ஞாயிறு, 19 மார்ச், 2017

கடைமுழுக்கு திதி தீபாவளி கார்த்திகை நீத்தார் வழிபாடு 5118 வது நிலா புத்தாண்டு பண்டிகை

aathi tamil aathi1956@gmail.com

12/11/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Balaji
Enamuthuperumal மற்றும் 74 பேர் உடன்.
தமிழர் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாளை(13-11-16) தொடக்கம்
==============================
=============================
நாள்-1 :: பரணி விளக்கு
======================
ஆண்டின் இறுதி நாளன ஐப்பசி பரணியில்,கடை முழுக்கு மேற்க்கொள்ள வேண்டும்.
அந்த ஆண்டின் துன்பங்கள் யாவும் ஒழிய, காவிரி,வையை,தாமிரபரணி போன்ற
புண்ணிய நதிகளிலும், செந்தூர்,குமரி,இராமேஸ்வரம் போன்ற கடற்கரைகளிலும்
கடைமுழுக்கு மேற்க்கொள்வது மிகவும் சிறப்பு. அப்படி நதி,கடலுக்கு போக
இயலாதவர்கள், வீட்டில் நல்லெண்ணெய் தேய்த்து, கடைமுழுக்கு மேற்க்கொள்ள
வேண்டும்... இதனையே வடவர்கள் தீபாவளியன்று, கங்கா ஸ்நானம் என்று
தங்களுக்காக மாற்றிக்கொண்டனர்.
பிறகு, இரவு 8 மணிக்கு பரணி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அப்போது, ஆண்டின்
365 நாட்களை குறிக்கும் 365 திரிகளைப்போட்டு, பரணி தீபம் ஏற்ற வேண்டும்.
இது மோட்ச தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. தீவாளி(ஐப்பசி அமாவாசை) அன்று
நம்மை காண வந்த தென்புலத்தாராகிய நம் முன்னோர், மீண்டும் மோலோகம்
சென்றடைய இந்த விளக்கு ஒளியினைத் தருவதாக நம்பிக்கை. எனவே இந்த விளக்கினை
தெற்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். பிறகு இந்த விளக்கின் துணைக்கொண்டு
ஐம்பெரும் பூதங்களை குறிக்கும் 5 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் அல்லது
ஐந்துமுகங்களைக் கொண்ட குத்து விளக்கை ஏற்ற வேண்டும். இதனையே சோட்டா
தீபாவளி என்று வடவர்கள் தனதாக்கிக் கொண்டனர்...
தொடரும்....
நாள்-2 = சந்திர புத்தாண்டு,கார்
த்திகை விளக்கு
நாள்-3 = உரோகிணி விளக்கு
நாள்-4 = தமையன் விளக்கு
நாள்-5 = தோட்ட விளக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக