|
15/9/16
| |||
Nakkeeran Balasubramanyam
ஒன்பதிற்கு முதன்முதலாக வழங்கிய பெயர் 'தொண்டு' என்பது. தொண்டு + பத்து =
தொண்பது - தொன்பது - ஒன்பது. ஒன்பது = 90. எழுபது எண்பது ஒன்பது என்று
இங்கே ஒப்புநோக்கலாம்.
தொண்டு + நூறு = தொண்ணூறு = 900. எழுநூறு, எண்ணூறு, தொண்ணூறு என்று என்று
இங்கே ஒப்புநோக்கலாம்.
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் = 9000. ஏழாயிரம், எண்ணாயிரம்,
தொள்ளாயிரம் என்று, இதையும் ஒப்புநோக்கலாம்.
தொண்டு என்னும் பெயர் எப்படியோ தொல்காப்பியர் காலத்தில் உலக
வழக்கற்றிருந்தாலும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம்
நூலில் தொடைத்தொகை பற்றிக் கூறுகையில்,
'மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே'
என்று கூறியுள்ளார்.
தொண்டு என்னும் ஒன்றாம் தானப்பெயர் மறையவே பத்தாம் தானப் பெயர் ஒன்றாம்
தானத்திற்கும் நூறாம் தானப்பெயர் பத்தாம் தானத்திற்கும், ஆயிரத்தாம்
தானப்பெயர் நூறாம் தானத்திற்கும் கீழிறங்கி வழங்கத் தலைப்பட்டன. பின்பு
ஆயிரத்தாம் தானத்திற்கு ஒன்பதாயிரம் என்ன வேண்டியதாயிற்று. சொற்படி
பார்ப்பின் ஒன்பதினாயிரம் 90 x 1000 = 90000 ஆகும்.
ஒன்று முதல் பத்துவரை ஏனைய எண்ணுப் பெயர்களெல்லாம் தனி மொழிகளாகவும்
ஒன்பதுமட்டும் தொடர்மொழியாயு மிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயரே
முதன்மெய் நீங்கி ஒன்பது என வழங்கும். தெலுகில் முதன்மெய் நீங்காது
தொனுமிதி எனவே வழங்குகின்றது. இது, 'தொண்டு' எனும் தூய தமிழ்ச்சொல்லிலி
ருந்தே உருவானது.
சொற்கள் எங்ஙனம் நிலைமாறினும் புணர்ச்சி செய்யுங்கால் சொற்றொடர்ப்படிய
ே செய்யவேண்டும். அஃதன்றி ஒன்பது + பத்து = தொண்ணூறு, ஒன்பது + நூறு =
தொள்ளாயிரம் எனப் புணர்த்து விகார விதியுங் கூறுதல் புணரியலொடு மாறுபடுவ
தொன்றாம்.
5. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊஆ ஆகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும்.
(தொல். எழுத்து. 463)
ஆக ஒன்பது, தொண்டு எனும் பெயரிலேயே தொல்தமிழில் வழங்கிவந்துள்ளதனை அறியலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக