்தவுடன் பெரும் அதிர்ச்சியாகவும் எப்படி நடந்திருக்கும் என்பது
குறித்து குழப்பமும் எனக்கு ஏற்பட்டது. இப்போதுபோல் அந்த காலத்தில்
கைத்தொலைபேசியோ அல்லது விரைவான தகவல் தொடர்பு வசதிகளோ எதுவும் எம்மிடம்
இருக்கவில்லை. எனவே நடந்த இந்த சம்பவம் குறித்து உடனடியாக விபரம் எதுவும்
அறியமுடியாமல் தவித்தேன்.
சம்பவம் நடந்து இரு நாட்களின் பின்னர் தோழர் தமிழரசனுடன் கூட இருந்த எமது
தோழர் ஒருவர் வந்தார். அவர் மூலமே ஒரளவு விபரங்களை என்னால் பெற
முடிந்தது. அந்த எமது தோழரின் பெயர் திணேஸ். அவர் ஈழத்தவர். எமது “பேரவை”
அமைப்பை சேர்ந்தவர். சுறுசுறுப்பானவர். குறிப்பாக நல்ல ஒரு டிறைவர்.
அதனால் தமது தாக்குதல் சம்பவங்களிற்கு உதவியாகவும் ஆலோசனைகளை பெறவும்
அவரை தோழர் தமிழரசன் தன்னுடன் அழைத்து சென்றிருந்தார். தோழர் தமிழரசன்
மேற்கொண்ட மருதையாற்று பாலம் மீதான வெடிகுண்டு தாக்குதல் முதல் பல
சம்பவங்களுக்கு எமது தோழர் திணேஸ் பெரிதும் உதவியிருக்கிறார். இவரது
பங்களிப்பை தெரிந்துகொண்ட கியூ பிரிவு உளவுத்துறை பொலிஸ் இவரையும்
பொன்பரப்பி வங்கி கொள்ளை சம்பவத்தின்போது கொல்வதற்கு திட்டம்
தீட்டியிருந்தது. ஆனால் இவர் அந்த சம்பவத்தில் பங்கு பற்றாததால்
அவர்களால் இவரையும் அதில் கொல்ல முடியாமற்போய்விட்டது . எனவே பின்னர்
அவரையும் பிடித்து கொல்வதற்காக மிகவும் மும்முரமாக தேடினார்கள். இந்த
ஆபத்தான நிலையிலேயே அவர் தப்பி சென்னை வந்தார். அவர் தொடர்ந்தும்
இந்தியாவில் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்தாகும் என்பதால் எமது தோழர்கள்
அவரை உடனே இரகசியமாக இலங்கைக்கு படகு மூலம் அனுப்பி வைத்தார்கள்.
ஈழத்தில் இருந்த பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் தங்கள் இயக்க
செலவுகளுக்காக பணம் கொள்ளையடித்தார்கள். சில இயக்கங்கள் வங்கியில்
கொள்ளையடித்தன. சில பெற்றோல் நிலையங்கள், தபாற் கந்தோர்கள், சங்கக்கடைகள்
என்பனவற்றில் கொள்ளையடித்தன. இன்னும் சில தனியார் வீடுகளிலும் மட்டுமல்ல
கோயில்களிலும்கூட கொள்ளையடித்தன. ஈழவிடுதலை இயக்கங்கள் கொள்ளையடித்து
பணத்தேவைகளை பூர்த்தி செய்ததை அறிந்த தோழர் தமிழரசனும் தமது அமைப்பு
செலவுகளுக்காக பணம் கொள்ளையடிக்க முயன்றார். அவர் முதலில் முயற்சி
செய்தது உட்கோட்டை வங்கியில் ஆகும். அங்கு கொள்ளையிட முயன்றபோது அந்த
வங்கிக் காசாளர் பணத்தை கொடுக்க மறுத்தார். பணப்பையை எடுக்க இழுபறி
நடந்தது. அதனால் அந்த காசாளர் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு
மக்கள் கூடிவிட்டார்கள். இதனால் பணம் கொள்ளையடிக்க முடியாமல் தமிழரசன்
தன் குழுவினருடன் தப்பி சென்றார்.
இவ்வேளையில் தமிழகத்தில் தங்கியிருந்த ஈழப் போராளி அமைப்பு ஒன்றிடம்
புலிகள் இயக்கத்தை அழிக்குமாறு கோரி பெருமளவு ஆயுதங்கள் இந்திய உளவு
அமைப்பு "றோ" வினால் வழங்கப்பட்டது. அந்த ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட அந்த
அமைப்பின் பொறுப்பான மூன்று நபர்களுக்கு அதனை புலிகளுக்கு எதிராக
பயன்படுத்துவதில் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் தங்களை வைத்து புலிகளை
அழிக்க இந்திய உளவு அமைப்பு போடும் திட்டத்திற்கு ஒத்துழைக்க
விரும்பவில்லை. அதனால் அந்த ஆயுதங்களை இரகசியமாக எமது அமைப்பிடம்
ஒப்படைக்க விரும்பினார்கள். அதற்கு மாறாக தங்கள் மூவரையும் பாதுகாப்பு
கருதி ஏதாவது வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டார்கள். அந்த
ஆயுதங்களை பெற்றுக்கொண்டால் உடனடியாக இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்குரிய
வசதி அப்போது எமது அமைப்பிடம் இருக்கவில்லை. எனவே நாங்கள் அந்த
விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இதனை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன்
தான் அந்த நபர்கள் வெளிநாடு செல்வதற்குரிய பணத்தை எற்பாடு செய்வதாகவும்
கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான அந்த ஆயுதங்களை எப்படியாவது தமக்கு
பெற்றுத் தருமாறு கேட்டார்.
அந்த மூன்று நபர்களையும் வெளிநாடு அனுப்புவதற்கு அப்போது மூன்று லட்சம்
ரூபா தேவைப்பட்டது. இதனை தனக்கு தெரிந்த பலரிடம் கூறி பணத்தை திரட்டித்
தரும்படி தோழர் தமிழரசன் கேட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி உடனடியாக
அந்த தொகையை திரட்ட அவர்களால் முடியவில்லை. எனவேதான் வேறு வழியின்றி அவர்
வங்கியை கொள்ளையடிக்க முயன்றார். அவர் காவிரிப் பிரச்சனைக்காக
கிருஸ்ணாசாகர் அணைக்கட்டை உடைப்பதற்கு தேவையான வெடி மருந்தை
வாங்குவதற்காகவே வங்கியை கொள்ளையடிக்க முயன்றதாக சிலர் கூறுகிறார்கள்.
அது தவறான தகவல் ஆகும்.
தோழர் தமிழரசன் வங்கியை கொள்ளையடிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொண்ட
உளவு அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி அவரையும் அவருடன் கூடச் சென்ற
தோழர்களையும் கொன்று குவித்தனர். தோழர் தமிழரசன் கொல்லப்படும்போது அவர்
கையில் நிரம்பிய தோட்டாக்களுடன் சப் மிசின்கன் என்னும் இயந்திர
துப்பாக்கி இருந்தது. அவர்கூடச் சென்ற தோழர்களிடமும் துப்பாக்கி
ஆயுதங்கள் இருந்தன. அதைவிட பயங்கரமான கிரினைட் வெடி குண்டுகளும்
அவர்களிடம் இருந்தன. தோழர் தமிழரசன் நினைத்திருந்தால் ஒரு கிரினைட்
குண்டை வீசியிருந்தாலும்கூட அவர் தப்பிச் செல்லுவதற்குரிய பாதை
கிடைத்திருக்கும். அன்றாடம் காய்ச்சி முதல் அகிம்சா மூர்த்திகள் வரை யார்
கையில் அந்த துப்பாக்கி இருந்திருந்தாலும் அது நிச்சயம் சீறியிருக்கும.
ஆனால் அவரோ தன் கையில் இருந்த இயந்திர துப்பாக்கியை இயக்காதது மட்டுமல்ல
தன் தோழர்களையும் அவர்கள் கையில் இருந்த துப்பாக்கிகளை பயன்படுத்த
அனுமதிக்கவில்லை.
தான் செத்தாலும் பரவாயில்லை, ஆனால் தன்னால் மக்கள் சாகக்கூடாது என்ற
நினைத்து தோழர் தமிழரசன் தன் கையில் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தாமல்
விட்டமைக்கு அவர் மக்களை நேசித்தது மட்டும் காரணமில்லை. எற்கனவே அவர்
மேற்கொண்ட ஒரு தாக்குதல் நடவடிக்கை காரணமாக 35 மக்கள் மரணமடைந்த பழி
அவர்மீது விழுந்திருந்தது. இது அவர் மனதை பெரிதும் பாதித்திருந்ததும்
இன்னொரு காரணமாக இருந்தது. அரியலூரில் மருதையாற்று பாலத்திற்கு அவர்
வைத்த வெடிகுண்டையடுத்து அந்த மக்கள் பலியாகியிருந்தார்கள். உண்மையில்
இந்த விடயத்தில் அவர் தவறு இழைக்கவில்லை. இருப்பினும் பழி அவர் மீது
சுமத்தப்பட்டது.
இந்திய அரசு ஈழப் போராட்டத்தை நசுக்குவதை உணர்ந்துகொண்ட தோழர் தமிழரசன்
தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி 1986ல் அரியலூரில் மருதையாற்றுப்
பாலத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்தார். “மத்திய மாநில அரசுகளே
தமிழீழத்தை அங்கீகரி!” என்ற பிரசுரங்களை தமிழ்நாடு விடுதலைப்படை என்னும்
பெயரால் முன்வைத்தார். இது முழு இந்தியாவிலும் எதிரொலித்தது. இச்
சம்பவத்தில் திருச்சி நோக்கி வந்த மலைக்கோட்டை எக்ஸ்;பிரஸ் ரயில்
கவிழ்ந்து ஏ.சி கம்பாட்மென்டில் இருந்த 35 பயணிகள் மரமணமடைந்ததால் இது
முழு இந்தியாவிலும் பரபரப்பான செய்தியானது.
உண்மையில் அன்று நடந்தது என்னவென்றால் தோழர் தமிழரசன் தலைமையில் சென்ற
தமிழ்நாடு விடுதலைப் படையினர் மருதையாற்று பாலத்தை குண்டு வைத்து
தகர்த்துவிட்டு தமது கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை அருகில்
ஒட்டியிருந்தனர். பின்னர் அருகில் இருந்த ரயில் நிலையம் சென்று தாம்
குண்டு வைத்து பாலத்தை தகர்த்து விட்டதையும் எனவே ரயில் சேவையை
நிறுத்தும்படி எச்சரித்துவிட்டு சென்றனர். அந்த ரயில் நிலைய
பொறுப்பதிகாரி உடனே சென்னை உட்பட பல தலைமையிடங்களுக்கு இந்த செய்தியை
அனுப்பினார். ஆனால் பல தொலைபேசி உரையாடல்களுக்கு பின்னர் ரயிலை மறிக்க
வேண்டாம் என்றும் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படியும் மேலிட உத்தரவு
வந்தது. இது அந்த அதிகாரிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருந்தும்
மேலதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க வேறு வழியின்றி அடுத்து வந்த
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து செல்ல அனுமதித்தார். ஆனால் நிகழ
இருக்கும் ஆபத்தை உணர்ந்தவராய் மனம் கேட்காமல் அந்த

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக