ஞாயிறு, 19 மார்ச், 2017

கடல் வணிகம் தமிழர் கி.மு.3000 பழமை சான்று கீற்று எகிப்து ரோம் சுமேரியா யூதர்

aathi tamil aathi1956@gmail.com

14/11/16
பெறுநர்: எனக்கு
பழந்தமிழர் கடல் வணிகம்-1
விவரங்கள்
எழுத்தாளர்:
கணியன்பாலன்
தாய்ப் பிரிவு: வரலாறு
பிரிவு: தமிழ்நாடு
C வெளியிடப்பட்டது: 15 மே 2012
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ!”
 என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப்
பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு
மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல்
செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச்
சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல்
கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார்.
நந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த
மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும்
பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம்
கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆக கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு வெகு காலம்
முன்பே காற்றின் தொழில் நுட்பம் அறிந்து, நடுக்கடலில் கப்பல்
செலுத்துவதில் தமிழர்கள் திறமையும், வல்லமையும் உடையவர்களாக இருந்தனர்
என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
பண்டைய தமிழர்களின் கடல் வணிகத்தை மூன்று பெரும் காலகட்டமாக பிரிக்கலாம்.
முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான,
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இரண்டாம் காலகட்டம் என்பது வரலாற்றுத்
தொடக்கத்துக்கு சற்று முந்தைய கி.மு. 700 முதல், சங்க காலத்தின்
இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரையான 1000 ஆண்டுகள். மூன்றாவது
காலகட்டம் என்பது சங்க காலத்திற்கு பிந்தைய காலமான கி.பி. 300 முதல்,
பிற்கால பாண்டியர்களின் இறுதிக் காலமான கி.பி. 1300 வரையான 1000
ஆண்டுகள்.
பண்டையகால தமிழர் கடல் வணிகம் என்பது, முதல் இரண்டு காலகட்டத்தை மட்டும்
கொண்டதாகும்(தொடக்ககாலம் முதல் கி.பி. 300 வரை) . மூன்றாம் காலகட்ட கடல்
வணிகம் (கி.பி.300 முதல் கி.பி.1300 வரை), இதில் சேராது. பண்டைய தமிழர்
கடல் வணிகத்தின் முதல்காலகட்டம் என்பது போதிய ஆதாரங்கள் இல்லாததாகும்.
ஆனால் இரண்டாவது கால கட்டத்திற்கோ ஓரளவு ஆதாரங்கள் உள்ளன. நாம் இங்கு
முதல் காலகட்ட கடல் வணிகம்(கி.மு.3000 முதல் கி.மு.700 வரை), குறித்து
மட்டும், முதலில் பார்ப்போம்.
பண்டைய உலக வணிகம்:
SsSOURCE: E-DOCUMENTS-SPICE TRADE-WIKI.
 மேற்கண்ட வரைபடத்தில் நீல நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய கடல்
வணிகத்தையும், சிவப்பு நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய தரை வணிகத்தையும்
காட்டுகிறது. சீனா முதல் ரோம் வரையான பண்டைய வாணிகம் நடைபெற்ற நாடுகள்
இதில் தரப்பட்டுள்ளன. ஆரம்பகால thதமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத்
தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக
மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. அதன்
பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும்
பரவியது.
தமிழர்கள் ஆரம்பகாலம் முதல் மிக நீண்டகாலம் வரை, இந்தோனேசியத்
தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமே சென்று வந்தனர்.
அரேபியர்களே தமிழகம், Iஇலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளின்
பொருட்களை முக்கியமாக, வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும்
தமிழர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, மேற்குலக நாடுகளுக்கு
விநியோகித்தனர். பழங்காலத்தில் மேற்குலக நாடுகளுக்கு வாசனைப்
பொருட்களும், வாசனைத் திரவியங்களும் மிக மிக தேவைப்பட்டது. பின்னர்
தமிழர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவரை சென்று (சொமாலியா) வணிகம் செய்தனர்.
தமிழர்கள் மிக பழங்காலத்தில் இருந்தே, அந்தந்த நாடுகளில் தங்கி இருந்து
வணிகம் செய்து வந்தனர்.
 மேலே வரைபடத்தில் உள்ள பாரசீகம்(Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா,
அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. மேலே
வரைபடத்தில் உள்ள ஜாவா(Java) என்ற இடத்தின் அருகே தான் வாசனைத்
தீவும்(மொலுக்கஸ்), இன்னபிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளன. பண்டைய
மேற்கு தமிழகத்தில்(கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த
முசிறியும், இன்றைய மும்பாய் அருகே அன்று இருந்த பாரிகாஜாவும்(Barygaza)
வரைபடத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.
தமிழர் கடல் வணிகம்-திரு. ஸ்காப் அவர்கள்:
“காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக
வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு வணிகப் பொருட்களை
வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள்
அன்றே ஆப்பிரிக்காவோடும் வ்ணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
இந்தியாவில்(தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த
கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது” என
எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில
மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்
திரு.ஸ்காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (SOURCE ; THE PERIPLUS OF
ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 )
கிப்பாலஸ்(Hippalus) அவர்கள் பருவக்காற்றை கடல் பயணத்திற்கு
பயன்படுத்தும் முறையை கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு
முன்பே, திராவிடியர்களும்(தமிழர்களும்), அரேபியர்களும் பருவக்காற்றை
பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் ஸ்காப் அவர்கள்.
கென்னடி eஎன்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில்(Journal
of the royal asiyatic society 1898-pp;248-287), இதனை ஏற்றுக்
கொண்டாலும் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய - பாபிலோனிய
வர்த்தகம் மிகப்பெரிய அளவில் திராவிடர்களாலும், சிறிய அளவில்
ஆரியர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது என்றும், இந்திய வணிகர்கள்
அரேபிய, கிழக்கு ஆப்ரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி
வணிகம் புரிந்தனர் என்றும் குறிப்பிடுவதாக ஸ்காப் அவர்கள்
தெரிவிக்கிறார்.
இதனை மறுத்து மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, கடல் வணிகம் நடந்து
வந்ததை பேசவந்த ஸ்காப் அவர்கள், ஏழரா(eeEZRA) அவர்கள் யூதர்களின் பண்டைய
வேத நூலை மறுபதிப்பு செய்ததன் காரணமாகவே (ஏழரா என்பவர் யூதர்களின்
முக்கிய மதகுரு ஆவார். அவரால் பண்டைய எபிரேய சமய வழிபாட்டு நூல்கள்
மறுபதிப்பு செய்யப்பட்டன. அதனால் அந்நூல் அவரது பெயராலேயே
அழைக்கப்படுகிறது. அவருடைய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு ஆகும்.) இந்த
பண்டைய வணிகக் குறிப்புகள் இடம் பெறுகின்றன எனக்கருதி, கென்னடி அவர்கள்
பண்டைய எகிப்திய வணிகத்தை மறுதலிக்கிறார் என்றும், ஆனால் பண்டைய எகிப்திய
ஆவணங்களில், இந்திய மூலம் கொண்ட பொருட்கள் என்ன குறிப்பிடப்பட்டு
உள்ளனவோ, அதே பொருட்கள்தான் ஏழராவின் மறுபதிப்பிலும் இடம்பெறுகின்றன
என்கிறார்.
ஆகவே ஏழராவின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய
மூலம்கொண்ட வணிகப் பொருட்கள் சோமாலிய கடற்கரைக்கும், நைல் நதிக்கும்
அப்பால் விற்கப்பட்டு வந்த ஒரு வணிகம், நடைபெற்று வந்துள்ளது என்பதே
உண்மை என்கிறார். மேலும் நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு
பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை
நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார்.
(SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by
W.H.SCHOFF Page.227,228 )
ஆக திரு. ஸ்காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக
நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப்
பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும்,
பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர்
எனலாம்.
திரு.ஸ்காப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்ற ஆங்கில நூல்
மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளஸ் அவர்களுடைய மூல
நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234
பக்கங்கள்(பக்:50-283), ஸ்காப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக்
கொண்டவை. பண்டைய தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி
மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிப்ளஸ் காலத்தில் இருந்த
நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும்,
நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.ஸ்காப் அவர்கள் நன்கு
அறிந்து கொண்டுதான் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.
 தமிழகம் குறித்து பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து
கொண்டு எழுதியுள்ளார். ஆக பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்திய கடல்
வாணிகம் குறித்த, மிக முக்கியமான அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம். பிளினி,
ஸ்ட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட்
ஸ்மித், ஸ்வெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு
ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. ஸ்காப் எழுதி உள்ளார்.
சிந்து-இந்து-இந்தியா:
தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு
முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(sayce) என்பவர்
தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். atharஅதற்கு
அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின்
தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில்
சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு
கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி
செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய
நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக “சிந்து” என்ற
சொல் குறிப்பிடப் பட்டுள்ளது.
சிந்து என்ற சொல்லுக்கு பழந்தமிழில் துணி என்று பெயர். இன்றும்
கன்னடத்திலும் துளுவிலும் துணியைக்குறிப்பிட சிந்து என்ற சொல்
பயன்படுகிறது. எனவே பழந்தமிழகத்தில் இருந்து துணிகள் ஏற்றுமதி
செய்யப்பட்டன என அறிய முடிகிறது. மேலும் சிந்து என்பது ஆற்றிலிருந்து
வந்த பெயர் அல்ல. துணிக்கான பண்டைய தமிழ் சொல்லிலிருந்து வந்த பெயர்
ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கார். (ஆதாரம்: தமிழக வரலாறு –மக்களும்
பண்பாடும்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்; 51,52. பதிப்பு; 2008 &
தமிழர் வரலாறு-பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழ் பதிப்பு. பக்; 29.)
 சிந்து என்ற ஆற்றின் பெயரிலிருந்து, இந்த சிந்து என்ற சொல் வரவில்லை
என்றால், இந்த சிந்து என்ற தமிழ் சொல்லில் இருந்து தான், இந்து
மதத்திற்கான “இந்து” என்ற பெயரும், நமது நாட்டிற்கான “இந்தியா” என்ற
பெயரும் வந்ththதுள்ளன என கருதலாம். (சிந்துவெளி மக்கள் சிந்து நதிக்கு
என்ன பெயர் வைத்திருந்தனர் என அறியும் போதே இவை குறித்து இறுதியாகச்
சொல்ல முடியும்.) தமிழ் சொல்லில் இருந்து இந்தியா என்ற பெயர் வந்ததன்
காரணமாகவே, ஆரம்பகாலம் முதலே தமிழகம் பொதுவாக உலக மக்களால் இந்தியா என்றே
கருதப்பட்டு, இந்தியா என்றே சொல்லப்பட்டும் வந்துள்ளது. இவை தமிழர்
வணிகத்தின் பழமையை சுட்டிக்காட்டுகிறது எனலாம்..
தமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்:
கி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன்
மெர்னரே(MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து
ஹர்க்குப்(HARKHWF) என்பவனின் கல்வெட்டில் “நறுமணப் புகைதரும்
மெழுக்கு,கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம், தடிகள்
மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300
கழுதைகள் தெற்கு நுபியாவில்(SOUTHERN NOBIA) உள்ள யாம்(YAM)
நாட்டிலிருந்து வந்திறங்கின” என்ற குறிப்பு உள்ளது. இதிலுள்ள கருங்காலி
மரம், நவதானியம், சிறுத்தைப்புலி முதலியன தென்னிந்தியாவிலிருந்தே
சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார் .( தமிழக வரலாறு
பக்.31).
 கி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம்
பெபி (PEppPEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி(Sebni) என்பவனுடைய
குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம், விலங்கின்
தோல் முதலியன உள்ளன. அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள்
நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும்,
இரும்புப்பொருட்கள் (வாய்ச்சி, கோடரி, வாள்) பலவற்றை எகிப்து, சோமாலியா
போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும், அது குறித்த
பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார்
குறிப்பிடுகின்றார். (தமிழக வரலாறு பக்.32.)
தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து
வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில்
தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்
(பக்.32). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை,
திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட்
ஸ்மித், ஸ்காப், கென்னடி, ஸ்வெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று
ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
இந்தியா பெருமளவில் இலவங்கம், மிளகு,முத்து முதலியவைகளை உற்பத்தி செய்தது
என்றும் பருத்தி ஆடைகளை புதிய கற்காலம் முதலே நெய்து வந்தது என்றும்
பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்.(பக்.33.)
அரேபிய இடைத்தரகர்களால் எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள்
தென்னிந்தியப் பொருட்கள்தான் என்பதையும், தென்னிந்தியப் பரதவர்கள்
அப்பண்டங்களை தங்களுடைய படகுகளில் ஏடனுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக்
கடற்கரைக்கும் கொண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக