ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

மெஸ்ஸி இங்கிலாந்து ஸ்பெயின் ஏகாதிபத்தியம் எதிர்ப்பு கேட்டலோனியா ஆதரவு அரசியல்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 22 ஜூன், 2018, பிற்பகல் 9:16
பெறுநர்: நான்

Senthilnathan Dhurairajan
Yes bro. Because of these... I too love him... Lionel Messi
தோழர் Krishna Muthukumarappan அவர்களின் பதிவு :
'Més que un club' என்பது பார்சிலோனாவின் slogan. அதாவது இது வெறும் கால்பந்து கிளப் மட்டுமல்ல, அதைத்தாண்டிய எங்கள் அடையாளம், எங்கள் பண்பாடு, எங்களது கேட்டலோனிய விடுதலைக் குறியீடு என்பதை குறிக்கும்.
அதையும் தாண்டி பார்சிலோனாவின் விளையாட்டும் 'its not winning at any cost, but the point is to play beautiful game' என்பதை தாரக மந்திரமாக கொண்டது.
அதாவது தோற்றுக்கூட போகலாம், ஆனால் காண்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஆட்டமாக அது இருக்க வேண்டும் என்று போதிக்கிறது பார்சாவின் 'la masia'.
அதனால்தான் AJAX இல் பிறந்திருந்தாலும் tiki taka வை சுவீகரித்துக்கொண்டது பார்சிலோனா. இதையெல்லாம் நீண்ட நெடிய கட்டுரையாக பின்பொருமுறை எழுதலாம்.
ஆனால், அதை தாண்டி மெஸ்ஸியின் மீதான ஈர்ப்பு விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. அது மெஸ்ஸியின் பொது மற்றும் சமூக சிந்தனையின் மீதான ஈர்ப்பினால் ஏற்பட்டது.
இங்கிலாந்து தனக்கு எந்த புவியியல் தொடர்பும் இல்லாத Falkland எனும் அர்ஜென்டினாவின் தீவை இன்றுவரை ஆக்கிரமித்து இருக்கிறது. 'முதலாளித்துவ மூலி' மார்கரெட் தாட்சரின் காலத்தில் அதற்காக யுத்தமே நடந்தேறியது (1982).
'அத்தகைய Falkland எங்களுக்கே சொந்தம், எங்கள் மண்ணை விட்டு இங்கிலாந்து நாய்களே வெளியேறுங்கள்' என்று ஐரோப்பிய மண்ணில் நடந்த போட்டியிலேயே, தனது அணியினரை போட்டிக்கு முன் பேனர் பிடிக்க வைத்தவன் கேப்டன் மெஸ்ஸி (Arg Vs Slovenia, 2014).
உலக ஊடகங்களை தங்கள் கைகளில் வைத்திருக்கும் ஆங்கில முதலாளிகள் அன்று முதல் இன்றுவரை மெஸ்ஸியின் வெற்றியை ஒரு வேண்டா வெறுப்பாகவே கொண்டாடி (?) வருவதை கால்பந்து அரசியலை அறிபவர்கள் உணர்வார்கள்.
அந்த அரசியலின் நீட்சி 'Ballon d'Or' வரை தொடர்கிறது. அதற்காகவெல்லாம் அச்சப்பட்டவனோ, அதையெல்லாம் கணக்கு பார்த்து நெளிவு சுழிவோடு நடந்து கொள்பவனோ அல்ல மெஸ்ஸி.
மெஸ்ஸியை 12 வயது முதல் தத்து வளர்த்து எடுத்ததெல்லாம் ஸ்பெயின்.
வரலாறு படைத்திட்ட மிகச்சிறந்த ஆட்டக்காரனாக மெஸ்ஸி பரிமாணம் எடுத்ததும், தனது தேசத்திற்காக விளையாட ஸ்பெயின் 'தொடரந்து இடைவிடாது' வேண்டிக் கொண்டது.
ஆனால், மெஸ்ஸி 'வாய்ப்பே இல்லை, என் தாய் பூமி அர்ஜென்டினா, அதற்கு மட்டுமே விளையாடுவேன்' என்று அர்ஜென்டினாவிற்கு களமிறங்கினான்.
(கேட்டலோனியா தனிநாடாக விடுதலை பெற்றிருந்தால் தான் கேட்டலோனியாவிற்கு விளையாடி இருப்பேன் என்று மெஸ்ஸி சொன்னதாக பார்சாவில் எப்போதும் ஒரு ரூமர் உண்டு).
இவ்வளவுக்கும் அர்ஜென்டினாவிலே
யே விளையாடி, அந்த தேசத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர்கள் 'Kun' எனும் Aguera வும், Higuain னும் தான்.
நம் ஊரில் பிறந்த எவனோ மெஸ்ஸி எனும் ஒருவன் ஐரோப்பாவை கலக்குகிறானாம் என்பது மட்டுமே மெஸ்ஸி குறித்தான அர்ஜென்டினியர்களின் அப்போதைய நினைவு.
இப்படியாக, ஸ்பெயினை புறக்கணித்து அர்ஜென்டினாவை தேர்ந்தெடுத்ததற்காகவும், பார்சிலோனாவின் அடையாளமாக இருப்பதற்காகவும் ஸ்பெயின் ஏகாதிபத்தியம் மெஸ்ஸிக்கு கொடுத்த வழக்கு தொல்லைகள் 'கீழ்த்தரமான' வரலாறு.
அத்தோடெல்லாம் நின்றுவிடவில்லை வீரன் மெஸ்ஸி.
எக்காலமும் பாஸ்பரஸ் அமில மழை பொழியும் அரபு உலகில் அரபு சிறுவர்களின் ஆதர்ச நாயகன் மெஸ்ஸி.
(அரபு உலகம் வஹாபி சவுதி பிளாக்காகவும், 'ஈரான்-கட்டார்-
துருக்கியாகவும்' சமீபத்தில் பிளவுபட்ட போது..
மெஸ்ஸியின் பழைய பார்சிலோனா ஜெர்சிக்களில் 'Qatar foundation' என்ற வார்த்தைகள் இருந்ததால், 'வஹாபி தீவிரவாத சவூதி அரேபியா' மெஸ்ஸியின் சட்டைகளை சிறுவர்களிடம் தடை செய்தது நினைவிருக்கலாம்)
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்ரேல் தனது தலைநகரை ஜெருசலேத்திற்கு மாற்றியது. சரியாக பத்து நாட்களுக்கு முன்பு (10.6.18) அர்ஜென்டினாவின் கடைசி பயிற்சி ஆட்டம் இஸ்ரேலுக்கு எதிராக ஜெருசலேத்தில் நடக்க இருந்தது.
பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கள் மெஸ்ஸியிடம் 'நீ விளையாடாதே ' என்று சமூக வலைத்தளங்கள் மூலம் நெஞ்சுருக வேண்டின. மெஸ்ஸி ஒட்டுமொத்த போட்டியையும் கேன்சல் செய்தான்.
'உலக ஈவில்' இஸ்ரேலை பகைத்துக்கொண்டு அர்ஜென்டினா கோப்பை வெல்ல வாய்ப்பே இல்லை என்று 'கான்ஸ்பிரசி தியரி'க்காரர்கள் கட்டுரை எழுதினார்கள்.
விடுதலைப்போராளிகளைப் போலவே மானுடத்தை நெஞ்சில் ஏந்தி, விளையாட்டை ஆயுதமாக தூக்கும் வீரர்களும் வரவு செலவு கணக்கு பார்ப்பதில்லை.
மெஸ்ஸி எனது இன்ஸபிரேஷன். 'கலையும், விளையாட்டும் மக்களுக்கே' என்பதை 'சே' பிறந்த அந்த மண் மெஸ்ஸியின் மரபணுவிலும் ஏற்றி இருக்கும்.
மெஸ்ஸியாக தன்னை பார்க்க விரும்பும் கோடிக்கணக்கான இளையோரில் நானும் ஒருவன். மெஸ்ஸியின் ஆளுயர வண்ண ப்ளோ-அப் என் அறையை அலங்கரிப்பது எனக்கு பெருமிதம்!!! I simply love him.
10 மணி நேரம் · பொது

உதைபந்து கால்பந்து நாயகன் இஸ்ரேல் தனிநாடு இனப்பற்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக