புதன், 8 ஜூலை, 2020

மாக்ஸ் முல்லர் ஆரியநுழைவு கருத்தியல் தவறு என ஒத்துக்கொண்டார்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 4 செப்., 2018, பிற்பகல் 5:50
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# ஐரோப்பியர் -குறிப்பாக ஜெர்மானியரால் கைவிடப்பட்ட “ஆரியர்” இனப் பரவல் கொள்கை….
# மாக்ஸ் முல்லர் (max mullur) என்ற ஜெர்மானிய மொழியியல் அறிஞர் தான் # ஆரியர்" என்ற இனக் கொள்கையின் தந்தை.இவர் மத்திய ஆசியா அல்லது வட சைபீரியப் பகுதியில் இருந்து ஐரோப்பாவிலும், இந்தியாவிற்குள்ளும் ஆரியர் என்ற இனம் குடியேறியதாகக் கூறியவர்.
# இதற்காக இவர் எடுத்துக் கொள்ளும் மிகச் சொற்பமான ஆதாரங்களில் ஒன்று "ரிக்" வேதத்தில் குறிப்பிடப்பட்ட
ுள்ள ஆரிய என்ற சொல் "அய்ரிய" என்ற ஈரானிய சொல்லோடு ஒத்துப் போவது என்பது. மற்றொரு ஆதாரமாக சில சமஸ்கிருதச் சொற்கள் சில இந்தியச் மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் இருப்பதாகக் கூறுகிறார்.
*மேலும் சில ரிக் வேதக் கடவுள்கள் கிரேக்க ரோமானிய கடவுள்களுடன் ஒத்துப் போகின்றனர் என்கிறார்…
# இவரும் இவரது சமகாலத்திம ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் சிலரும் ”ஆரியர்” பரவல் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் அப்போது ஜெர்மனி மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் பரவலாக செல்வாக்கு செலுத்திய யூத இனத்தால் ஜெர்மானிய இனம் அழுத்தி வைக்கப்பட்டிருந்தாக கி.பி.19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஓர் எண்ணம் மேலோங்கியிருந்தது தான்.
# அதனால் தாங்கள் ஐரோப்பியர் அல்ல தாங்கள் வேறு இனம் என்று வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஜெர்மானிய அறிஞர்களிடம் உண்டானது. அப்போது ஜெர்மனியில் குடியேறி அரசியலிலும், பொருளியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த வந்தேறிகளான யுதர்களால் அந்த எண்ணம் அதிகமானது. # செமிட்டிக் மதங்களான யூத, கிறித்துவ மதங்களைப் பின்பற்றுவதால் ஜெர்மனியில் ஒருவித பொதுத் தன்மை ஏற்பட்டு யார் மண்ணின் மைந்தர்கள் என்றும் யார் வந்தேறி என்றும் தெரியாத குழப்ப நிலைக்கு ஜெர்மானியர் தள்ளப்பட்டதாக ஜெர்மானிய அறிஞர்கள் நினைத்தனர்.அவ்வாறு நினைத்தவர்களில் முக்கியமானவர் மாக்ஸ் முல்லர் ஆவார்.
# இவர் ரிக் வேதத்தை 25 ஆண்டுகள் முயற்சி செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். விவேகானந்தர் மாக்ஸ் முல்லரைப் பற்றி கூறும் போது கி.பி.14 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் வாழ்ந்து முதல் முதலில் நான்கு வேதங்களுக்கும் உரை எழுதிய சாயாணாச்சாரியார் என்ற தெலுங்கு பிராமணர் தான் மீண்டும் மறுபிறவி எடுத்து மாக்ஸ் முல்லராகப் பிறந்ததாக வர்ணிக்கிறார். மாக்ஸ் முல்லர் ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முழு நிதியுதவி செய்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆகும்…
# இந்து மதத்தோடு இந்தோ-ஐரோப்பிய (ஆரிய) மொழிப் பேசும் மக்களை ஒருவாறு தொடர்புப் படுத்தி ஒரு பொது சமய உருவகம் கொடுக்க நினைத்தார் மாக்ஸ் முல்லர். அதற்காக இந்தியர்களும் ஐரோப்பியர்களும் ஆரியர்கள் என்று மொட்டையடியாக அடித்துப் பேசினார். இந்த ஆரியர் என்ற வாதம் ஜெர்மனியில் பெரும் செல்வாக்கான நிலையில் இருந்த யூதர்களை ஆரியர் அல்ல எனத் தனிமைப் படுத்த மிகவும் உதவியாக இருந்தது.. பின்னாளில் ஹிட்லர் இதைக் கையிலெடுத்துக் கொண்டதும் அதன் காரணமாக 50 இலட்சம் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டதுமான கொடூரமும் நடந்தது…
# இந்த மாக்ஸ் முல்லர் 1900 ல் இறந்தார்.. இவர் தனது இறுதிக் காலத்தில் ஆரியர் என்று ஒரு இனம் இருந்தது என்பதை திரும்பப் பெற்றார். # மத்திய ஆசியாவில் இருந்து ஐரோப்பா மற்றும் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் பல்வேறு இந்திய ஐரோப்பிய மொழிகள் பேசிய பல்வேறு இனத்தவரகள் என்று தனது கருத்தை மாற்றிக் கொண்டார். அதுவும் ஐரோப்பா மற்றும் இந்தியாவிற்குள் இத்தகைய மக்கள் பெரும் தொகையாக வரவில்லையென்றும் சிறிது சிறிதாகவே பல்வேறு காலங்களில் உள் நுழைந்தனர் என்று முடித்துக் கொண்டார்.
# கடைசியில் ஐரோப்பாவில் நிலவி வந்த தாங்கள் “ஆரியர்” என்றக் கொள்கையை ஏறத்தாழ முழுமையாகவே ஐரோப்பியர்கள் குறிப்பாக ஜெர்மானியர் கைவிட்டுவிட்டனர்.
# ஆனால் இந்த ஆரியர் பரவல் கொள்கை இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டை இறுகப் பிடித்துக் கொண்டு விட்டது.அதற்குக் காரணம் கால்டுவெல் எழுதிய தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற புத்தகமும். அதில் கூறப்பட்ட திராவிட என்ற சொல்லாடலும், அதைத் தங்களது அரசியலுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அரசியல் செய்த தமிழ்நாட்டின் பிறமொழியினரும் தான்.
1 மணி நேரம் ·

ஆரியர் ஹிட்லர் ஆங்கிலேயர் கற்பனைவாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக