|
25/9/16
| |||
சி.பா.அருட்கண்ணனார் .
தமிழகப் பெருவிழா...
தமிழ்நாட்டில் ஒருசில அமைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக சில ஊர்களில்
நவம்பர் முதல் நாளை இன்றைய தமிழகம் அமைந்த நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
“விழா என்பது நினைவில் இருந்து விழாதது; வாழ்வியல் முறைமைகளிலிருந்து
விழாதது; விலகாதது” என்ற மேலான பொருளில் விழா போற்றுதற்கு உரியதாகவும்
மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு உரியதாகவும் கருதப்பட்டும்
கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது.
இன்றைய தமிழகம் அதாவது தமிழ்நாடு நம்மால் அமைக்கப்பட்டதல்
ல; எதிரிகளால் அமைக்கப்பட்டது; இதை மறைப்பதற்காகவே ‘அமைந்த நாள்’ என்ற
சொற்றொடரைப் பயன்படுத்தி வருகிறோம். நாம் அமைக்க வேண்டிய தமிழ்நாடு
நமக்காகக் காத்திருக்கிறது. அந்த நாட்டை அமைக்கும் நாளன்றோ நமக்கு விழா
நாளாகவும் கொண்டாட்ட நாளாகவும் இருக்கமுடியும்?
இனி, வரலாற்றைச் சிறிது எண்ணிப்பார்ப்போம். சேர,சோழ,பாண்டியர் காலங்களில்
விரிந்த பரப்பளவில் பரந்து அமைந்திருந்த தமிழ்கூறும் நல்லுலகத்தின்
எல்லைகளைத் துல்லியமாக இன்று நாம் கணிக்க முடியவில்லை; அந்நிலப்பரப்புகள்
அமைந்த நாள்களையும் நம்மால் கணிக்க முடியவில்லை. பிற்காலச் சோழர்,
பாண்டியர் ஆட்சிக் காலங்களிலும் அமைந்த தமிழ்நிலப் பரப்புகள் நிலைத்துத்
தொடரவும் இல்லை.
அடுத்தமைந்த நீண்டகால அடிமை வரலாற்றின் ஊடாக முதன் முறையாகத் தமிழை
முதன்மைப் பொதுமொழியாகக் கொண்டு, தமிழர்கள் பேரெண்ணிக்கையில் வாழ்ந்த
தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரு பொதுப் பொருளாதாரத்தின் கீழ் ‘சென்னைத்
தலைமாகாணம்’ என்ற பெயரில் ‘தமிழ்த் தேசம்’ ஆக ஆங்கிலேயர்களால், சார்ச்சு
மெக்காட்டினி என்பவரை முதல் ஆளுநராகக் கொண்டு அமைக்கப்பட்ட நாள்,
1785-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் இரண்டாம் நாள் ஆகும். (1785/02/12).
ஆங்கிலேயர் அகன்றபின், ஆந்திரத் தெலுங்கர்கள் போராடி 1953-ஆம் ஆண்டு
அத்தோபர் திங்கள் முதலாம் நாளில் அன்று இருந்த சென்னைத் தலை
மாகாணத்திலிருந்து சித்தூர், நெல்லூர் என்ற இரண்டு தமிழ் மாவட்டங்கள்
உட்படப் பத்து மாவட்டங்களைப் பிடுங்கிக் கொண்டுபோய் ஆந்திர மாநிலத்தை
அமைத்தனர்.
எஞ்சியிருந்த சென்னைத் தலை மாகாணத்திலிருந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர்
முதலாம் நாளில் தென்கன்னடம், பெல்லாரி ஆகிய மாவட்டங்களை எடுத்துக்
கொண்டும் வெண்கல்லூர் (பெங்களூர்), கோலார், கொள்ளேகாலம் வட்டம் போன்ற
தமிழ்ப் பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டும் மைசூர் நாட்டோடு இணைந்துக்
கருநாடக மாநிலத்தை அமைத்துக் கொண்டனர் கன்னடர்கள். அதே நாளில் சென்னைத்
தலை மாகாணத்திலிருந்து, தமிழ்வழங்கும் பாலக்கோட்டை உள்ளடக்கிய மலபார்
மாவட்டத்தையும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களையும் திருவனந்தபுரம்,
நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, உடும்பன் சோலை, கொச்சிப் புத்தூர் போன்ற
தமிழ்ப் பகுதிகளை உள்ளடக்கியதும் குமரிமாவட்டத்தை நீங்கியதுமான
திருவாங்கூர், கொச்சி நாட்டுப் பகுதிகளையும் சேர்த்துக் கேரள மாநிலத்தை
அமைத்தனர் மலையாளிகள்.
1974-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஏழாம் நாளில் (1974/07/07), தமிழர் இன
மூலப் பகைவர்களான இந்திய மனுவியர், தங்களுடைய கள்ளப் பங்காளிகளான
சிங்களவர்களுக்கு எஞ்சியிருந்த தமிழ்நாட்டிலிரு
ந்து ‘கச்சத் தீவைப்’ பிடுங்கித் தமிழ்நாட்டரசைக் கலக்காமலும் இந்திய
நாடாளுமன்றத்தைக் கலக்காமலும் முறைமைகளைப் புறந்தள்ளித் தாரைவார்த்தனர்.
இனி, சில வரலாற்று நாள்களைத் தொகுத்துப் பார்ப்போம். தமிழர்கள் வாழ்ந்த
தொடர்ச்சியான நிலப்பரப்பையும் தமிழை முதன்மைப் பொதுமொழியாகவும் கொண்ட
சென்னைத் தலை மாகாணம் என்ற தமிழ்த் தேசம் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட
நாள், 1875-02-12 - ஆம் நாள். சற்றொப்ப ஐம்பதாயிரம் சதுரக் கிலோ மீட்டர்
பரப்பளவு கொண்ட தமிழ்நிலத்தைத் தெலுங்கர்களிடம் பறிகொடுத்த நாள்,
1953-10-01 - ஆம் நாள். அடுத்த சற்றொப்ப ஐம்பதாயிரம் சதுரக் கிலோ மீட்டர்
நிலப்பரப்பை கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் சேர்த்துப் பறிகொடுத்த
நாள், 1956-11-01 - ஆம் நாள். கச்சத் தீவு என்ற அழகிய குறுந்தீவை
சிங்களவரிடம் பறிகொடுத்த நாள், 1974-07-07 - ஆம் நாள்.
மேற்கண்ட நாள்களில் எந்த நாளை விழாவாகக் கொண்டாடுவது, தமிழர்களே?
1953.10.01, 1956.11.01, 1974.07.07 ஆகிய மூன்று நாள்களும் நம் மண்ணைப்
பறி கொடுத்த நாள்கள். இதில் எந்த நாளைக் கொண்டாடினாலும் , அது ‘இழவு’
நாள் தானே! விழா நாள் அல்லவே!! 1956.11.01-ஆம் நாளைத் தமிழகம் அமைந்த
நாளாகச் சிலர் கொண்டாடுவதைப் பொருள் உள்ளதாகப் பொருள் உணர்ந்த தமிழர்கள்
எவ்வாறு ஏற்கமுடியும்? ஒருக்கால் அந்த நாள்களை நினைவு கூற வேண்டுமானால்
அந்நாள்களில், ‘இழந்த தமிழ்நிலம் மீட்புறுதி நாள் ’ என்றவாறு
கடைப்பிடிக்கலாம். ஒருவேளை, வரலாற்றில் முதன்முறையாக அடிமை நிலையிலேனும்
நாஞ்சில் நாட்டுப் பகுதி மட்டும் நீங்கிய ஒரு தமிழ்த் தேசம் அமைக்கப்பட்ட
நாளை நினைவுகூற விரும்பினால், முதல் நிலை அடிமைத் தமிழ்த் தேசம் அமைந்த
நாளாக ‘பிப்பிரவரி,12-ஆம் நாளைக் ’ கடைப்பிடிக்கலாம்.
இது குறித்த உங்களுடைய கருத்துக்களை மனந்திறந்து பதிவு செய்யுங்கள்;
ஒருமித்த கருத்துக்கு வர முயல்வோம்; அதேவேளை, முழுஉரிமை கொண்ட ஒரு
முழுமைத் தமிழ்த் தேசத்தைப் படைக்கும் நாளையும் அதைப் பெருவிழாவாகக்
கொண்டாடும் மகிழ்வையும் மனமாற எண்ணி, இலக்கு நோக்கிச் செயற்பட முயல்வோம்.
-அருள்நிலா.
5 மணிநேரம் ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக