புதன், 8 ஜூலை, 2020

ஆரியநுழைவு மார்ட்டின் ரிச்சர்ட் ஆய்வு தவறு

aathi1956 aathi1956@gmail.com

வியா., 6 செப்., 2018, பிற்பகல் 2:06
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# அண்மையில் # மார்ட்டின் # ரிச்சர்ட் என்ற மரபியல் ஆராய்ச்சியாளர் இந்தியாவிற்குள் மத்திய ஆசிய பகுதியினர் வந்திருக்கலாம் என்றும் இந்தியர்களில் 17% ஆண்களிடம் R1a மரபணு காணப்படுவதாகவும் அறிக்கை அளித்திருந்தார்.. # அவர் ஆரியர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றாலும், மரபணு ஆய்வை இனப் பரவல் ஆய்வுக்கு முதன்மையான ஆதாரமாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை என்றபோதிலும், அதையெல்லாம் மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு...ஆகா... ஆரியர் வந்தது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்று திராவிட இயக்கத்தினர் ஆனந்தக் கூத்தாடினர்... # ஆனால் அதே ஆய்வாளர் தனது அதே அறிக்கையில் தமிழர்களும் 80000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வெளியிலிருந்து வந்த வந்தேறிகள் தான் என்று கூறியிருப்பதை இந்த திராவிட வேதாந்திகள் கண்டுகொள்ளவில்ல
ை... அல்லது அதுவும் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்ததா என்று தெரியவில்லை!!!
# தமிழகத்தில் புதுவையின் பொம்மையார் பள்ளத்தாக்கில் 1 இலட்சத்து 66 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குழந்தையின் உடல் படிவம் கண்டெடுக்கப்பட்டதும்,
# கொசஸ்தலை ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகள் 3 இலட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று உறுதிப்படுத்தப்
பட்டதுமான ஆதாரங்கள் உள்ள நிலையில் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களும் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் தான் என்று கூறும் மார்ட்டின் ரிச்சர்ட்டின் ஆய்வை திராவிட வாதிகள் ஏற்பது சுத்த மடத்தனமல்லவா???
# அந்த ஆய்வாளர் தமிழர்களை வந்தேறி என்று சொல்லி விட்டுப் போனால் நமக்கென்ன! # பார்ப்பனர்களை வந்தேறி என்று சொல்வதற்கு வசதியாக கருத்துக்களை சொல்லியிருக்கிற
ாரே என்று ஆனந்தக் கூத்தாடுகின்றனர் திராவிட வேதாந்திகள்... # ஒரு வேளை அவர்களின் ஆனந்தத்திற்குக் காரணமே தமிழர்களையும் அந்த ஆய்வாளர் வந்தேறிகள் என்று சொன்னது தானோ!!!
# கால்டு வெல்லாய நமஹ !!!

மரபணு கருத்தியல் ஆரியர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக