புதன், 8 ஜூலை, 2020

புலவர் கலியபெருமாள் குடும்பம் முழுவதும் சிறை

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 26 ஆக., 2018, முற்பகல் 9:31
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
கலியபெருமாள் - தமிழ்நாடு விடுதலை படையின் காட் ஃபாதர்.
நக்சல்பாரி இயக்கம் என்னும் முதலாளிகளை, கந்துவட்டி காரர்களை, பண்ணையார்களை அழித்தொழித்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவும் நக்சல்பாரி நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டார் கலியபெருமாள்.
1971ல் கலியபெருமாளோடு, அவர் மகன் வள்ளுவன், சோழநம்பி, சகோதரர்கள் மாசிலாமணி, ராசமாணிக்கம், ஆறுமுகம், அவர் மனைவியின் சகோதரி ஆனந்த நாயகி என கலியபெருமாளின் குடும்பமே கைது செய்யப்பட்டது.
கலியபெருமாள், அவர் மகன் வள்ளுவனுக்கு மரண தண்டனையும் ஏனையோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கலியபெருமாள் மரண தண்டனைக்கு எதிராக மனுபோடவில்லை. ஆயினும் மக்கள் எழுச்சியை காட்டி, அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஒரே குடும்பம் தண்டனை விதிக்கப்பட்டால், வருடம் ஒரு மாதம் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு பார்த்து பேச அனுமதிப்பது சிறைவாசி உரிமை.
ஆனால் கலியபெருமாளும் ஏனைய சிறைவாசிகளும் அவர்களது உறவினர் யாரையும் பார்க்க ஏழு ஆண்டுகள் அனுமதிக்க வில்லை.
கலியபெருமாளும் அவரது மகன், சகோதரர் என சிறைவாசிகள் பத்தரை ஆண்டுகள் ஒருவரை ஒருவர் பார்க்க அனுமதிக்கப்பட வில்லை.
அனைவரும் எட்டு ஆண்டுகள் தனிமை கொட்டடி எனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அனைவருமே சிறையில் பலமுறை கை, கால்கள் முறிக்கப்பட்டு, மண்டை உடைக்கப்பட்டு உள்ளனர்.
கடைசியாக 12 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றத்தால் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
கொடும் சிறை கலியபெருமாளை பாதித்ததா?
சிறை வாசத்தில் இருக்கும்போதுதா
ன், இந்தியா பூராவிற்குமான புரட்சி என்பதிலிருந்து, தமிழ்த்தேசியம் என்னும் பாட்டாளி வர்க்க சுதந்திர தமிழ்நாட்டு விடுதலையே தமிழின உரிமை என்ற முடிவுக்கு வந்தார்.
வெளியில் வந்தவுடன், தோழர் தமிழரசனுடன் இணைந்து தமிழீழ விடுதலையும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையும் என்ற மாநாட்டை கூட்டினார். அதில் தனி ஈழமே தீர்வு, தனி தமிழ்நாடே தீர்வு என்று அறிவித்தார்.
புலவர் கலியபெருமாள் - தமிழ்த்தேசியத்தின் காட் ஃபாதர். தமிழ்நாடு விடுதலை படையின் காட் ஃபாதர்.
9 மணி நேரம் · 

தநாவிப tnla ஆயுதவழி கம்யூனிஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக