|
7/6/16
| |||
நவீன் குமரன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Samy M மற்றும் 56 பேர் உடன்.
சங்கத்தமிழர் புத்தாண்டு-2
=======================
இந்த கேள்விகளுக்கு விடை இருக்கிறதா??
1) ஒவ்வொரு ஆண்டும், கன்னித் தமிழ்ப்பெண்கள் இயற்கையோடு இயைந்து,
நோர்க்கும் நோன்பு ”பாவை நோன்பு” அகும்.அதிகாலையில் விடியும்முன்
எழுந்து, குளங்களில் நீராட போவார்கள்.மார்க
ழி மாதம் ஆரம்பித்து, ‘தைந்நீராடலுடன்’ இந்நோன்பை முடிப்பார்கள்.
இப்போதும் ஆண்டுதோறும் “மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்
போதுவீர்” என்று மார்கழி தொடங்கியவுடன் பாடத்தொடங்குகிறார்கள். ஆனால்,
நானும் ஒவ்வொரு வருடமும் மார்கழி முதல் நாளில் நிறைமதி தெரிகிறதா என்று
பார்க்கிறேன்.. ஆனால், ஒரு ஆண்டுக்கூட தெரியவில்லை.. பின் ஏன் ஆண்டாள்
அப்படி பாடினால்??? .
2) ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு - இரண்டுமே தமிழரின்
நீர்வழிப்பாட்டு பெருவிழா. ஒரே மாதத்தில் எப்படி இரண்டுப் பெயர்களில் ஒரே
நீர்வழிப்பாட்டு பெருவிழா??
3) இன்றும் ஐப்பசி திங்கள் இறுதியில் ‘கடை முழுக்கு’ என்று காவிரி போன்ற
நதிக்கரைகளில் மூழ்கி எழுவார்கள். அது என்ன ‘கடை முழுக்கு’? கார்த்திகை
திங்கள் முதல் நாள், ‘முடவன் முழுக்கு’ செய்வார்கள். அது என்ன ‘முடவன்
முழுக்கு’?
4) தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஏன் கார்த்திகை
முழுநிலவில் வீடுகளிலும், வீதிகளிலும், மலைகள் மீதும் விளக்கேற்றி
கொண்டாட வேண்டும்??
5) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திற்கு மட்டும் தமிழர்கள் ஏன்
முக்கியத்துவம் தர வேண்டும்??
6) ஆடி மாதம் அப்படி என்ன பாவம் செய்தது? ஒரு மங்கல நிகழ்ச்சியும்
செய்யாமல் புறக்கணிக்க??
விடைகள்:
------------------
1)ஆண்டாள் பாடியது சரி தான்.. ஆண்டாள் காலத்தில் இருந்த சங்கத்தமிழர்
நாள்காட்டியின் படி, சரியாக மார்கழி முதல் நாளில் நிறைமதி வரும். ஆனால்,
இன்று ஜோதிடர்களின் சூரிய நாள்காட்டியின் தனுர் மாதத்திற்கு மார்கழி
என்று பொய்யாக பெயர் வைத்து அழைப்பதால், மார்கழி முதல் நாளில் நிறைமதி
வருவதில்லை.... ஆண்டாள், சரியாக சங்கத்தமிழர் நாள்காட்டியை
பின்பற்றியதால், மார்கழி முதல்நாளில் நிறைமதி வந்திருக்கிறது. ஆண்டாள்
தாம் இயற்றிய நூலுக்கு “சங்கத்தமிழ் மாலை” என்றே பெயர் வைத்தாள். அதற்கு
நாம்தான் “திருப்பாவை” என்று பெயர்வைத்தோம்.
2) ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு:- இரண்டுமே ஒரே பெருவிழா தான்
என்பதே உண்மை...... சங்கத்தமிழரின் நாள்காட்டியை மறந்ததால், ஒரே
பெருவிழாவை வேறு வேறு தினங்களில் இரண்டு பெருவிழாக்களாக கொண்டாடும்
அவலம்.. சங்கத்தமிழர் நாள்காட்டியை பின்பற்றினால், இந்த ஆடிப்பூரமும்,
ஆடி பதினெட்டாம் பெருக்கும் ஒரே நாளில்தான் வரும்.
3) சங்கத்தமிழரின் நாள்காட்டியில் கார்த்திகையே முதல் திங்களாக இருந்தது.
அப்போது, ஐப்பசி தானே கடை மாதம். அதனால், ஐப்பசி திங்கள் இறுதியில் அந்த
ஆண்டு செய்த பாவங்கள் எல்லாம் ஒழிய ‘கடை முழுக்கு’ மேற்க்கொண்டனர்.
அது என்ன முடவன் முழுக்கு என்று ஆராய்ந்தால், ஒரு விடையும் இல்லை. ஒரு
கட்டுக்கதையே மிஞ்சுகிறது. ‘முதல் நாள் முழுக்கே’ முடவன் முழுக்கு என்று
திரிந்திருக்க வேண்டும்.
4)சங்கத்தமிழரின் நாள்காட்டியின் படி, கார்த்திகை திங்களே புத்தாண்டாக
இருந்தது. அதனை மக்கள் உற்சாகத்துடன் விளக்கேற்றி, இனிப்புகள் செய்து
புத்தாண்டை வரவேற்றனர்.
5) 27 நட்சத்திரங்கள் இருந்தாலும், கார்த்திகை நட்சத்திரமே ஆண்டு கணக்கை
கணிக்க உதவுவதால், அதற்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு.
6) உண்மையில் எல்லா ஆடி மாதமும் முன்பு புறக்கணிக்கப்பட
வில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘அதிக ஆடி’ என்று ஒன்று வரும்(leap
month). அதனையே மக்கள் புறக்கணித்தரே அன்றி, எல்லா ஆடி மாதத்தையும்
புறக்கணிக்கவில்லை. ஆடிக்கிருத்திகையும், ஆடி பதினெட்டும் இந்த அதிக
மாதத்தை நிர்ணயிக்க உதவின.
சங்கத்தமிழர் நாள்காட்டி:
இனி சங்கத்தமிழர் நாள்காட்டி எப்படி இருந்தது என்ற முழுமையான தகவல்களைப்
பார்ப்போம்...
தொடரும்-2

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக