புதன், 8 ஜூலை, 2020

கோனார் நோட்ஸ் 1933 இல் பேராசிரியர் தமிழறிஞர் ஐயம்பெருமாள்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 6 செப்., 2018, பிற்பகல் 4:35
பெறுநர்: எனக்கு
கோவிந்த ராசர் தமிழர் ▶ தமிழரின் குரல்
தமிழக பள்ளிகளில் படித்தவர்கள் அந்த பெயரை மறக்க முடியாது, தமிழை நாம் அதன் மூலமே கற்று கொண்டோம்
தமிழ்மொழியின் இனிமையினை அப்படி புத்தகமாக கொடுத்து மாபெரும் தமிழ் பணியினை செய்தவர் அவர்
ஆம், கோனார் தமிழ் உரையினை படிக்காமல் ஒரு மாணவன் தமிழ்நாட்டில் பெயில் கூட ஆகியிருக்க முடியாது, அவ்வளவு முக்கியமான புத்தகம் அது
அதை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார்
இந்த தாழ்த்தபட்டவன் அக்காலத்தில் படிக்க முடியாது, பார்ப்பான் விடமாட்டான், அய்யகோ அது ஒடுக்கிய காலம் இடுக்கிய காலம், திராவிட கட்சிதான் கல்வி கொடுத்தது பேனா கொடுத்தது , திமுகவே தமிழ் வளர்த்தது என சொல்பவன் சொல்லிகொண்டேதான் இருப்பான் அவனையும் திருத்த முடியாது அவனை நம்புவனையும் திருத்தவே முடியாது
உண்மையில் அன்றே சைவ சித்தாந்த கழகம் , மதுரை தமிழ்சங்கம் இன்னபிற கிறிஸ்தவ கல்லூரிகள் எல்லாம் கல்வி பணி செய்தன தமிழ் வளர்த்தன
அதில் மதுரை தமிழ்சங்கம் ஐயம் பெருமாள் கோனாரை அவரின் தமிழுக்காக அரவணைத்தது, திருச்சி ஜோசப் கல்லூரி அவரை தமிழ் பேராசிரியர் ஆக்கியது
கோனார் பேராசிரியரானது 1933ம் வருடம் அப்பொழுது திகவும் கிடையாது, திமுகவும் கிடையாது ஆனால் கோனார் ஒருவர் தமிழ்பேராசிரியர் ஆக முடிந்தது
சமூக நீதி எல்லாம் இருக்கத்தான் செய்தது, திறமை உள்ளவனை அது அரவணைத்தது, அக்காலம் அப்படித்தான் இருந்தது
ஆயர்குலம் என்பதற்காக கோனாருக்கு கல்வி மறுக்கபடவில்லை
ஏகபட்ட தமிழ் நூல்களை எழுதினார் கோனார், அவரின் பெரும் பணியினை தமிழுக்காக அவர் படும் பாட்டினை பார்த்து மனமுருகி அவரின் உரை நூல்களை மாணவருக்காக தானே வெளியிடும் பணியினை ஏற்றார் பழனியப்ப செட்டியார்
பின் கோனார் பப்ளிகேஷன் உருவானது, அதில் தான் மாணவர்களுக்காக கோனார் எழுதிய அத்தனை உரைகளும் தமிழ் உரைநடைகளும் வந்தன, எல்லோரும் படித்தார்கள்
ஆதீனங்களும், காஞ்சி மடமும் அவரை போட்டி போட்டு ஆதரித்தன, பட்டமும் பரிசும் அள்ளி கொடுத்தன
ஆரிய சமஸ்கிருதம் தமிழை அழிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை உண்மையில் அன்றைய ஆன்மீக மடங்கள் தமிழுக்கும் தமிழறிஞருக்கும் அப்படி உதவின
மறைக்கவே முடியாத வரலாறு அது
தமிழின் உரைநடைக்கும், இந்து மதத்திற்கும் பெரும் நூல்களை எழுதியவர் கோனார்
மார்கழி மாதமென்றால் அவர் திருப்பாவைக்கு விளக்கம் கொடுத்து பேசும்ப்பொழுது வானொலிமுன்னால் பெரும் கூட்டம் காத்திருந்தது
தமிழுக்கும், மாணவர்களுக்கும் , சமயத்திற்கும் பல அழியா அடையாளங்களை கொடுத்தவர் ஐயம்பெருமாள் கோனார்
தமிழை யாரின் புத்தகம் மூலம் பள்ளியில் படித்தோமோ அவருக்கு தமிழனாய் அஞ்சலி செலுத்தவேண்டியது கடமை
இன்று அவருக்கு பிறந்த நாள்
அந்த தமிழறிஞர் ஐயம்பெருமாள் கோனாருக்கு தமிழஞ்சலி
Stanley rajan
7 நிமிடங்கள் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள் மற்றும் 2 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக